என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Friday, 29 May 2015

உலகில் முதலாவதாக 4¼ லட்சம் ஆண்டுக்கு முன்பு கொல்லப்பட்டவர் மண்டை ஓடு ஸ்பெயினில் கண்டுபிடிப்பு.


மனிதர்களின் தோற்றம் மற்றும் பண்புகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் ஸ்பெயினில் வடக்கு பகுதியில் உள்ள சிமா டிலோஸ் ஹியூசஸ் பகுதியில் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டவர். அப்போது மண்ணில் புதைந்து கிடந்த ஒரு குகைக்குள் 28 பேரின் எலும்பு கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Wednesday, 27 May 2015

ஆமை சில தகவல்கள்.

 ஆமைகள் அல்லது நில ஆமைகள் என்பவை டெஸ்டியுடினிடே (Testudinidae) என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும். நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஓட்டின் மேல் பாகம் பெரிய மூடியாகவும் கீழ் பாகம் மார்புப்பரிசமாகவும் விளங்குகிறது. இந்த இரண்டும் ஒரு பாலத்தின் மூலம் இணைந்துள்ளன. ஆமை அகவங்கூடு மற்றும் வெளிவங்கூடு இரண்டும் உடையது. ஆமைகளின் அளவானது சில சென்டிமீட்டரில் இருந்து இரண்டு மீட்டர் வரை வேறுபடுகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும் விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன. ஆமை பொதுவாகத் தனிமையை விரும்புக்கூடிய உயிரினமாகும்.



Monday, 25 May 2015

பென்குயின் பற்றிய சில தகவல்கள்.

 பென்குயின்கள் தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. இவற்றுள் பல வகைகள், வடக்கே கலப்பகோஸ் தீவுகள் வரை கூட வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. பல பென்குயின்கள் உயிர் வாழ்வுக்கு krill, மீன், squid முதலிய கடல்வாழ் உயிரினங்களைச் சார்ந்துள்ளன. நீரின் கீழ் நீந்தி இவற்றைப் பிடித்து உண்கின்றன.
Emperor Penguin


Saturday, 23 May 2015

நீண்ட காலம் தூங்கும் நத்தை.

நத்தை, முதுகெலும்பற்ற ஓர் உயிரினமாகும். நிலம், நன்னீர் நிலைகள் மற்றும் கடலில் இவை வாழ்கின்றன. ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நத்தை இனங்கள் பூமியில் வாழ்கின்றன. 

ஒட்டகம் பற்றிய சில அறியாத தகவல்கள்.

 பாலைவனத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த
ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து  680 கிலோ எடை வரை வளரும் இவை, பொதுவாக 50ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு,நீரில்லாமல்... உணவில்லாமல்... பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே..!

Wednesday, 20 May 2015

பாலூட்டிகளைத் தெரியுமா?

 உலகில் 4 ஆயிரம் பாலூட்டி வகைகள் உள்ளன. பாலூட்டிகளில் நிலத்தில் வாழ்பவையும் உண்டு. நீரில் வாழ்பவையும் உண்டு. பாலூட்டிகளுக்கு பொதுவான சில பண்புகள் உள்ளன.

#

நீலத்திமிங்கலத்தை பற்றி இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள்.

 உலகிலுள்ள தாவர, விலங்கினங்கள் பல்வேறு வகையாக பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள் பாலுட்டிகள் என்பவை ஒரு வகை விலங்கினங்களாகும். பாலுட்டி விலங்கினங்கள் குட்டி போட்டு பால் கொடுக்கக் கூடிய குணத்தைக் கொண்டவை. மனிதன், காண்டாமிருகம் மற்றும் பலவகை நிலவாழ் பிராணிகளும், திமிங்கலம், டால்பின்கள், ஓர்க்கா முதலிய நீர்வாழ் உயிரினங்களும் பாலுட்டி வகையை சேர்ந்தவை. ஒரு வகையில் நாம் பார்த்தோமானால் திமிங்கலங்கள் நமக்கு து|ரத்து சொந்தங்களே.


உலகின் மிக பெரிய மலர் rafflesia

 இந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மழைக்காடுகளில் Rafflesia என்ற விசித்திரத் தாவரம் உள்ளது. இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது. ஆனால், ஒரே ஒரு பூ மட்டும் உண்டு. அதுதான் உலகின் மிகப்பெரிய மலர்!


Monday, 18 May 2015

தும்மல் வருவது ஏன்?

