இந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மழைக்காடுகளில் Rafflesia என்ற விசித்திரத் தாவரம் உள்ளது. இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது. ஆனால், ஒரே ஒரு பூ மட்டும் உண்டு. அதுதான் உலகின் மிகப்பெரிய மலர்!
இப்பூவின் குறுக்களவு 3 அடியையும் தாண்டும். முழு வளர்ச்சியடைந்த இம்மலரின் எடை 7 கிலோ வரை இருக்கும். 5 கிலோவுக்கும் அதிக தேனை அடக்கிக்கொள்ள முடியும். இம்மலருக்கு இன்னொரு விசித்திரமும் உண்டு. இதன் விதைகள் யானைகள் மூலமே பரப்பப்படுகின்றன. மற்ற செடிகளைப் பற்றியோ, மண்ணுக்கு வெளியேவோ இதன் வேர்கள் நிலை கொள்கின்றன.
மற்ற தாவரங்களின் ஊட்டச்சத்தையும் உறிஞ்சுகின்றன. இத்தாவரம் இறந்த பிறகு, ஒட்டும் தன்மை கொண்ட விதைகளை அளிக்கும். யானையோ, காண்டாமிருகமோ இதை மிதிக்கும்போது, காலில் ஒட்டிக்கொள்ளும் விதைகள் இடம்பெயர்கின்றன.
ஒட்டியுள்ள வேண்டாபொருளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் வேறொரு தாவரத்துக்கு அருகில் முளைவிடத் தொடங்குகின்றன. அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்!
No comments:
Post a Comment