என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Friday, 31 July 2015

40 வகை பழங்கள் காய்க்கும் அதிசய மரம்.

 ஒரே மரத்தில் நாற்பது வகை பழங்களை காய்க்கச் செய்து அமெரிக்க வேளாண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.


 ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது நம்மூர் பழமொழி. ஆனால் இனிமேல் அப்படி கூற முடியாது. அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தின் பேராசிரியர் சாம் வான் அகேன் தான் அதற்கு காரணம். இவர் வளர்க்கும் மரத்தில் ஒரே கல்லில் பிளம்ஸ், செர்ரி என பல பழங்கள் விழும். இவருடைய ஆராய்ச்சி ஒன்றும் புதிதல்ல. என்ற போதும் கொஞ்சம் முயற்சியையும், உழைப்பையும் கோருவது.

 அமெரிக்காவின் சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன் என்பவர் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது பண்ணை தோட்டத்தில் விதவிதமான மரங்கள், தாவரங்களை வளர்த்து வருகிறார்.


 கடந்த 2008 ஆம் ஆண்டு நியூயோர்க் மாகாண விவசாய பரிசோதனை பண்ணையில் உருவாக்கிய இந்த மரங்கள்  தற்போது  பூவாகி, காயாகி பழங்களாக பழுத்து குலுங்குகிறது.


 அவற்றில் குறிப்பிட்ட ஒரு மரத்தில் பல்வேறு விதமான பழங்களை காய்க்கச் செய்ய கடந்த 7 ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்தார். இதற்காக அந்த மரத்தில் வெவ்வேறு விதமான மரங்களின் தண்டுகளை இணைத்து வளர்த்து வந்தார். அந்த மரத்தில் தற்போது செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ்,  என 40 வகையான பழங்கள் காய்த்து தொங்குகின்றன.


 நம்மூரில் மாம்பழங்களை சுவை மிக்கதாக மாற்றுவதற்கு ‘ஒட்டு மாங்கனி’ என்ற முறை பயன்படுத்தப்படுவதுண்டு. அதில் புளிப்பான மரத்தின் தண்டில், சுவையான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாகவும், அதிகமாகவும் காய்க்க செய்வர். அதே போன்றுதான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்துள்ளார்.


  பார்ப்பதற்கு மட்டுமின்றி  கண்ணை கவரும் வகையில் மிகவும் அழகிய தோற்றத்தை உடையதாகவும் உள்ளது. இதுகுறித்து சாம் வான் அகேன் கூறுகையில், என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக, அம்மரத்தை குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கிறது.கோடை காலத்தில் அம்மரம் பல்சுவை கொண்ட பழங்களை வழங்குகிறது. மேலும், இதுபோன்ற வகையில் தாவர ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வேன் என்று சாம் வான் அகேன் பெருமையுடன் கூறுகிறார்.


 மேலும் அவர் கூறுகையில் சிறுவனாக இருக்கும்போதே இந்த எண்ணம் தோன்றியதாகவும் தற்போது அதனை செயல் படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment