என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Showing posts with label விண்வெளி. Show all posts
Showing posts with label விண்வெளி. Show all posts

Thursday, 4 October 2018

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி.

விண்பாறை போன்ற ஒரு பொருள் வேகமாகச் சூரியக் குடும்பத்துக்குள் நுழைவதை, கடந்த அக்டோபர் 19, 2017 அன்று ஹவாய் பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் தொலைநோக்கி மூலம் கண்டார்கள். அதனுடைய நகர்வை வைத்துக் கணக்கிட்டபோது, அது விண்பாறையாகவோ வால்நட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தார்கள். அதிவேகத்தில் ஒரு கோடுபோல் சூரியப் பாதையில் நுழைந்த அந்தப் பொருள் வியப்பளித்தது.



Wednesday, 31 January 2018

ஜன. 31: ஒரு வானியல் அற்புதம்

வானியல் ஆர்வலர்களுக்கு உற்சாகம் தரும் வானியல் அற்புதம் ஜனவரி (இன்று) 31அன்று நிகழ இருக்கிறது. அன்றைக்கு முழுநிலவு நாள். ஆனால், இந்த முழுநிலவு மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. ஆங்கிலத்தில் Super Blue Blood Moon என்றழைக்கப்படுகிறது இந்த அரிய வானியல் நிகழ்வு.

Monday, 8 January 2018

நமது பூமி எப்படித் தனது முடிவைச் சந்திக்கும்?: 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளைக் கூறும் வானியலாளர்கள்

பொதுவாக வானியலில் நமது பூமி எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கே பல நிகழ்வுகளைச் சான்றாகக் கூறி வானியலாளர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதை ஒட்டிய இன்னொரு முக்கிய கேள்வியாக விளங்கும் நமது பூமி எவ்வாறு முடிவுக்கு வரக் கூடும் என்பதற்கு 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளை (Cosmic catastrophes) வகைப் படுத்தியுள்ளனர் வானியலாளர்கள்.



Thursday, 4 January 2018

விண்வெளி உடைகள் ஏன் மாறுவதில்லை?

நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் பதித்த காலத்திலிருந்து விண்வெளி உடைகள் மிகப் பெரிய அளவில் மாறியது போலத் தெரியவில்லையே என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் விண்வெளி உடைகள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்தாலும், கடந்த 50 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளன. ஆரம்பக் கால விண்வெளி உடைகள் என்பவை விமானிகள் உடையின் இறுக்கமான வடிவமாகவே இருந்தன.



Wednesday, 3 January 2018

டிராப்பிஸ்ட்-1: ஏழு பூமிகளின் அணிவகுப்பு!

ளவில் பூமியைப் போன்று இருக்கும் ஏழு கோள்களின் அணிவகுப்பை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அக்குவாரியஸ் விண்மீன் கொத்தில், மங்கலாகக் காட்சியளிக்கும் ‘டிராப்பிஸ்ட்-1’ (Trappist-1)என்ற சிறிய விண்மீனைச் சுற்றிவருபவை இந்தக் கோள்கள். உயிர் வாழ்க்கைக்கு உகந்த தட்பவெப்ப நிலையையும் நீரையும் கொண்டிருப்பதற்கான சாத்தியங்களை இந்தக் கோள்கள் கொண்டிருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.



Sunday, 31 December 2017

நிலவின் தோற்றம் குறித்த மர்மம் விலகியது.

மது பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் எவ்வாறு தோன்றியது மற்றும் அதில் பூமி அதைச் சுற்றி வரும் துணைக் கோளான நிலவு எவ்வாறு தோன்றியது என்பது தொடர்பில் பல கருதுகோள்கள் நிலவி வருகின்றன.




Friday, 29 December 2017

இன்னும் 5 பில்லியன் வருடங்களில் நமது சூரியன் தனது அழிவை எப்படி சந்திக்கும்? : வானியலாளர்கள் விளக்கம்

ன்னும் 5 பில்லியன் வருடங்களில் நமது சூரியன் சிவப்பு இராட்சதன் (Red giant star) ஆக உருப்பெறுத்து அதன் பின்னர் உருச்சிறுத்து அழிவை நோக்கிச் செல்லும் என்பது தான் சூரியனின் முடிவு குறித்து இதுவரை வானியலாளர்கள் அறிந்து வைத்துள்ள விளக்கம். தற்போது இதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.



