என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Friday, 15 May 2015

Do Not Track - என்னைப் பின் தொடராதே.

  பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கையில், பல்வேறு புரோகிராம்கள் மற்றும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், நம் தேடல்களைக் கண்காணிக்கின்றன. நம் தேடலுக்கேற்ற வகையில், விளம்பரங்களை நாம் எந்த தளம் சென்றாலும் காட்டிக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, கேமரா ஒன்று வாங்குவதற்காக ப்ளிப் கார்ட் அல்லது அமேஸான் தளத்திற்கு ஒருமுறை நீங்கள் சென்று தேடினால், அதன் பின் நீங்கள் எந்த இணைய தளம் சென்றாலும், பேஸ்புக் போன்ற சமூக இணையதளத்திற்குச் சென்றாலும், அந்த கேமரா குறித்த விளம்பரம் உங்களுக்குக் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைத்தான் “நம்மைப் பின் தொடரும் வழி” என்று இணைய மொழியில் சொல்கிறோம்


நமக்கு இது விருப்பமில்லை எனில், பிரவுசரில் “Do Not Track” என்று ஒரு வசதி உள்ளது. அதனை இயக்கிவிட்டால், இது போன்ற விளம்பரங்கள் நம்மைப் பின் தொடராது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், “Do Not Track” வசதியை மாறா நிலையில், சிஸ்டம் கட்டமைப்பிலேயே வைத்து வெளியிட்டது. இதனைத் தனி நபர் சுதந்திரம் விரும்பும் அனைவரும் வரவேற்றனர். ஆனால், விளம்பரத்தின் அடிப்படையில் இணைய தளங்களை இயக்கும் நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இணையம் சார்ந்த தொழில் பிரிவில் இது குறித்து பல விவாதங்கள் ஏற்பட்டு, இதற்கான வரைமுறை ஒன்றை, பொதுவான இணைய அமைப்பு World Wide Web Consortium (W3C) வகுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
CHROME


இதன் அடிப்படையில், பிரவுசர் ஒன்றில், “Do Not Track” வசதி தரப்பட்டுள்ளதா, அதனை வாடிக்கையாளர்கள் அமைத்துக் கொள்ள இயலுமா என்பதனைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த வசதியை இயக்குவதும், நிறுத்தி வைப்பதும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தினைப் பொறுத்துத்தான் இருக்க வேண்டும் எனவும், பிரவுசரை வழங்கும் நிறுவனத்தின் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது.

FIREFOX

இதன் அடிப்படையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வருங்கால பிரவுசர்களில் இந்த “Do Not Track” வசதி வாடிக்கையாளர்களின் விருப்பப்படி அமைக்கும் வகையில் தரப்படும் என அறிவித்துள்ளது. DNT வசதி மாறா நிலையில், பிரவுசர்களில் தரப்பட மாட்டாது. வாடிக்கையாளர்கள், தங்கள் கம்ப்யூட்டரை முதன் முதலில் செட் செய்திடும்போதே, இதனையும் செட் செய்து கொள்ளலாம். அதே போல, விண்டோஸ் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்துகையிலும், செட் செய்து கொள்ள வேண்டும்.
SAFARI

No comments:

Post a Comment