என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Thursday 4 October 2018

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி.

விண்பாறை போன்ற ஒரு பொருள் வேகமாகச் சூரியக் குடும்பத்துக்குள் நுழைவதை, கடந்த அக்டோபர் 19, 2017 அன்று ஹவாய் பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் தொலைநோக்கி மூலம் கண்டார்கள். அதனுடைய நகர்வை வைத்துக் கணக்கிட்டபோது, அது விண்பாறையாகவோ வால்நட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தார்கள். அதிவேகத்தில் ஒரு கோடுபோல் சூரியப் பாதையில் நுழைந்த அந்தப் பொருள் வியப்பளித்தது.