அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் புளூட்டோ குள்ளக் கிரகம் அதன் சந்திரன்கள் மற்றும் கியூப்பெர் பெல்ட்டிலுள்ள பல விண்பொருட்களை ஆராய்வதற்காக 2006 ஆம் ஆண்டு பூமியில் இருந்து செலுத்தியிருந்த நியூஹாரிசன்ஸ் விண்கலம் சுமார் 9 வருடங்களாக Flyby முறை மூலம் 3 மில்லியன் மைல் தூரம் பயணித்து அண்மையில் புளூட்டோவை நெருங்கியதாகச் செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக புளூட்டோவைக் கடந்து பல படங்களை அனுப்பியுள்ளது.
நியூ ஹொரைசன்ஸ் எடுத்த படங்களை நாஸா விஞ்ஞானிகள் இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு வாக்கில் வெளியிட்டனர்.
மேலும் இவ்விண்கலம் ஏற்கனவே புளூட்டோ குறித்த சில புகைப்பங்களையும் அனுப்பி இருந்தது.
புளூட்டோவைச் சுற்றிலும் துகள் படலம் இருக்கலாம் என்று ஒரு சமயம் கருதப்பட்டது. நெல்மணி சைஸில் உள்ள துகள் தாக்கினாலும் விண்கலம் சேதமடைந்து விண்கலம் செயல்படாமல் போகலாம் என்ற அச்சம் இருந்தது. நல்ல வேளையாக அப்படி எதுவும் ஏற்படவில்லை.
புளூட்டோவை நியூ ஹொரைசன்ஸ் கடந்த போது விண்கலத்தின் வேகம் மணிக்கு சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்தது. எட்டு நிமிஷங்களில் அது புளூட்டோவைக் கடந்து சென்றது.
அப்போது புளூட்டோவுக்கும் விண்கலத்துக்கும் இடையே இருந்த தூரம் சுமார் 12,500 கிலோ மீட்டர்.
அப்போது புளூட்டோவுக்கும் விண்கலத்துக்கும் இடையே இருந்த தூரம் சுமார் 12,500 கிலோ மீட்டர்.
நியூ ஹொரைசன்ஸ் எடுத்த படங்களை நாஸா விஞ்ஞானிகள் இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு வாக்கில் வெளியிட்டனர்.
புளூட்டோவில் பனிக்கட்டியால் ஆன உயர்ந்த மலைகள் இருப்பதை அப்படங்கள் காட்டின.புளூட்டோவைச் சுற்றும் சாரோன் என்ற சந்திரனில் நீண்ட பள்ளத்தாக்கு இருப்பதையும் அவை காட்டின.
எனினும் சந்திரனில் இருப்பது போன்ற வட்டவடிவப் பள்ளங்க்ள் புளூட்டோவில் காணப்படவில்லை.
எனினும் சந்திரனில் இருப்பது போன்ற வட்டவடிவப் பள்ளங்க்ள் புளூட்டோவில் காணப்படவில்லை.
புளூட்டோ எடுத்த படங்கள்,சேகரித்த தகவல்கள் மொத்தமும் பூமிக்கு வந்து சேர 16 மாதங்கள் ஆகலாம் என்று கருதப்படுகிறது. தகவல்கள் மிக அதிகம். அத்துடன் நியூ ஹொரைசன்ஸ் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவற்றை அனுப்பும்.
புளூட்டோவுக்கான நியூஹாரிசன்ஸ் செயற்திட்டத்தில் வெற்றி பெற்ற விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் வான் பௌதிகவியல் மேதை ஸ்டீஃபன் ஹாவ்கிங் உட்படப் பலர் தமது வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.
புளூட்டோவை நெருங்கிய முதல் விண்கலமான நியூஹாரிசன்ஸில் அதனை 1930 ஆ ம் ஆண்டு கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளரான க்ளைடே டொம்போ இனது அஸ்தியின் ஓர் பகுதியும் அடைக்கப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் flyby முறையில் நியூஹாரிசன்ஸ் 9 வருடங்களாகப் பயணித்த போது அதன் அதிகபட்ச வேகம் ஓர் துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாவின் வேகத்தை விட 40 மடங்கு அதிகமாகவும் இருந்தது என்பதுடன் இச்சமயத்தில் ஏதேனும் சிறு விண் பொருட்கள் அல்லது தூசு துணிக்கைகள் அதில் மோதியிருந்தால் கூட அதன் செயற்திட்டம் தோல்வியில் முடிவடைந்திருக்கும் என்பதால் தமது முயற்சியுடன் அதிர்ஷ்டமும் சேர்ந்து இந்த மிசன் வெற்றியடைந்திருப்பது குறித்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளனர்.
No comments:
Post a Comment