என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Thursday, 23 July 2015

சனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன?


சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் துகள்கள் மற்றும் பெரும் பாறைகளால் ஆன தொகுப்பு என்று சொல்லலாம். பெரும்பாலும் உறைந்த நீர் பனிக்கட்டிகள் மற்றும் பாறைத் துகள்கள் நடுவே இடைவெளிகள் இருக்கின்றன.



 
ஒவ்வொரு வளையங்களின் தடிமன் வெறும், 100 மீட்டர்கள் தான். ஒட்டுமொத்தமாக சனி கிரக வளையத்தின் குறுக்களவு 4 லட்சம் கி.மீ., அதாவது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள துாரம்! இந்த வளையங்கள் எப்படி உருவாயின என்பது பற்றி ஐந்து நுாற்றாண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகும் தெளிவு ஏற்படவில்லை. 
சனி கிரகத்தை சுற்றி ஏதோ ஒன்று இருப்பதை முதல் முதலில் தொலை நோக்கி மூலம் பார்த்து உலகிற்கு சொன்னவர், கலீலியோ கலிலி (1610). ஆனால், அது ஒரு வளையம் என, 1655ல் திட்டவட்டமாக கண்டுபிடித்தவர் கிறிஸ்டியான் ஹோய்ஜென்ஸ்.
காசினி விண்கலம், 2004 ஜூலையில் சனி கிரகத்தை நெருங்கி படங்களை எடுத்து அனுப்ப ஆரம்பித்தது. இன்னும் அது அங்கே படம் எடுத்து அனுப்பி வருகிறது. 
சனி கிரகத்தின் வளையங்கள், சனியின் துணைக் கோள்களை மிக விரிவாக ஆராய காசினி உதவி வருகிறது. ஆனால், வளையங்கள் எப்படி உருவாயின என்பதற்கு இன்னும் அறிவியல்பூர்வமான பதில் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment