என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Showing posts with label மர்மம். Show all posts
Showing posts with label மர்மம். Show all posts

Thursday, 4 October 2018

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி.

விண்பாறை போன்ற ஒரு பொருள் வேகமாகச் சூரியக் குடும்பத்துக்குள் நுழைவதை, கடந்த அக்டோபர் 19, 2017 அன்று ஹவாய் பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் தொலைநோக்கி மூலம் கண்டார்கள். அதனுடைய நகர்வை வைத்துக் கணக்கிட்டபோது, அது விண்பாறையாகவோ வால்நட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தார்கள். அதிவேகத்தில் ஒரு கோடுபோல் சூரியப் பாதையில் நுழைந்த அந்தப் பொருள் வியப்பளித்தது.



Tuesday, 30 January 2018

மாயமாகும் விமானங்களை பின்தொடரும் மர்மம்.

கோலாலம்பூர் - பெய்ஜிங் விமான விபத்தைப் பற்றி இப்போது எல்லோரும்
மறந்துவிட்டோம். விமானம் புறப்பட்டபோது வானிலை நன்றாகவே இருந்தது. கடல் மட்டத்துக்கு மேலே 35,000 அடி உயரத்தில் விமானம்
பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் நெருக்கடி ஏதும் இருந்ததற்கான
அடையாளம் தரைக் கட்டுப்பாட்டு கோபுரங்களுக்கு வரவில்லை.
விமானியும் ரேடியோ மூலம் அவசரச் செய்தி எதையும் சொல்லவில்லை.
விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்கெல்லாம் ரேடாரிலிருந்து விலகிவிட்டது. விமானத்தின் கட்டுமானத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தால் விமானம் அப்படியே இரு துண்டுகளாக உடைந்திருக்கும் என்பது சிலரின்
அனுமானம். விமானிகள் தவறு செய்திருக்கலாம்; பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றெல்லாம் சொல்வோரும் உண்டு.



Friday, 19 January 2018

பிரமிட்டில் உள்ள மர்மங்கள்!!

லகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு.  கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு. இந்தப் பிரமிடுகளை உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள், இந்தப் புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


Wednesday, 27 December 2017

மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோன லிசா. பெண் ஒருவர் புன்னகைப்பது போன்ற இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக பரவியுள்ளன. இந்நிலையில், மோன லிசா ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான தகவலை டாவின்சி மறைத்துள்ளார் என்றும் அதற்கான சான்று மோன லிசா ஓவியத்தில் இருப்பதை கண்டறியலாம் என்றும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Wednesday, 26 October 2016

கற்கள் நடமாடும் மர்ம‌ தேசம் ! விஞ்ஞானிகளே அதிரும் மரண வெளி!

ற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’ Death Valley National Park Inyo County, California

அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா?

இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும்.


Friday, 21 October 2016

பெர்முடா மர்மம் விலகியது : கடல் மட்டத்தில் 170 கிலோமீட்டர் காற்றை உருவாக்கும் அருங்கோண மேகங்கள்.

பெர்முடா பகுதி அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா பகுதி உள்ள ஒரு மர்ம பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை பல கப்பல்களும் ஆகாய மார்க்கமாக பறக்கும் விமானங்களும் அப்பகுதியில் தடம் தெரியாமல் மறைந்துள்ளன. சுமார் 5 50 லட்சம் கிலோமீட்டர் சதுரடி பரப்பளவு கொண்டது ஆகும்.



Wednesday, 12 October 2016

மரண விளிம்பில் 9 அனுபவங்கள் ரேமண்ட் மூடி ஆராய்ச்சி முடிவு.

ழ்மனதின் அற்புத சக்திகள்

மரண விளிம்பில் 9 அனுபவங்கள்

ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.


Friday, 30 September 2016

உலகின் தீரா மர்மங்கள்... உலகில் பல இடங்களில் உள்ள பிரமிட் பற்றிய அறிய தகவல்கள்....

ர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன.

எகிப்தும் பிரமிடுகளும் எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே.

