என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Friday 31 July 2015

40 வகை பழங்கள் காய்க்கும் அதிசய மரம்.

 ஒரே மரத்தில் நாற்பது வகை பழங்களை காய்க்கச் செய்து அமெரிக்க வேளாண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

Monday 27 July 2015

கடலில் உருவான குட்டி நாடு.







 நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா? கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை; இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும்.

Saturday 25 July 2015

11 கோடி ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த 4 கால் பாம்பு எலும்பு கூடு கண்டுபிடிப்பு.

 சுமார் 11.3 கோடி ஆண்டுகளுக்கு முன்னதான பாம்பின் படிமங்கள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் அப்போதைய பாம்புகளுக்கு 4 கால்கள் இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Thursday 23 July 2015

புத்தம் புதிய பூமி: கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்

 பூமி போன்று இன்னொரு கிரகம்  இருக்கிறதா என்று நீண்ட காலமாக நாசா ஆய்வு நடத்தி வந்த நிலையில் தற்போது இன்னொரு பூமியை கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்! ஏன்?

 இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால்
அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத
விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்க முடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால்
கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்!

சனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன?


சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் துகள்கள் மற்றும் பெரும் பாறைகளால் ஆன தொகுப்பு என்று சொல்லலாம். பெரும்பாலும் உறைந்த நீர் பனிக்கட்டிகள் மற்றும் பாறைத் துகள்கள் நடுவே இடைவெளிகள் இருக்கின்றன.



Wednesday 22 July 2015

நாக மாணிக்கம் என்பது உண்மையா? தொடரும் மர்மங்கள்.! (பகுதி02)


பாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை என்றால் வெளியே கக்கிவிட முடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக்குள்ளயே தனது வயிற்று தசைகளினால் முட்டை ஒட்டை உடைத்து அதிலுள்ள திரவப் பொருட்களை செரித்து விட்டு வெறும் முட்டை யோட்டை மட்டும் திருப்பி கக்கிவிடும். பாம்புக்குத் தெரியும் முட்டையில் பலவிதமான புரோட்டீன்கள் உள்ளன என்று. ஆகவே முட்டையின் மீது அதற்கு ஒரு விதமான ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.


Tuesday 21 July 2015

நாக மாணிக்கம் என்பது உண்மையா? தொடரும் மர்மங்கள்.! (பகுதி 01)

  நாகமாணிக்கம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பல கருத்துக்கள்
நிலவி வருகிறது. இது தொடர்பாக பொதுவாக இன்றுவரை பலராலும்
கூறப்படும் கருத்து நாகமாணிக்கம் என்பது நாக பாம்புகளால்
கக்கப்படுகின்ற ஒரு வகை கற்கள் என சொல்லப்படுகிறது. இருப்பினும்
இது தொடர்பாக எதிர்கருத்து ஒன்றும் அறிவியலாளர்களால்
முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் சரியான அறிவியல் ரீதியாக எதுவும் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை.

 நாகமாணிக்கம் என்பது தொடர்பாக உண்மைத்தன்மையை ஆராயும் பொருட்டு இது தொடர்பாக வெளியாகிய செய்தி தொகுப்புக்களுடனும் எதிர்மாறான கருத்துக்களுடனும் இந்த
செய்தி உங்களை சந்திக்கின்றது.


Sunday 19 July 2015

புளூட்டோவை அண்மித்து வரலாற்று சாதனை படைத்தது நாசாவின் நியூ ஹாரிசன்!

 அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் புளூட்டோ குள்ளக் கிரகம் அதன் சந்திரன்கள் மற்றும் கியூப்பெர் பெல்ட்டிலுள்ள பல விண்பொருட்களை ஆராய்வதற்காக 2006 ஆம் ஆண்டு பூமியில் இருந்து செலுத்தியிருந்த நியூஹாரிசன்ஸ் விண்கலம் சுமார் 9 வருடங்களாக Flyby முறை மூலம் 3 மில்லியன் மைல் தூரம் பயணித்து அண்மையில் புளூட்டோவை நெருங்கியதாகச் செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
மேலும் இவ்விண்கலம் ஏற்கனவே புளூட்டோ குறித்த சில புகைப்பங்களையும் அனுப்பி இருந்தது.

