என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Tuesday 31 May 2016

காலப் பயணம் சாத்தியமா?

காலப் பயணம் குறித்த திரைப் படங்கள், அறிவியல் புனைகதைகள் போன்றவை மேலைநாடுகளிலிருந்து அதிகம் வெளிவந்தாலும் ‘காலப் பயணம்’ என்பதொன்றும் புதிய சிந்தனை கிடையாது. கீழை தேசங்களின் புராணங்களிலும் இதுகுறித்துத் தொன்மங்கள் காணப்படுகின்றன.


Tuesday 24 May 2016

இஸ்ரோவின் புதிய முயற்சி: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மறு பயன்பாட்டு விண்கலம்.

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மறு பயன்பாட்டு விண்கலம் சோதனை முயற்சியாக நேற்று (திங்கள்கிழமை) வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.


Wednesday 18 May 2016

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் விண்கலம் 23-ல் விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ சோதனை முயற்சி

  மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில், புதிய விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
புதிய விண்கலம் வரும் 23-ம் தேதி காலை விண்ணில் பாய்கிறது.

செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ராக்கெட், விண்ணில் 4 நிலைகளாக தனித்தனியாக கழன்று சென்று விடும். அதன்பின் செயற்கை கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படும். பல கோடி ரூபாய் செலவில்
தயாரிக்கப்படும் ராக்கெட் ஒரு முறை பயன்பாட்டுடன் முடிந்துவிடும்.

Friday 13 May 2016

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எது?

இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில்.


Sunday 8 May 2016

10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அரிய நிகழ்வு: சூரியனை புதன் கோள் நாளை 9-ந்தேதி கடக்கிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9ந்தேதி நடக்கிறது. இதனை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.

Sunday 1 May 2016

விரல் நுனியில் விண்மீன்

   வேகம்! மனித குலத்துக்கு எப்போதும் வேகத்தின் மீது தீராத வேட்கை இருந்து வந்திருக்கிறது. வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் மீது வேட்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் ஒரு மணி நேரத்துக்கு 2.6 மைல் தூரம் நடந்திருக்கிறார்கள். சமீப காலத்தில் நிலவுக்கு அருகே சென்று திரும்பி வந்திருக்கும் அப்போல்லோ-10 விண்கலத்தின் வேகம் கிட்டத்தட்ட மணிக்கு 26,000 மைல்கள். மனிதர்களைச் சுமந்து சென்ற வாகனம் ஒன்றின் உச்சபட்ச வேகம் இதுதான். ஆக, பத்தாயிரம் ஆண்டுகளில் மனிதர்களின் வேகம் பத்தாயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறது.

அப்போல்லோ-10