என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts
Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts

Monday, 12 March 2018

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனேக இடங்களில் மழையோ ,
இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது. . . ' என மழைக்காலங்களில் தினமும் நம் கவனத்தைக் கவரும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?


Wednesday, 31 January 2018

ஜன. 31: ஒரு வானியல் அற்புதம்

வானியல் ஆர்வலர்களுக்கு உற்சாகம் தரும் வானியல் அற்புதம் ஜனவரி (இன்று) 31அன்று நிகழ இருக்கிறது. அன்றைக்கு முழுநிலவு நாள். ஆனால், இந்த முழுநிலவு மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. ஆங்கிலத்தில் Super Blue Blood Moon என்றழைக்கப்படுகிறது இந்த அரிய வானியல் நிகழ்வு.

Tuesday, 23 January 2018

விண்டோஸ் ஓ.எஸ். வளர்ந்த வரலாறு

1. விண்டோஸ் 1 - 1985, நவம்பர் 20. இன்டர்பேஸ் மேனேஜர் என முதலில், 1983லேயே பில்கேட்ஸ் அறிமுகப்படுத்திய இந்த சிஸ்டம், 1985ல் பயன்பாட்டிற்கு விண்டோஸ் என்ற பெயரில் அறிமுகமானது. அப்போதைய இதன் விலை 99 டாலர்.


Thursday, 4 January 2018

விண்வெளி உடைகள் ஏன் மாறுவதில்லை?

நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் பதித்த காலத்திலிருந்து விண்வெளி உடைகள் மிகப் பெரிய அளவில் மாறியது போலத் தெரியவில்லையே என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் விண்வெளி உடைகள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்தாலும், கடந்த 50 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளன. ஆரம்பக் கால விண்வெளி உடைகள் என்பவை விமானிகள் உடையின் இறுக்கமான வடிவமாகவே இருந்தன.



Monday, 25 December 2017

யார், யாருக்கு கொடுத்தாங்கனு தெரியாது... அட, நம் அரசியல்வாதிகளுக்கு கை கொடுக்குமே பிட் காயின்!

பண்டைய காலத்தில் பண்ட மாற்று முறையில் ஆரம்பித்த வர்த்தகம், பின்னர் நாணய வர்த்தகமாக மாறுதல் அடைந்து, நாணயமும் கரன்ஸி நோட்டுக்களாக ஆனபின், அதுவும் முன்னேற்றம் கொண்டு கிரிடிட், டெபிட் கார்ட், டிராவலர்ஸ் செக் மற்றும் SODEXO PASS என்று பல முகம் காட்டி, கடைசியாக 'e trading'-ல் வந்து நின்றது. இதன் அடுத்தக் கட்ட முன்னேற்றம்தான் இந்த பிட் காயின்.

Sunday, 24 December 2017

விமான விபத்தின் காரணங்களை அறிய உதவும் கருப்புப் பெட்டி.

கருப்புப் பெட்டி என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கருப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.



ஒரு விமான விபத்து நடந்தால் விசாரணைப்பிரிவினர் மிகவும் அவசரமாகத் தேடுவது இந்த கருப்புப் பெட்டியைத் தான். விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும் இந்த கருப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறிய மிகவும் பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.

Tuesday, 14 February 2017

2022 ஆம் ஆண்டு வானில் பெரு வெளிச்சத்துடன் தெரியவுள்ள சூப்பர் நோவா வெடிப்பு.

2022 ஆம் ஆண்டு பூமியில் வசிக்கும் நமது கண்களுக்குத் தெரியும் விதத்தில் வானில் பெரு வெளிச்சத்துடன் சூப்பர்நோவா வெடிப்பு தெரியவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Thursday, 9 February 2017

இதுவரை கண்டிராத உயிரினத்தின் புகைப்படம்: Flickr போட்டோ இணையத்தளத்தில் வெளிவந்தது.

மூத்த பூச்சியியலாளரான (Entomologist) 'வின்டெர்டோன்' என்பவர் போட்டோ இணையத்தளமான 'Flickr' இல் விசித்திர பூச்சிகளின் புகைப் படங்களை பார்வையிட்டுள்ளார்.



Monday, 6 February 2017

OC என்றால் என்ன....?

நம்மில் யாரேனும் 'எல்லாவற்றையும் இலவசமாக' அனுபவித்தால், அவரை, 'ஓசி'யிலேயே எல்லாவற்றையும் அனுபவிப்பவர் என்று நாம் சொல்வதுண்டு...
அது என்ன ஓசி..?


Monday, 9 January 2017

எவ்வளவு பெருசு! - ஒரே ஒரு பிரம்மாண்டம்!

பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று பலருக்கும் தெரியாவிட்டாலும் அது ரொம்பவும் பெரியது என்பது எல்லோருக்கும் தெரியும்.

கையை நீட்டிக்கொண்டு விரல் நுனியின் மேலே ஒரு மணல் துகளை வைத்துக்கொண்டு, அம்பெய்வது போல் ஒரு கண்ணை மூடிக்கொண்டு அந்த மணல் துகளையும் அதற்கு நேரெதிராக உள்ள வானப் பகுதியையும் பாருங்கள். வானப் பரப்பில் அந்த மணல் துகள் மறைக்கும் பகுதியில் பத்தாயிரம் விண்மீன் மண்டலங்கள் (galaxy)இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள். இப்படி ஒரு மணல் துகள் அளவு தெரியும் வானத்தில் பத்தாயிரம் விண்மீன் மண்டலங்கள் என்றால் வானம் முழுவதும் கணக்குப் போட்டுப் பாருங்கள்.