Tuesday, 14 February 2017

2022 ஆம் ஆண்டு வானில் பெரு வெளிச்சத்துடன் தெரியவுள்ள சூப்பர் நோவா வெடிப்பு.

2022 ஆம் ஆண்டு பூமியில் வசிக்கும் நமது கண்களுக்குத் தெரியும் விதத்தில் வானில் பெரு வெளிச்சத்துடன் சூப்பர்நோவா வெடிப்பு தெரியவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Monday, 9 January 2017

எவ்வளவு பெருசு! - ஒரே ஒரு பிரம்மாண்டம்!

பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று பலருக்கும் தெரியாவிட்டாலும் அது ரொம்பவும் பெரியது என்பது எல்லோருக்கும் தெரியும்.

கையை நீட்டிக்கொண்டு விரல் நுனியின் மேலே ஒரு மணல் துகளை வைத்துக்கொண்டு, அம்பெய்வது போல் ஒரு கண்ணை மூடிக்கொண்டு அந்த மணல் துகளையும் அதற்கு நேரெதிராக உள்ள வானப் பகுதியையும் பாருங்கள். வானப் பரப்பில் அந்த மணல் துகள் மறைக்கும் பகுதியில் பத்தாயிரம் விண்மீன் மண்டலங்கள் (galaxy)இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள். இப்படி ஒரு மணல் துகள் அளவு தெரியும் வானத்தில் பத்தாயிரம் விண்மீன் மண்டலங்கள் என்றால் வானம் முழுவதும் கணக்குப் போட்டுப் பாருங்கள்.


Friday, 6 January 2017

விண்வெளிப் பயணங்களைப் பாதிக்கும் விண்வெளிப் குப்பைகள் பூமியின் சுற்று வட்டப் பாதையில்..

நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் விண்வெளிப் பயணத் திட்டங்களை பாதிக்கக் கூடிய சுமார் நூறு மில்லியன் குப்பைகள் (Space Junk) நமது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் வலம் வருவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Monday, 2 January 2017

எவ்வளவு பெருசு! - நம் குடும்பம் ரொம்பப் பெரியது...

ந்தப் பிரபஞ்சத்தையே ஒரு வரைபடத்தில் கொண்டுவருவதாக ஒரு கற்பனை செய்துகொள்வோம். அந்த வரைபடத்தில் நம் சூரியக் குடும்பம் ஒரு புள்ளி அளவு கூட இருக்காது. ஆனால், நம் பூமியின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும் சூரியக் குடும்பம் எவ்வளவு பெரியது என்று.


Monday, 26 December 2016

எவ்வளவு பெருசு! - நீண்ட, நெடிய வீதி!

னிதர்களின் ‘தொலைநோக்கி’ப் பார்வையால் உற்று நோக்கப்படக்கூடிய பிரபஞ்சத்தின் அளவு சுமார் 9,300 கோடி ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது. இது நமது ‘தொலைநோக்கி’ப் பார்வையின் எல்லைதான். அதைத் தாண்டியும் விரிந்திருக்கும் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை இன்னும் சரியாக அனுமானிக்க முடியவில்லை. இவ்வளவு பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நம் சூரியக் குடும்பம் இருக்கும் பால்வீதி மண்டலம் (Milky Way Galaxy) என்பது பூமியில் நாம் இருக்கும் தெருவைப் போன்றதுதான். இன்னும் சொல்லப்போனால் நம் தெருவின் சிறு சந்துதான்.

Friday, 18 November 2016

நமது பூமிக்கு அருகிலேயே மற்றொரு பூமி.

மது பிரபஞ்சத்தில் பால்வெளி அண்டத்தில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள நட்சத்திரம் ப்ரொக்ஸிமா செண்டூரி (Proxima Centauri) ஆகும். இவ்வருடத் தொடக்கத்தில் பூமியில் இருந்து 4 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 'ப்ரொக்ஸிமா பீ' (Proxima b) என்ற கோள் பூமிக்கு ஒப்பானது என்றும் இதில் நமக்கு நிகரான உயிரினங்கள் வாழும் சாத்தியம் உள்ளது என்றும் வானியலாளர்கள் தெரிவித்து இருந்தனர்.



