முதல் தர கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் 350 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதனால் எதிரணி 500 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த அதிரடியால் நான்ட்விச் அணி 45 ஓவர்களில் மொத்தம் 579 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த கேல்டி அணி 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நான்ட்விச் அணி 500 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 21 வயதே நிரம்பிய லிவிங்ஸ்டன் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஹைதராபாத் நகரில் நடந்த போட்டியில் புனித. ஜான்ஸ் கல்லூரி வீரர் நிகிலேஷ் சுரேந்திரன் 334 ரன்கள் எடுத்ததுதான் உலக சாதனையாக இருந்தது. சர்வதேச போட்டிகளை பொறுத்த வரை இலங்கை அணிக்கு எதிராக இந்திய வீரர் ரோகித் சர்மா 264 ரன்கள் எடுத்தது உலக சாதனையாக உள்ளது.
No comments:
Post a Comment