Wednesday, 7 September 2016

கொஞ்சம் வினோதம், கொஞ்சம் விசித்திரம்!... அதுவும் இந்தியாவில் வாங்க பாக்கலாம்!...

ந்தியாவில் விசித்திரம் அல்லது வினோதங்களுக்கு பஞ்சமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவே ஒரு விசித்திரமான நாடு தான்.

தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? தாஜ் மஹாலை கட்டியது யார்? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள் எத்தனையோ தொக்கி நிற்கின்றன. அந்த வகையில் காற்றில் மிதக்கும் கல், எலும்புக்கூடுகள் நிறைந்த ஏரி, பறவைகள் தற்கொலை செய்யும் இடம், வீடுகளுக்கு கதவுகளே இல்லாத கிராமம் என்று உங்களுக்காக அதிசயமான மர்மங்களும், மர்மமான அதிசயங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.


Saturday, 27 August 2016

உலகில் உள்ள சில மர்மம் நிறைந்த மனிதர்கள் பற்றித் தெரியுமா?..

பொதுவாக மனிதர்களுக்கு மர்மங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய ஆவல் இருக்கும். அதற்காக நாம் சில தேடல்கள் கூட மேற்கொள்வோம். இப்போது நாம் உலகில் உள்ள சில மர்மம் நிறைந்த மனிர்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

Monday, 22 August 2016

எகிப்து நாகரிகம் – மம்மியின் சாபம்

கிப்தின் நாகரிகம் பற்றிய அறிவுத் தேடல் எகிப்தியல் (Egyptology) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடங்கிவைத்தவர் ஹொவார்டு கார்ட்டர் (Howard Carter) என்கிற பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர். சிறு வயது முதலே, எகிப்துக்குப் போக வேண்டும் என்று அவருக்கு வெறித்தனமான ஆசை.

Egyptology

Friday, 5 August 2016

அழகியின் அழகற்ற மரணம்! மர்லின் மன்றோ பற்றி தெரியாத தகவல்கள்.....

1950 ஆம் ஆண்டு மர்லின் மன்றோ நடித்த கறுப்பு வெள்ளை திரைப்படத்தின் கால் மணி நேர காட்சியொன்று சமீபத்தில் 1.5 மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. மர்லின் முகம் தெரியாத ஏதோ நடிகர் ஒருவருடன் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சி அது. FBI-ன் பராமரிப்பில் இருந்த அந்த கால் மணி நேர படத்தை, அதிக விலைகொடுத்து வாங்கிய செல்வந்தர் தன்னை மீடியாவில் வெளிப்படுத்த விரும்பவில்லை. விற்பனை ரகசியமாக நடந்தது.

மர்லின் இறந்து போய் 54 ஆண்டுகளுக்கு பின்னும் அவள் பல்லாயிரம் மக்களின் நினைவில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறாள். அவளது பாதிப்பு உலகம் முழுவதும் நீக்கமற்று நிரம்பியிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் இந்த நிகழ்ச்சி.

Monday, 1 August 2016

விமானக் கடத்தலில் விசித்திரம்! அமெரிக்காவையே அலறவிட்டவன்...

எஃ ப்பி ஐ எனப்படும் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ( The Federal Bureau of Investigation - FBI) உலகின் முன்னணி துப்பறியும் நிறுவனங்களுள் ஒன்று. குற்றங்களைத் தடுக்கும், குற்றவாளிகளை விரட்டிப் பிடிக்கும் 'அமெரிக்கக் கழுகு'. ஆனால் இந்த பிரம்மாண்ட ஜாம்பவானின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய 'தனி ஒருவன்' இருக்கிறான். அதுவும் சும்மா இல்லை. 45 ஆண்டுகளாக. பெயர் - டி.பி. கூப்பர்.


Wednesday, 20 July 2016

"லெமூரியா கண்டமும் குமரிக்கண்டமும்" சில அரிய தகவல்கள்.