Wednesday, 9 November 2016

நம்மைச் சுற்றி: நமது பால்வீதியின் வரைபடம்!

 ரு நாட்டின் வரைபடத்தைக்கூடத் தெளிவாக வரைய முடியாத காலம் ஒன்று இருந்தது. இந்தியப் பிரதேசங்களுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்துக்கு முன்பு, நல்ல வரைபடம் கிடையாது. உலக வரைபடத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். எந்த நாட்டில் ‘உலக’ வரைபடம் தயாரிக்கப்பட்டதோ, அந்த நாடு பெரிதாகவும், மிகப் பெரிய கண்டங்கள்க கூட சிறு தீவுகளாகவும் அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருந்தன. இப்போது செயற்கைக்கோள் உதவியுடன் மிகத் துல்லியமான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.

பால்வீதியின் வரைபடம்

Thursday, 3 November 2016

நமது சூரியமண்டலத்தில் உள்ள உண்மையான ஒன்பதாவது கோள்?

மது சூரியக் குடும்பத்தில் நெப்டியூனுக்கு அப்பால் பூமியை விடப் பத்து மடங்கு நிறை கொண்ட ஒரு புதிய கோள் இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகிறார்கள்.


நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பல வான்பொருட்களின் சுற்றுப் பாதையைக் கணினி மாதிரிகள் உருவகப்படுத்தும்போது, இப்படியொரு கோள் இருப்பது போல் தெரிந்தது என்று கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் கால்டெக் (Caltech) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை இந்தக் கோளை யாரும் தொலைநோக்கியில் பார்க்கவில்லை.

Wednesday, 5 October 2016

Black Hole - ஒளியும் தப்பாது !

ந்த அண்ட சராசரத்தில் இருக்கும் மிக ஆச்சரியத்தக்க விசயங்களில் ஒன்று 'Black Hole'. இந்த அண்டமானது 13.8 பில்லியன்
ஆண்டுகளுக்கு முன் பெரு வெடிப்பிலிருந்து (Big Bang theory) உண்டானதாக கருதப்படுகிறது.

Wednesday, 14 September 2016

விண்வெளியில் விண்வெளி வீரர்களின் ஒரு நாள் எப்படி இருக்கும் தெரியுமா?

ர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு, நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான்) அவர்களுக்கான வேலை செட்யூல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும். தினம் ஒன்பது மணிநேரம், ஐந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம். ஆனால் பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.


Thursday, 25 August 2016

கேலக்ஸி எவலூஷன் எக்ஸ்ஃப்ளோரர்.

கேலக்ஸி எவலூஷன் எக்ஸ்ஃப்ளோரர் என்பது ஒரு பெரிய புற ஊதாக்கதிர்
தொலைநோக்கி. நியூமெக்ஸிக்கோவில் நிறுவப்பட்டுள்ளது. இதன் முக்கிய
வேலை கேலக்ஸிகளை ஊன்றி கவனித்து படம் எடுப்பது.


Thursday, 28 July 2016

சூரிய நடுக்கம்....

பூமியின் மேலோட்டுக்குக் கீழே உருகிய குழம்புநிலையில் உள்ள
நிலம் எந்நேரமும் புயலாக சுழன்று கொண்டிருப்பதால் அதன்
தாக்கம் மேலே நில நடுக்கமாக வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட இதே போல சூரியனின் உள்ளும் நிகழ்கிறது.


Wednesday, 13 July 2016

கருந்துளைகள் இன்னொரு பிரபஞ்சத்துக்கான வாசல்!:40 வருடமாக நீடிக்கும் சர்ச்சை தொடர்பில் ஹாவ்கிங்!

மது பிரபஞ்சத்திலுள்ள பல கூறுகள் இன்றும் பூரணமாக விளக்கப்படுத்தப்படாது மனிதனை வியப்பில் ஆழ்த்துபவையாகவே இருந்து வருகின்றன.