என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Thursday 30 June 2016

கென்யாவில் யாருமே வசிக்க முடியாத மர்மமான இடம்.

யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம்.

Wednesday 29 June 2016

அறிவியல் அறிவோம்; கரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்?

நிலத்துக்கு அடியில் பல மீட்டர் நீளம் சுரங்கங்கள், நிலவறைகளைக் கட்டி வாழும் கரையான்கள் மின்விசிறி, குளிர்சாதனம் இல்லாமல், தமது புற்றினை காற்றோட்டமாக வைத்துகொள்வது எப்படி? சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் பாதாள ரயில் திட்டம் உள்ளது. பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர்களுக்கு சுரங்கப்பாதையில் ரயில் போகும். பூமிக்கு அடியில் பல லட்சம் மக்கள் போய்வருவதால் அங்குள்ள காற்றில் ஆக்ஸிஜன் குறையும். கார்பன்டை ஆக்ஸ்சைடு சற்றே உயரும். நெரிசல் காரணமாக ஈரப்பதம் கூடி புழுக்கமும் துர்நாற்றமும் ஏற்படும். இதனை சமாளிக்கத்தான் மெட்ரோ ரயில்கள் குளிர்பதனம் செய்யப்படுகின்றன.

Monday 27 June 2016

நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் “6விஞ்ஞான பொய்கள்”!

6. வாத்தின் “குவாக்” சத்தம் எதிரொலிக்காது! பாடசாலைகளில் எதிரொலி பற்றி கற்பிக்கப்படும் போது வாத்து எழுப்பும் “குவாக்” ஒலி விதிவிலக்காக
எதிரொலிக்காது என கற்பிக்கப்பட்டது. எனினும் அது தவறு என தற்போதைய விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உண்மையில் “குவாக்” ஒலி எதிரொலிக்கிறது, எனினும் நமது செவிப்பறையும் (அதனுடன் இணைந்த மூளை நரம்புகளும்) அந்த ஒலியின் மீடிறனிற்கு (frequencies) எதிர்வினையை காட்டுவதில்லை! அதனாலேயே வாத்தின் “குவாக்” ஒலி நமது காதுகளுக்கு எதிரொலிக்காததுபோன்று தோன்றுகிறது.
“குவாக்” ஒலிக்கு எதிரொலிப்பு உண்டு என்பது, விசேடமாக தயாரிக்கப்பட்ட எதிரொலி அறை மூலம் நிரூபிக்கப்பட்டது.


Friday 24 June 2016

பூமியின் வரலாறு – பெருவெடிப்பு தொடக்கம் உயிர் தோற்றம் வரை சுருக்கம் பூமியின் வரலாறு.

நாம் வாழும் பூமி உருவானது சோலார் நெபுலா வெடிப்பிலிருந்து தான்.
இந்த சோலார் நெபுலா என்பது சூப்பர் நொவா என்னும் முதல்
பெரு வெடிப்பில் இருந்து வந்தது. சற்று விரிவாக பார்த்தால், சூப்பர்
நொவா தான் இந்த யூனிவர்ஸ் அல்லது பிரபஞ்சத்தின் தாய்.

Wednesday 22 June 2016

400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்: நாசா.

புவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான மூலக்கூறுகள் உருவானதற்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனுக்குள் நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பே காரணம் என நாசாவின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


Monday 20 June 2016

நடந்தது இதுதான், ஆனால் ஏன் நடந்தது என்பது எப்போதுமே மர்மம்தான்..!?

  நாம் வாழும் இந்த உலகம் வெறும் அழகானவைகளாலும், அதிசயங்களாலும் மட்டுமே சூழ்ந்திருக்கவில்லை, வெளிப்படாத பல விசித்திரங்களாலும், மர்மங்களாலும் சூழ்ந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்தவர் என்றால் இந்த தொகுப்பு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்...!

பெரும்பான்மையான உலக சமாச்சாரங்களை கண்டுபிடித்து விட்டதாக நாம் நினைக்கும் அதேசமயம், சில விசயங்களின் அடிப்படையை கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்பதும் நிதர்சனம் தான். அப்படியாக, நடந்தது இதுதான் ஆனால் அது ஏன் நடந்தது..? எப்படி நடந்தது..? - என்பதை பற்றியெல்லாம் புரிந்து கொள்ளவே முடியாத அறிவியல்-தொழில்நுட்ப மர்மங்களை பற்றிய தொகுப்பு தான் இது..!


Saturday 18 June 2016

கிமு காலத்திலேயே எதிர்காலத்தை கணித்த உலகின் பழைமை வாய்ந்த கம்ப்யூட்டர்.! கண்டுபிடிப்பு.

  நம் முன்னோர்கள் நாம் நினைத்ததை விட அதிநவீன தொழில்நுட்ப முறைகளைக் கண்டறிந்து அவற்றை பயன்படுத்தி வந்தது சமீபத்திய ஆய்வுகளிலும் நிரூபணமாகியுள்ளது. அதன் படி கிமு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மிகவும் பழைமை வாய்ந்த கம்ப்யூட்டர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் கம்ப்யூட்டர் எனப் போற்றப்படும் இந்த பழைய கம்ப்யூட்டர் சார்ந்த தகவல்கள் மற்றும் ஆதனினை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வியப்பூட்டும் தகவல்கள்


Friday 3 June 2016

புரட்டிப்போடலாமா செவ்வாய் கிரகத்தை?

சூரிய மண்டலத்துக்கு அப்பால், அண்டவெளியில் பூமி மாதிரியான கிரகம் எங்கேனும் உள்ளதா என்று விஞ்ஞானிகள் தேடி வருகிறார்கள்.

இந்தத் தேடல் ஒருபுறம் இருக்க, நமது அண்டை வீடு என்று சொல்லத்தக்க செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலைமைகளை மாற்றி, அதை மனிதர்கள் வாழத்தக்க கிரகமாக ஆக்கினால் என்ன? இது ஒன்றும் புதிய யோசனை அல்ல. இது குறித்து கடந்த காலத்தில் பல்வேறு நிபுணர்களும் பல யோசனைகளைக் கூறியுள்ளனர்.


Thursday 2 June 2016

ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.

  எகிப்திய மன்னன் துட்டன்காமன் கல்லறையில் மம்மியுடன் கண்டுப்பிடிக்கப்பட்ட கத்தி விண்கல்லில் செய்யப்பட்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.