என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday 24 February 2016

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை நடந்தே தங்கம் வென்றவரை தெரியுமா உங்களுக்கு?

 
   
இந்த சுவாரசிய சம்பவம், 1908ம் வருட ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்றது. Wyndham என்கின்ற இவர், முதலில் நன்றாகவே போட்டியில் ஓடிய போதும், இவருடன் ஓடிய ஒருவர் இவரை முழங்கையால் இடித்துத் தள்ளியதால், போட்டி மீளவும் வைக்கப்பட்டது. இவரை முழங்கையால் இடித்தவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். போட்டியில் இருந்த மற்றைய இருவரும் தாங்களாகவே விலகிக் கொண்டனர். இதனால் போட்டி எதுவுமின்றி களமிறங்கிய இவர், நடந்தே தங்கத்தை வென்றார்.


Tuesday 23 February 2016

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற புகைப்படம்...

  இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?



 கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

Sunday 21 February 2016

மனிதகுல வரலாற்றையே பதிவு செய்யும் குறுந்தகடு:360 டெராபைட்(360Terabytes)

   பிரிட்டன் விஞ்ஞானிகள் 360 டெராபைட் மின்னணுத் தகவல்களை உள்ளடக்கக்கூடியதும் 1380 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக்கூடியதுமான ஐந்து பரிமாண குறுந்தகடு (5D data storage) ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

Tuesday 16 February 2016

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!

 லகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?! அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….


Thursday 11 February 2016

அதிசயம் ஆனால் உண்மை!!!

   தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-



Tuesday 9 February 2016

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் :இன்னும் விலகாத மர்மம்

  இந்தியாவுக்கு வெளியே மூன்ற பேரைக் கொண்ட (INA) இந்திய தேசிய
ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி.



 1944-ல் இரண்டாம் உலகப்போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா –நாகசாகி அணுகுண்டு தாக்குதலதாக்குப்பிடிக்க முடியாமல்
பிரிட்டிஷ் ராணுவத்திடம்சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ.தலைமையகமான‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி.
அவரை அங்கிருந்து வெளியே அனுப்புகிறார் ஜப்பான் அதிபர்
டோஜோ. இதையடுத்து 18.08.1945 அதிகாலையில், தன்னுடைய
உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட
ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் சிங்கப்பூரை விட்டுப்
பறக்கிறார் நேதாஜி. எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் (இப்போது தாய்வான்) மஞ்சூரியா என்ற இடத்தில் அந்த விமானம் தரையிறக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இதுவரை புரியாத மர்மம்!

Monday 8 February 2016

டயானா பற்றிய சில அறிய தகவல்கள் !!

    உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது. அதிலும் மறைந்து 19 வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’,என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.