குமரி கண்டம் என்றவுடன் நம் தமிழ்நாடு தான் என்று நினைத்து விட வேண்டாம். இங்கிருந்து சரியாக 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய தமிழ்நாடு எவ்வளவு பெரியது தெரியுமா? அங்குதான் மனித குலத்தின் முதல் உயிர் தோன்றியது. தமிழ்நாட்டில் தொடங்கி ஆஸ்திரேலியா, அந்தமான், இலங்கை ,மாலதீவு போன்ற அனைத்து நாடுகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் இப்பொழுது இருக்கும் ஆப்ரிக்கா போல கட்சி அளித்த மாபெரும் தீபகற்ப நாடு நம் தமிழ்நாடு. அவை அனைத்தும் இயற்கை கடல் சீற்றத்தினால் அழிந்து போயிற்ரு.
நவீன உலகம் அதை இன்று லெமுரியா (lemuria Continent) கண்டம் என்று அழைக்கிறது.


Friday, 15 July 2016

நமக்கு முன்பே நம் முன்னோர்கள் பயன்படுத்திய அணு ஆயுதம் பிரம்மாஸ்திரமா?

ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு (சரியாக நாளையுடன் 71 ஆண்டுகள் ) நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் எனும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்படுகின்றது. இந்தச் சோதனை நிச்சயம் தோல்வியை தழுவும் என் சிலர் நினைத்தனர். இன்னும் சிலர் இந்த ஆயுதமானது நியூ மெக்சிகோ நகரையே அழிக்கப் போகின்றது என நினைத்தனர்.


Monday, 11 July 2016

பிள்ளைகள் பிணமாக தொங்கும் பேய் தீவு – உண்மைச் சம்பவம்

மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், ‘சோச்சி மில்கோ’ என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம்.

Wednesday, 6 July 2016

தீர்வில்லாத கடல் இரகசியங்கள்..!

கிட்டத்தட்ட பூமியின் 71% மேற்பரப்பை சமுத்திரங்கள் தான் ஆள்கின்றன. சாதரணமாகவே தன்னுள் பல வகையான மர்மங்களையும் விசித்திரங்களையும் கொண்டுள்ள கடலின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்நாள்வரையிலாக யாரும் சென்றதே இல்லை, செல்வதற்கு முயலவும் இல்லை. அப்படியாக, சமுத்திரம் மேன்மேலும் பற்பல இரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம்..!

Monday, 4 July 2016

இன்றும் தொடரும் மர்மம் : பேய் இருக்கா இல்லையா.!?

பேய் இருப்பதும், இல்லாததும் ஒருவரின் நினைப்பை பொறுத்தது ஆகும். அதிநவீன தொழில்நுட்ப யுகத்திலும் பேய் இருக்கின்றதா, இல்லையா என்ற கேள்விக்கு தெளிவான பதில் யாராலும் கூற முடியவில்லை. எந்தக் கருவியும் இதனை நிரூபிக்கவும் இல்லை.


இத்தகை சர்ச்சைக்குரிய கேள்விக்குப் பதில் உள்ளது என்றும் இதனை விளக்கும் சில தகவல்கள்.

Thursday, 30 June 2016

கென்யாவில் யாருமே வசிக்க முடியாத மர்மமான இடம்.

யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம்.

Monday, 20 June 2016

நடந்தது இதுதான், ஆனால் ஏன் நடந்தது என்பது எப்போதுமே மர்மம்தான்..!?

  நாம் வாழும் இந்த உலகம் வெறும் அழகானவைகளாலும், அதிசயங்களாலும் மட்டுமே சூழ்ந்திருக்கவில்லை, வெளிப்படாத பல விசித்திரங்களாலும், மர்மங்களாலும் சூழ்ந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்தவர் என்றால் இந்த தொகுப்பு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்...!

பெரும்பான்மையான உலக சமாச்சாரங்களை கண்டுபிடித்து விட்டதாக நாம் நினைக்கும் அதேசமயம், சில விசயங்களின் அடிப்படையை கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்பதும் நிதர்சனம் தான். அப்படியாக, நடந்தது இதுதான் ஆனால் அது ஏன் நடந்தது..? எப்படி நடந்தது..? - என்பதை பற்றியெல்லாம் புரிந்து கொள்ளவே முடியாத அறிவியல்-தொழில்நுட்ப மர்மங்களை பற்றிய தொகுப்பு தான் இது..!