என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday 31 January 2018

ஜன. 31: ஒரு வானியல் அற்புதம்

வானியல் ஆர்வலர்களுக்கு உற்சாகம் தரும் வானியல் அற்புதம் ஜனவரி (இன்று) 31அன்று நிகழ இருக்கிறது. அன்றைக்கு முழுநிலவு நாள். ஆனால், இந்த முழுநிலவு மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. ஆங்கிலத்தில் Super Blue Blood Moon என்றழைக்கப்படுகிறது இந்த அரிய வானியல் நிகழ்வு.

Tuesday 30 January 2018

மாயமாகும் விமானங்களை பின்தொடரும் மர்மம்.

கோலாலம்பூர் - பெய்ஜிங் விமான விபத்தைப் பற்றி இப்போது எல்லோரும்
மறந்துவிட்டோம். விமானம் புறப்பட்டபோது வானிலை நன்றாகவே இருந்தது. கடல் மட்டத்துக்கு மேலே 35,000 அடி உயரத்தில் விமானம்
பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் நெருக்கடி ஏதும் இருந்ததற்கான
அடையாளம் தரைக் கட்டுப்பாட்டு கோபுரங்களுக்கு வரவில்லை.
விமானியும் ரேடியோ மூலம் அவசரச் செய்தி எதையும் சொல்லவில்லை.
விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்கெல்லாம் ரேடாரிலிருந்து விலகிவிட்டது. விமானத்தின் கட்டுமானத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தால் விமானம் அப்படியே இரு துண்டுகளாக உடைந்திருக்கும் என்பது சிலரின்
அனுமானம். விமானிகள் தவறு செய்திருக்கலாம்; பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றெல்லாம் சொல்வோரும் உண்டு.



Tuesday 23 January 2018

விண்டோஸ் ஓ.எஸ். வளர்ந்த வரலாறு

1. விண்டோஸ் 1 - 1985, நவம்பர் 20. இன்டர்பேஸ் மேனேஜர் என முதலில், 1983லேயே பில்கேட்ஸ் அறிமுகப்படுத்திய இந்த சிஸ்டம், 1985ல் பயன்பாட்டிற்கு விண்டோஸ் என்ற பெயரில் அறிமுகமானது. அப்போதைய இதன் விலை 99 டாலர்.


Friday 19 January 2018

பிரமிட்டில் உள்ள மர்மங்கள்!!

லகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு.  கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு. இந்தப் பிரமிடுகளை உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள், இந்தப் புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


Monday 8 January 2018

நமது பூமி எப்படித் தனது முடிவைச் சந்திக்கும்?: 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளைக் கூறும் வானியலாளர்கள்

பொதுவாக வானியலில் நமது பூமி எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கே பல நிகழ்வுகளைச் சான்றாகக் கூறி வானியலாளர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதை ஒட்டிய இன்னொரு முக்கிய கேள்வியாக விளங்கும் நமது பூமி எவ்வாறு முடிவுக்கு வரக் கூடும் என்பதற்கு 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளை (Cosmic catastrophes) வகைப் படுத்தியுள்ளனர் வானியலாளர்கள்.



Thursday 4 January 2018

விண்வெளி உடைகள் ஏன் மாறுவதில்லை?

நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் பதித்த காலத்திலிருந்து விண்வெளி உடைகள் மிகப் பெரிய அளவில் மாறியது போலத் தெரியவில்லையே என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் விண்வெளி உடைகள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்தாலும், கடந்த 50 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளன. ஆரம்பக் கால விண்வெளி உடைகள் என்பவை விமானிகள் உடையின் இறுக்கமான வடிவமாகவே இருந்தன.



Wednesday 3 January 2018

டிராப்பிஸ்ட்-1: ஏழு பூமிகளின் அணிவகுப்பு!

ளவில் பூமியைப் போன்று இருக்கும் ஏழு கோள்களின் அணிவகுப்பை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அக்குவாரியஸ் விண்மீன் கொத்தில், மங்கலாகக் காட்சியளிக்கும் ‘டிராப்பிஸ்ட்-1’ (Trappist-1)என்ற சிறிய விண்மீனைச் சுற்றிவருபவை இந்தக் கோள்கள். உயிர் வாழ்க்கைக்கு உகந்த தட்பவெப்ப நிலையையும் நீரையும் கொண்டிருப்பதற்கான சாத்தியங்களை இந்தக் கோள்கள் கொண்டிருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.