என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Tuesday, 21 July 2015

நாக மாணிக்கம் என்பது உண்மையா? தொடரும் மர்மங்கள்.! (பகுதி 01)

  நாகமாணிக்கம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பல கருத்துக்கள்
நிலவி வருகிறது. இது தொடர்பாக பொதுவாக இன்றுவரை பலராலும்
கூறப்படும் கருத்து நாகமாணிக்கம் என்பது நாக பாம்புகளால்
கக்கப்படுகின்ற ஒரு வகை கற்கள் என சொல்லப்படுகிறது. இருப்பினும்
இது தொடர்பாக எதிர்கருத்து ஒன்றும் அறிவியலாளர்களால்
முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் சரியான அறிவியல் ரீதியாக எதுவும் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை.

 நாகமாணிக்கம் என்பது தொடர்பாக உண்மைத்தன்மையை ஆராயும் பொருட்டு இது தொடர்பாக வெளியாகிய செய்தி தொகுப்புக்களுடனும் எதிர்மாறான கருத்துக்களுடனும் இந்த
செய்தி உங்களை சந்திக்கின்றது.


“நாக மாணிக்கம்” என்பது தொடர்பாக பொதுவாக ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளதும் பலராலும் நம்பம்பட்டு வருவதுமான கருத்து….!!!!

நாகரத்தினக்கல் என்பது நாகங்களில் எந்த ஒன்று அறுபது வருடங்களுக்கு மனிதர், மிருகம், கீரி என யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் கடைவாயில் உள்ள விஷமே இறுகிப்போய் நாகரத்தினமாக மாறிவிடும். இந்த நாகரத்தினத்தை வைத்து நாகப்பாம்புகளை விரட்டலாம். எப்படி வலம்புரிச்சங்கு அபூர்வமானதோ அதுபோலவே இதுவும் அபூர்வமானது. இம்மாதிரியான நாகங்கள் சுனைபக்கத்தில் பச்சைத்தவளைகள் நிறைய இருக்கும் இடங்களில் அடர்ந்த சீரகச்செடிகள் நிறைந்த புதர்களுக்குள் வாழும். இவை பச்சைத்தவளைகளை மட்டுமே உண்டு வாழும். ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக
மாணிக்கத்தை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.


இப்படிப்பட்ட நாகங்கள் இளமையை பாதுகாப்பதில் வலு கெட்டிகாரர்கள் சுமார் 110-150 ஆண்டுகள் வாழக்கூடியன. இதனால் பயன்படாத இதன் விஷமானது நாளடைவில் நாகரத்தினமாக உருவாகும். நாக ரத்தினம் இந்த பாம்புகளுக்கு உருவாகும் தருவாயில் இறக்கைகள் முளைத்து பறக்கும் வல்லமை கொண்டனவாக காணப்படும். இதுதவிர இவைக்கு வேறுபலன் கிடையாது கண்பார்வை மங்கி காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் அமாவாசை தினங்களில் காரிருள் காரணமாக இவை ஒளியின்றி இரை தேட வசதியின்றி இந்த நாக ரத்தினத்தை வெளியில் கக்கி அதன் ஒளியில் இரைதேடும். நாக மாணிக்கம் மிகுந்த பிரகாசமானது. இரை தேடி முடிந்த பின் மீண்டும் வந்து உள்ளெடுத்துக் கொள்ளும். இவை பல நூறு வருடங்களாக சேமித்த விஷத்தில் உருவாகியது. இதனால் மகா கொடிய விஷத்தன்மை வாய்தது. கையில் காயம் உள்ளவர்கள் இதனை தொட்டால் உடனே மரணம் நேரும். வாயில்
வைத்தாலோ புண்களில் பட்டாலோ உடனே மரணம் நேரும். பார்த்து கையாள்வது சிறந்தது. இந்த நாகரத்தினம் எப்போதும் தங்கம் அல்லது வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும். அல்லது பாலில் முழ்கிக்கிடக்க வேண்டும்.


 இந்த பூமியில் நமது விஞ்ஞான அறிவுக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளம்
இருக்கின்றன.அவற்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்.அவற்றை நம் பகுத்தறிவால் ஒருபோதும் உணர முடியாது. சிலவற்றை மனித உணர்வாலும் சிலவற்றைப் பாசத்தாலும் சிலவற்றை தியானத்தால்
மட்டுமே உணரமுடியும். இந்துதர்மத்தை அதன் படைப்புக்களாலேயே நக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாத்திகர் இந்து புராணங்களைவாசிக்க
ஆரம்பித்தார். முடிவு அவரே ஒரு அரிய இந்து படைப்பை உருவாக்கிவிட்டார். அந்த நாத்திகர் கவியரசு கண்ணதாசன் அவரது அழியாத காவியம் : அர்த்தமுள்ள இந்துமதம் பாகங்கள் 20க்கும் மேல்!! மேலே கூறப்பட்ட விசயம் இன்றுவரை பலராலும் “இதுதான் உண்மை” ஆக இருக்கலாம் என
நம்பப்பட்டு வருகின்ற ஒரு விசயம் தான் . எனினும் இது தொடர்பாக பல முரணான கருத்துக்களையும் முன்வைக்க முடியும். இதனை அறிவியல் ரீதியாக நோக்கினால் சில இடங்களில் முரண்பாடுகள் தோன்றுவது என்னமோ உண்மைதான்.

மேலும் பல தகவல்கள் அடுத்த பகுதியில்.

No comments:

Post a Comment