என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Monday, 11 May 2015

கூகுள் தேடல்கள் தொகுப்பு

  இணையத்தில், கூகுள் தேடல் வழியாக நாம் எதையாவது தேடி, தகவல்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். சில வேளைகளில், ”இருபது நாட்களுக்கு முன்பு இதனைத் தேடினேன்; ஆனால், தற்போது எப்படி தேடி, என்ன பார்த்தேன் என நினைவில் இல்லை” என்று சில நேரங்களில் நினைவைக் கசக்கிப் பார்க்கிறோம். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. இது போன்ற தருணங்களில் உதவிட, நம் தேடல்கள் அனைத்தையும் பட்டியலாக, கூகுள் நமக்குத் தருகிறது. 






இந்த தொகுப்பினைப் பெற முதலில் https://history.google.com/ என்ற தளம் செல்லவும். நீங்கள் ஜிமெயில் பார்த்துக் கொண்டிருந்தாலும், மீண்டும் பாஸ்வேர்ட் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். சரியாகக் கொடுத்த பின்னர், கிடைக்கும் தளத்தில், வலது மேல் மூலையில் இருக்கும் கியர் ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். அங்கு காட்டப்படும் கீழ்விரி மெனுவில், "Download" என்பதில் கிளிக் செய்தால், உங்களின் தேடல்கள் அனைத்தும், அவை சேர்த்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டு, உங்களுக்குத் தரப்படத் தயாராய் இருக்கும். இருப்பினும், உங்களுக்கு எச்சரிக்கை ஒன்று தரப்படும். 


உங்கள் தேடல்களில், மற்றவர்கள் அறியக் கூடாத தேடல்கள் சில இருக்கலாம். மற்றவர்களுக்குக் காட்டப்படாமல் இருக்க வேண்டிய தளங்கள் இருக்கலாம். எனவே, எப்படி எச்சரிக்கையாக, இதனைக் காப்பாற்றி வைக்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டு, மொத்த தேடல் தொகுப்பினையும் பெறுவதற்கான லிங்க் உங்களுக்கு ஜிமெயிலில் அனுப்பி வைக்கப்படும். அல்லது வேறு யாரும் இதனைத் தரவிறக்கம் செய்திடாமல் இருக்க, இரு வழிப் பாதுகாப்பினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளும். மொத்த தேடல் தளங்கள் பட்டியலும், சுருக்கப்பட்ட பைலாகத் தரப்படும்

No comments:

Post a Comment