என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Friday 30 September 2016

உலகின் தீரா மர்மங்கள்... உலகில் பல இடங்களில் உள்ள பிரமிட் பற்றிய அறிய தகவல்கள்....

ர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன.

எகிப்தும் பிரமிடுகளும் எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே.

Monday 26 September 2016

மனிதன் தன் சுயநலத்திற்காக முற்றிலும் அழித்த அதிசயப் பறவை இனம்.

பிரிட்டனில் ஏறத்தாழ முழுவதுமாக நிறைவுபெற்ற டூடூ பறவையின் எலும்புக் கூடு, நவம்பர் மாதம் ஏலத்திற்கு வருகிறது.

ஒரு தனிப் பறவையின் எலும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டூடூ எலும்புக்கூடு உலகிலேயே ஒன்றுதான் உள்ளது; அது மொரிஷியஸில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒரு நூற்றாண்டில் விற்பனைக்கு வரும் முதல் டூடூ எலும்புக்கூடு இதுவாகும்; பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட எலும்புகளை கொண்டு இந்த எலும்புக்கூடு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

Tuesday 20 September 2016

முடியாததென்ற ஒன்று இல்லை! - ஊக்கம் தரும் ஓர் உண்மை வரலாறு!

பெயர் கரோலி டக்கா(க்)ஸ். Karoly Takacs.

புடாபெஸ்டில் பிறந்தவர். ஹங்கேரி ராணுவத்தில் சார்ஜெண்டாக பணியாற்றிவந்தார்.

Wednesday 14 September 2016

விண்வெளியில் விண்வெளி வீரர்களின் ஒரு நாள் எப்படி இருக்கும் தெரியுமா?

ர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு, நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான்) அவர்களுக்கான வேலை செட்யூல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும். தினம் ஒன்பது மணிநேரம், ஐந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம். ஆனால் பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.


Wednesday 7 September 2016

கொஞ்சம் வினோதம், கொஞ்சம் விசித்திரம்!... அதுவும் இந்தியாவில் வாங்க பாக்கலாம்!...

ந்தியாவில் விசித்திரம் அல்லது வினோதங்களுக்கு பஞ்சமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவே ஒரு விசித்திரமான நாடு தான்.

தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? தாஜ் மஹாலை கட்டியது யார்? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள் எத்தனையோ தொக்கி நிற்கின்றன. அந்த வகையில் காற்றில் மிதக்கும் கல், எலும்புக்கூடுகள் நிறைந்த ஏரி, பறவைகள் தற்கொலை செய்யும் இடம், வீடுகளுக்கு கதவுகளே இல்லாத கிராமம் என்று உங்களுக்காக அதிசயமான மர்மங்களும், மர்மமான அதிசயங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.