Friday, 6 January 2017

விண்வெளிப் பயணங்களைப் பாதிக்கும் விண்வெளிப் குப்பைகள் பூமியின் சுற்று வட்டப் பாதையில்..

நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் விண்வெளிப் பயணத் திட்டங்களை பாதிக்கக் கூடிய சுமார் நூறு மில்லியன் குப்பைகள் (Space Junk) நமது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் வலம் வருவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Wednesday, 28 December 2016

எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு பற்றித் தெரியுமா?

லண்டனைச் சேர்ந்த மார்ட்டின் எனப்படும் பல் மருத்துவரின் கதை மிக சுவாரஸ்யமானது. அவரது மனைவியின் உடல்தான் முதன்முதலில் அறிவியல் அடிப்படையில் எம்பாமிங் செய்யப்பட்டது. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான அவரது மனைவி, 1735-ல் இறந்துபோனார். அவரது உயிலில், ‘என்னைப் புதைக்காமல் இருக்கும்வரை... எனது சொத்துக்களை, எனது கணவர் அனுபவிக்க உரிமை உண்டு’ என எழுதி இருந்தார். மார்ட்டினுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது, மற்றொரு பல் மருத்துவ நண்பரான வில்லியம் ஹண்டர் அவருக்கு உதவ முன்வந்தார். அவருடைய உதவியால், தனது மனைவியின் உடலைப் பதப்படுத்தி தன் மருத்துவமனை வாசலில் காட்சிக்கு வைத்தார். அதனால் மனிதருக்கு கிடைத்தது டபுள் தமாக்கா! ஒரு பக்கம், இந்தக் காட்சியைப் பார்க்கவந்த மக்களால்... இவரது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அவரது மனைவியின் உடல், நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்டதால் அவரால் அத்தனை நாட்களும் அவரது சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க முடிந்தது.

வில்லியம் ஹண்டர்

Monday, 26 December 2016

எவ்வளவு பெருசு! - நீண்ட, நெடிய வீதி!

மனிதர்களின் ‘தொலைநோக்கி’ப் பார்வையால் உற்று நோக்கப்படக்கூடிய பிரபஞ்சத்தின் அளவு சுமார் 9,300 கோடி ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது. இது நமது ‘தொலைநோக்கி’ப் பார்வையின் எல்லைதான். அதைத் தாண்டியும் விரிந்திருக்கும் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை இன்னும் சரியாக அனுமானிக்க முடியவில்லை. இவ்வளவு பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நம் சூரியக் குடும்பம் இருக்கும் பால்வீதி மண்டலம் (Milky Way Galaxy) என்பது பூமியில் நாம் இருக்கும் தெருவைப் போன்றதுதான். இன்னும் சொல்லப்போனால் நம் தெருவின் சிறு சந்துதான்.

Tuesday, 29 November 2016

அணுவுக்குள் அண்டம்.

மிக நுண்ணிய பொருட்கள், விஷயங்களைப் பற்றிப் பேசும்போது நம் மொழியில் ‘அணுவளவு’, ‘இம்மியளவு’ போன்ற சொற்றொடர்கள் தவறாமல் இடம்பெறும். இப்படி சிறியவை, நுண்மை போன்றவை குறித்த உரையாடல்களில் அணு அடிப்படையாக இருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தின் பருப்பொருட்கள் அனைத்துக்கும் அணு அடிப்படையாக இருந்தாலும் இரண்டு கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க வேண்டும். சிறியது,பெரியது என்பதையெல்லாம் எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறோம்? அணுக்கள்தான் சிறியவையா?


Sunday, 27 November 2016

மீண்டும் உயிர்த்தெழும் மாமத யானைகள்

ஒரு காலத்தில் வாழ்ந்து அழிந்தொழிந்துபோன டைனசார் போன்ற விலங்குகளை மீண்டும் பூமியில் உயிர்த்தெழச் செய்து நடமாட வைப்பது சினிமாவில், நாவல்களில் வரும் கற்பனையாக மட்டுமே இருந்துவந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட கற்பனைகள் நிஜமாகப் போகின்றன. அதற்கான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் ஆரம்பித்துவிட்டார்கள்.


Monday, 31 October 2016

டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள்!!

டைட்டானிக் படம் பற்றி தான் அனைவரும் தெரியுமே தவிர நிஜ டைட்டானிக் கப்பல் பற்றி நம்மில் எத்தனை பேர் தெரியும்.


Thursday, 20 October 2016

உபயோகமான சில டிப்ஸ்கள்.

1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.


Tuesday, 18 October 2016

நமக்கு தெரிந்த தெரியாத உலகின் எட்டாவது கண்டம்.

உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். ஆனால் வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார்.


Sunday, 16 October 2016

விஞ்ஞானத்தின் வரலாறு.

நண்பர்களே இந்த பதிவு சற்று நீளம் தான் சிரமம் கருதாமல் வாசித்தால் நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானம் வளர ஆரம்பித்துவிட்டது. கைவினையின் வரலாறே விஞ்ஞானத்தின் வரலாறாக வளர்ச்சியடைந்தது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தீக்கற்களால் ஆக்கப்பட்ட கருவிகளே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும்.

Saturday, 8 October 2016

ரஷ்யாவின் ராயல் பெல் ! பற்றிய சுவாரசிய தகவல்கள்.

மணிகள் மனிதன் ஆரம்ப காலங்களில் கண்டுபிடித்த
தொண்மையான இசைக்கருவி. இந்தியாவின் பெரும்பாண்மையான மதங்களில் மணிகள் 
உபயோகித்தமைக்காண ஆதாரம் உண்டு.