என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Showing posts with label மாமனிதர்கள். Show all posts
Showing posts with label மாமனிதர்கள். Show all posts

Sunday, 16 October 2016

விஞ்ஞானத்தின் வரலாறு.

ண்பர்களே இந்த பதிவு சற்று நீளம் தான் சிரமம் கருதாமல் வாசித்தால் நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானம் வளர ஆரம்பித்துவிட்டது. கைவினையின் வரலாறே விஞ்ஞானத்தின் வரலாறாக வளர்ச்சியடைந்தது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தீக்கற்களால் ஆக்கப்பட்ட கருவிகளே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும்.

Tuesday, 20 September 2016

முடியாததென்ற ஒன்று இல்லை! - ஊக்கம் தரும் ஓர் உண்மை வரலாறு!

பெயர் கரோலி டக்கா(க்)ஸ். Karoly Takacs.

புடாபெஸ்டில் பிறந்தவர். ஹங்கேரி ராணுவத்தில் சார்ஜெண்டாக பணியாற்றிவந்தார்.

Tuesday, 16 August 2016

FBIக்கே தண்ணி காட்டியவன் இப்போது ஒரு ஹீரோவாக மதிக்கப்படுகிறான்.

த்னாகர் ஒரு கொள்ளைக்காரன். அவன் நாரதரிடமே கொள்ளையடிக்க முற்பட்டபோது மாட்டிக் கொண்டான். ‘‘இந்தப் பாவத்தில் பங்கெடுக்க உன் குடும்பத்தினருக்கு சம்மதமா?’’ என்று கேட்டார் நாரதர். ரத்னாகர் குடும்பத்தில் கேட்க, அவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை. அன்று மனம் திருந்திய ரத்னாகர், நாரதர் சொல்லித் தந்த மந்திரத்தை ஜெபித்து தவம் இருந்தான். உடல் மறையும் அளவுக்கு எறும்பு கோபுரமாக புற்று கட்டியது. வரம் கிடைத்தது. அவர்தான் இராமாயணத்தை எழுதிய வால்மீகி. (சமஸ்கிருதத்தில் வால்மீகம் என்றால் எறும்புப் புற்று என்று ஒரு பொருள்)

இன்று அமெரிக்காவில் வாழும் ஒரு ரத்னாகர்தான் ஃபிராங்க் அபாக்னேல். ஒரு சமயம் அமெரிக்கா, சுவீடன், ஃபிரான்ஸ் என்று 12 நாடுகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தவன். அமெரிக்காவின் குற்றப் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ-க்குப் பெரிய சவாலாக இருந்த இவன், இப்போது அதே துறையால் ஒரு ஹீரோவாக மதிக்கப்படுபவன்.

Saturday, 9 April 2016

உன் தகுதியை நீயே உரக்கச் சொல் – ஜூலியஸ் சீஸர் Julius Ceasar.

  கி.மு. 75-ம் வருடம். சட்ட திட்டங்களில் நிபுணத்துவம் பெறுவதற்காக, கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இளைஞன் ஜூலியஸ் சீஸர். எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்யளயர்களால் பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபைர விடுதலை செய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத் தகவல் அனுப்பினார்கள். உடனே ஸீஸர் கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக் காசுகள்தானா?! என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’’ என்றார் தோரைணேயாடு. கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள். உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள். சக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி உன்னை நீயெ உயர்வாகப் பேசி கொள்கிறாய்! அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதி நூல்களில் சொல்லியிருப்பைதத்தான் நான் கைடப்பிடித்து வருகிறேன்’’ என்றார் சீஸர்.


Tuesday, 9 February 2016

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் :இன்னும் விலகாத மர்மம்

  இந்தியாவுக்கு வெளியே மூன்ற பேரைக் கொண்ட (INA) இந்திய தேசிய
ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி.



 1944-ல் இரண்டாம் உலகப்போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா –நாகசாகி அணுகுண்டு தாக்குதலதாக்குப்பிடிக்க முடியாமல்
பிரிட்டிஷ் ராணுவத்திடம்சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ.தலைமையகமான‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி.
அவரை அங்கிருந்து வெளியே அனுப்புகிறார் ஜப்பான் அதிபர்
டோஜோ. இதையடுத்து 18.08.1945 அதிகாலையில், தன்னுடைய
உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட
ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் சிங்கப்பூரை விட்டுப்
பறக்கிறார் நேதாஜி. எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் (இப்போது தாய்வான்) மஞ்சூரியா என்ற இடத்தில் அந்த விமானம் தரையிறக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இதுவரை புரியாத மர்மம்!

Monday, 8 February 2016

டயானா பற்றிய சில அறிய தகவல்கள் !!

    உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது. அதிலும் மறைந்து 19 வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’,என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Wednesday, 14 October 2015

ஜானகியின் காதல்

  கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர்.
அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இராமானுஜனை லண்டன் வருமாறு பேராசிரியர் ஹார்வி அழைத்திருந்தார். ஆனால் கடல்
கடந்து செல்லகூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அதை இராமானுஜன்
மறுத்திருந்தார். அதன்பின் இராமானுஜனை லண்டன் அழைத்துவரும் பொறுப்பை நெவில் எனும் கணித அறிஞரிடம் ஹார்வி ஒப்படைத்தார், அவர்
சென்னை வந்து இராமானுஜனை மிக கன்வின்ஸ் செய்து லண்டன் வர அழைத்தார்.