என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Thursday 22 October 2015

நரக மீன் விடை தெரியாத மர்மங்கள்?


                                                             நரக மீன்

  2008ம் ஆண்டு நியூயார்க்கின் மான்டெக் நகர கடற்கரையில் ஒதுங்கிய ஒரு உயிரற்ற உடல் அக்காலக்கட்டத்தில் மீடியாக்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பலவித ஆராய்ச்சிகளின் முடிவில் இது ஒரு ராக்கூன் என்றும், இதுவொரு நாய் என்றும், ஆடு என்றும், கடல் ஆமை என்றும் விதவிதமான முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும்கூட அது எல்லாவற்றையும் பல், உடல் அமைப்பு, கால்களின் நீளம் என்று ஒவ்வொரு காரணிகளின் அடிப்படையில் மறுத்த ஆதாரப்பூர்வ அறிவியல் கூற்றுகளும் நிறைந்திருக்கிறது.



   மொத்தத்தில் கரை ஒதுங்கிய இந்த உயிரற்ற உடல் Montauk Monster என்ற பெயரில் ஒரு ஆச்சர்யமான விவாதப்பொருளாகவே மனிதர்களிடையே பரவியிருக்கிறது.


   நரக மீன் என்று அழைக்கப்படும் இந்தப்படம்கூட கரை ஒதுங்கிய உயிரினமாகவே பல தளங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இது கரை ஒதுங்கிய இடம் மற்றும் மேலதிக தகவல்கள் எங்கும் இல்லை. இருந்தாலும்கூட இந்தப்படம் உணர்த்தும் அமானுஷ்யம் மனிதர்களுக்கு எப்போதும் சுவாரஷ்யம்தான். மேலும் இந்த Montauk Monster தகவல்களுக்கு இங்கே சுட்டவும்.

Thursday 15 October 2015

லிப்ஸ்டிக் உருவான வரலாறு.

உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் தான்.



   மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை 
கண்டுபிடித்தவர்களும், உலகிலேயே முதன் முதலில் தயாரித்து உபயோகித்தவர்களும் இந்தியர்கள் தான் பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து பயன்படுத்தியவர்கள்.

Wednesday 14 October 2015

ஜானகியின் காதல்

  கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர்.
அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இராமானுஜனை லண்டன் வருமாறு பேராசிரியர் ஹார்வி அழைத்திருந்தார். ஆனால் கடல்
கடந்து செல்லகூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அதை இராமானுஜன்
மறுத்திருந்தார். அதன்பின் இராமானுஜனை லண்டன் அழைத்துவரும் பொறுப்பை நெவில் எனும் கணித அறிஞரிடம் ஹார்வி ஒப்படைத்தார், அவர்
சென்னை வந்து இராமானுஜனை மிக கன்வின்ஸ் செய்து லண்டன் வர அழைத்தார்.


Tuesday 13 October 2015