என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Saturday 25 July 2015

11 கோடி ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த 4 கால் பாம்பு எலும்பு கூடு கண்டுபிடிப்பு.

 சுமார் 11.3 கோடி ஆண்டுகளுக்கு முன்னதான பாம்பின் படிமங்கள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் அப்போதைய பாம்புகளுக்கு 4 கால்கள் இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.




 இதற்கு ஆதாரமாக பல படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த படிமங்கள் அனைத்தும் பாம்பின் மூதாதையர் உயிரினங்களுடையது என்று புதிய கண்டுபிடிப்பின் படி தெரிகிறது. அவை அனைத்திலும் மிகச் சிறிய 4 கால்கள் உள்ளன. இதற்கு ‘டெட்ரா போடாபிஸ்’ என பெயரிட்டுள்ளனர்.


 படிமங்களின் தன்மையை ஆராய்ந்து வரும் பிரேசிலின் பாத் பல்கலைக்கழக மருத்துவர் நிக் லாங்க்ரிச், பல்லி போன்ற ஊர்வனவைகளின் பரிணாம வளர்ச்சியே பாம்பாக மாறியுள்ளது உறுதியாவதாக தெரிவித்துள்ளனர்.



 சிறிய கால்களை கொண்டிருந்த இந்தப் பாம்புகள் கடலில் வாழ்ந்திருக்க சாத்தியமில்லை. மேலும், நடப்பதற்கும் கால்களை பயன்படுத்தவில்லை.
ஊர்ந்து செல்லும் வகை உயிரினங்களாகவே இருந்திருக்க வேண்டும். மற்ற உயிரினங்களை சாப்பிடுவதற்கு பக்க பலமாகவும், பொந்துகளை தோண்டவும் கால்களை பாம்புகளின் மூதாதையர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று லாங்க்ரிச் தெரிவித்துள்ளார்.



 விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பின் மூலம், பாம்பு இனம் கடல்வாழ் உயிரினங்களிலிருந்து உருவானவை அல்ல. நிலம் சார்ந்த உயிரினங்கள் என்ற முந்தைய ஆதாரங்களுக்கு இந்த கண்டுபிடிப்பு வலு சேர்ப்பதாக ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கும் அறிவியல் இதழ் குறிப்பிட்டுள்ளது.

தகவல்
ஹிந்து தமிழ்.

No comments:

Post a Comment