என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday, 20 May 2015

பாலூட்டிகளைத் தெரியுமா?

 உலகில் 4 ஆயிரம் பாலூட்டி வகைகள் உள்ளன. பாலூட்டிகளில் நிலத்தில் வாழ்பவையும் உண்டு. நீரில் வாழ்பவையும் உண்டு. பாலூட்டிகளுக்கு பொதுவான சில பண்புகள் உள்ளன.

#




பாலூட்டிகள் அனைத்தும் முதுகெலும்பு உயிரிகள்.

# வெப்பரத்தப் பிராணிகள். பூமியில் உள்ள எந்த தட்பவெப்பத்துக்கும் ஏற்ப தங்கள் உடலை அவை தகவமைத்துக்கொள்ளும் சக்தி படைத்தவை.
# பாலூட்டிகளுக்கு உடலில் ரோமம் காணப்படும்.
# பாலுட்டிகள் என்ற பெயருக்குத் தகுந்தாற்போல, குட்டிகளுக்குத் தரும் பாலை தமது உடம்பிலேயே உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. அத்துடன் குட்டிகள் வளரும்போது, உயிர் வாழ்வதற்கு ஏற்ற திறன்களையும் பாலூட்டிகள் பயிற்றுவிக்கும்.


உலகின் சிறிய பாலூட்டி
பம்பிள்பீ வௌவால், ஒரு அங்குல நீளமும்,
2 கிராம் எடையும் கொண்டது. தாய்லாந்து மற்றும் பர்மாவில் உள்ள சுண்ணாம்புக் குகைகளில் வாழ்கிறது. எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடியது.


பெரிய பாலூட்டி
நீலத்திமிங்கலம்,
உலகிலேயே பெரிய பாலூட்டி மற்றும் விலங்கினம். 110 முதல் 176 டன் எடை கொண்ட உயிரினம். 20 முதல் 30 மீட்டர் நீளமுடையது. ஒரு பேஸ்கட் பால் மைதானத்தின் அளவு பெரிய உயிரினம் நீலத்திமிங்கலம்.

நன்றி
தமிழ் ஹிந்து

No comments:

Post a Comment