வியக்க வைக்கும் செய்திகள் -50



Saturday 18 July 2015

5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பிளாட்டினம் கொண்ட விண்கல் பூமியைக் கடக்கிறது.

ஞாயிறன்று லண்டன் நேரம் இரவு 11 மணியளவில் பெரிய விண்கல் ஒன்று பூமியைக் கடந்து செல்கிறது. இந்தியாவில் உள்ளவர்கள் திங்கள் அதிகாலை 4 மணியளவில் இண்டெர்நெட்டில் இதனை நேரலையாகக் காணலாம்.

Wednesday 8 July 2015

பால்வெளி அண்டத்தில் மிதந்து வரும் இரட்டை அதிசய சிவப்பு நட்சத்திரங்கள்.

பால்வெளி அண்டத்தில் மிதந்து வரும் இரட்டை சிவப்பு நட்சத்திரங்களை வானியலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு பிடித்துள்ளனர். அதை தீவிரமாக கண்காணித்து வந்த அவர்கள் கூறியது.



Friday 3 July 2015

சூரியன் பற்றி தெரிந்துகொள்வோமா?

 பால்வெளி மண்டலத்தில் 10000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. சூரியனும் ஒரு நட்சத்திரம்தான், நடுத்தர அளவுடைய நட்சத்திரம். என்ன ஒரே வித்தியாசம், அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. ஆனாலும் அதன் நிறம் வெள்ளைதான். மஞ்சள் குள்ள நட்சத்திரம் என்று இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.


சூரியனுக்குள் ஹைட்ரஜன் (73%), ஹீலியம் (25%) வாயுக்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. சூரியனுக்குள் ஏற்படும் அணு பிணைவுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் (ஒவ்வொரு விநாடியும் 400 கோடி டன்) பயன்படுகிறது. இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகிறது. இந்த வேதிவினையின் காரணமாகத்தான் அளவு கடந்த வெப்பம் வெளியாகிறது.

Thursday 2 July 2015

இன்டர்நெட்



இன்டர்நெட் (“internet”) என்னும் சொல், 1882 ஆம் ஆண்டிலேயே புழங்கப்பட்டது. “ஒன்றோடொன்று இணைந்தஇணைக்கப்பட்ட செயல்பாடுகள்” என்பதனைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. பின்ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1982ல்உலகளாவிய டி.சி.பி/ஐ.பி. நெட்வொர்க் இணைப்பினைக் குறிக்க இது பயன்பட்டது.


Wednesday 1 July 2015

மென்பொருள் Serial, Keygen இலகுவாக பெறுவது எப்படி ?


இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு தான். எப்படி திருடுவது என்பது  விலை உயந்த மென்பொருட்களை எப்படி இலவசமாக பயன்படுத்தலாம் .சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. 



  • முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com
  •     பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள்  பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr windows 8
  •     அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.

அவ்வளவு தான் இனி எல்லாமே இலவசம் நீங்க விரும்பியதை தரவிறக்கி  கொள்ளலாம் ...

கம்ப்யூட்டரில் உள்ள வைரசுக்கு ஏன் அந்த பெயர் வந்தது என தெரியுமா?



Frederick Cohen என்ற மாணவர், வைரஸ் (“virus,”) என்ற சொல்லை முதன் முதலில், கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராமிற்குப் பயன்படுத்தினார். இவர் கலிபோர்னியா பொறியியல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.

எல்லா பொருட்களும் செவ்வகமாக இருப்பதேன்?


ஏன் டிவி திரை, சினிமா திரை, போன்றவை செவ்வகமாகவே இருக்கின்றன?
சதுரமாகவோ செங்குத்தாகவோ இருந்தால் என்ன என்று எப்போதாவது நினைத்ததுண்டா?