என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday, 8 July 2015

பால்வெளி அண்டத்தில் மிதந்து வரும் இரட்டை அதிசய சிவப்பு நட்சத்திரங்கள்.

பால்வெளி அண்டத்தில் மிதந்து வரும் இரட்டை சிவப்பு நட்சத்திரங்களை வானியலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு பிடித்துள்ளனர். அதை தீவிரமாக கண்காணித்து வந்த அவர்கள் கூறியது.



குறிப்பாக நட்சத்திரங்களில் உள்ள எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்து முழுவதும் ஹீலியம் ஆனவுடன் அவை சுருங்கி சிவப்பு நட்சட்திரங்களாக (குள்ளன்களாக) மாறும். இந்நிலையில் இரு நட்சத்திரங்கள் தமக்கிடையேயான ஈர்ப்பு சக்தியின் காரணமாக அருகே வந்தால் அவை இரண்டும் மோதி கருத்தாக்கத்துக்கு உள்ளாகி ஒரு பெரிய நட்சத்திரமாக மாறுவது வழக்கம்.

ஆனால் இவ்வழக்கத்துக்கு மாறாக தற்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ள இரு சிவப்பு நட்சத்திரங்களும் தமக்கிடையே மோதிக் கொள்ளாது ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு பால்வெளி அண்டத்தில் மிதந்து வருவது வானியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அண்டவெளியில் நமது சூரியனைப் போல் எண்ணற்ற விண்மீன்கள் இருப்பது நாம் அறிந்த விசயம். இதில் குறித்த சிவப்புக் குள்ளன்கள் எனப்படும் ரெட் டிவார்ஃப் (Red dwarf) நட்சத்திரங்களை, தமது இறப்புக்கு அண்மையிலுள்ள சூரியன்கள் என்று கூறலாம். இவை சூரியனை விட 10 மடங்கு சிறியன என்பதுடன் 1000 மடங்கு சூரியனை விட ஒளி குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment