என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Tuesday 29 November 2016

அணுவுக்குள் அண்டம்.

மிக நுண்ணிய பொருட்கள், விஷயங்களைப் பற்றிப் பேசும்போது நம் மொழியில் ‘அணுவளவு’, ‘இம்மியளவு’ போன்ற சொற்றொடர்கள் தவறாமல் இடம்பெறும். இப்படி சிறியவை, நுண்மை போன்றவை குறித்த உரையாடல்களில் அணு அடிப்படையாக இருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தின் பருப்பொருட்கள் அனைத்துக்கும் அணு அடிப்படையாக இருந்தாலும் இரண்டு கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க வேண்டும். சிறியது,பெரியது என்பதையெல்லாம் எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறோம்? அணுக்கள்தான் சிறியவையா?


Sunday 27 November 2016

மீண்டும் உயிர்த்தெழும் மாமத யானைகள்

ரு காலத்தில் வாழ்ந்து அழிந்தொழிந்துபோன டைனசார் போன்ற விலங்குகளை மீண்டும் பூமியில் உயிர்த்தெழச் செய்து நடமாட வைப்பது சினிமாவில், நாவல்களில் வரும் கற்பனையாக மட்டுமே இருந்துவந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட கற்பனைகள் நிஜமாகப் போகின்றன. அதற்கான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் ஆரம்பித்துவிட்டார்கள்.


Friday 18 November 2016

நமது பூமிக்கு அருகிலேயே மற்றொரு பூமி.

மது பிரபஞ்சத்தில் பால்வெளி அண்டத்தில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள நட்சத்திரம் ப்ரொக்ஸிமா செண்டூரி (Proxima Centauri) ஆகும். இவ்வருடத் தொடக்கத்தில் பூமியில் இருந்து 4 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 'ப்ரொக்ஸிமா பீ' (Proxima b) என்ற கோள் பூமிக்கு ஒப்பானது என்றும் இதில் நமக்கு நிகரான உயிரினங்கள் வாழும் சாத்தியம் உள்ளது என்றும் வானியலாளர்கள் தெரிவித்து இருந்தனர்.



Wednesday 9 November 2016

நம்மைச் சுற்றி: நமது பால்வீதியின் வரைபடம்!

 ரு நாட்டின் வரைபடத்தைக்கூடத் தெளிவாக வரைய முடியாத காலம் ஒன்று இருந்தது. இந்தியப் பிரதேசங்களுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்துக்கு முன்பு, நல்ல வரைபடம் கிடையாது. உலக வரைபடத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். எந்த நாட்டில் ‘உலக’ வரைபடம் தயாரிக்கப்பட்டதோ, அந்த நாடு பெரிதாகவும், மிகப் பெரிய கண்டங்கள்க கூட சிறு தீவுகளாகவும் அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருந்தன. இப்போது செயற்கைக்கோள் உதவியுடன் மிகத் துல்லியமான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.

பால்வீதியின் வரைபடம்

Thursday 3 November 2016

நமது சூரியமண்டலத்தில் உள்ள உண்மையான ஒன்பதாவது கோள்?

மது சூரியக் குடும்பத்தில் நெப்டியூனுக்கு அப்பால் பூமியை விடப் பத்து மடங்கு நிறை கொண்ட ஒரு புதிய கோள் இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகிறார்கள்.


நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பல வான்பொருட்களின் சுற்றுப் பாதையைக் கணினி மாதிரிகள் உருவகப்படுத்தும்போது, இப்படியொரு கோள் இருப்பது போல் தெரிந்தது என்று கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் கால்டெக் (Caltech) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை இந்தக் கோளை யாரும் தொலைநோக்கியில் பார்க்கவில்லை.