 மழைக்காலம் தொடங்கி விட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நிற்கும்.
இவற்றில் தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான், தும்மல்.


Friday, 15 May 2015

Do Not Track - என்னைப் பின் தொடராதே.

  பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கையில், பல்வேறு புரோகிராம்கள் மற்றும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், நம் தேடல்களைக் கண்காணிக்கின்றன. நம் தேடலுக்கேற்ற வகையில், விளம்பரங்களை நாம் எந்த தளம் சென்றாலும் காட்டிக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, கேமரா ஒன்று வாங்குவதற்காக ப்ளிப் கார்ட் அல்லது அமேஸான் தளத்திற்கு ஒருமுறை நீங்கள் சென்று தேடினால், அதன் பின் நீங்கள் எந்த இணைய தளம் சென்றாலும், பேஸ்புக் போன்ற சமூக இணையதளத்திற்குச் சென்றாலும், அந்த கேமரா குறித்த விளம்பரம் உங்களுக்குக் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைத்தான் “நம்மைப் பின் தொடரும் வழி” என்று இணைய மொழியில் சொல்கிறோம்

Thursday, 14 May 2015

ஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி; ஒரே வீரர் 350 ரன்கள் எடுத்தார்!.

முதல் தர கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் 350 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதனால் எதிரணி 500 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


Wednesday, 13 May 2015

மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்.

 லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோன லிசா.  பெண் ஒருவர் புன்னகைப்பது போன்ற இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக பரவியுள்ளன.  இந்நிலையில், மோன லிசா ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான தகவலை டாவின்சி மறைத்துள்ளார் என்றும் அதற்கான சான்று மோன லிசா ஓவியத்தில் இருப்பதை கண்டறியலாம் என்றும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



புகழ்பெற்ற ஓவியத்தில் ஏலியன் துறவி ஒருவர் மறைந்து உள்ளார் என வேற்று கிரகவாசிகளுக்கான இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.  இது குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், வேற்று கிரகவாசிகளின் மறைவு வாழக்கை முறை குறித்து இந்த குழுவினர் தெரிவித்துள்ளதுடன், அவர்களின் முக அமைப்புகள், தலையில் அணியும் தொப்பி, மேல் அங்கி மற்றும் கைகள் ஆகியவை குறித்தும் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ இணைப்பு


கணினியில் உருவாக்கப்பட்டு உள்ள குரல் ஒன்று பேசும்போது, லியோனார்டோ டாவின்சி தனது பெரும்பாலான படைப்புகளில் ரகசிய குறியீடுகள் மற்றும் உணர்வதற்கு அரிய செய்திகளை ஒரு நோக்கத்துடனே மறைத்துள்ளார் என்றும் பெரும்பான்மையான மத வல்லுநர்கள் கூறுகின்றனர்.  இது உண்மை என்றால், மோன லிசா படம் உண்மையில் முக்கியமான வரலாற்று மற்றும் மத உண்மைகளை மறைக்கும் வகையில் ஓவியமாக்கப்பட்டு இருக்கலாம் என கூறுகிறது.

எனினும், அந்த வீடியோ, வேற்று கிரகசவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்களை குறித்த நம்ப கூடிய விளக்கங்கள் எதனையும் வழங்கவில்லை.  அதனுடன் ஓவியத்திற்கு அதிக வண்ணங்களை கொடுத்து, அதனை பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மெருகேற்ற வேண்டும் என்பதனையும் ஏற்று கொள்கிறது.  இது குறித்து யூ டியூப் கருத்து வெளியீட்டாளர் ஒருவர் கூறும்போது, வேற்றுகிரகவாசி சாமியாரா?  வேற்றுகிரகவாசி எந்த மதத்தை சேர்ந்தவராக இருப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.  எனினும், சிலர் இதற்கான சாத்தியம் இருக்கிறது என கூற முன்வந்துள்ளனர்.



வேற்றுகிரக தட்டுகளை குறித்த இணையதளம் ஒன்றினை நடத்தி வரும் வேற்று கிரகவாசி கருத்தியலாளர் ஸ்காட் சி வேரிங் கூறும்போது, டா வின்சி வேற்று உலக உயிரினங்களின் உறுப்பினர் என கூறுகிறார்.  அவர் எழுதும்போது, லியோனார்டோ டா வின்சி ஒரு வேற்று கிரகவாசியாக இருப்பதற்தோ அல்லது அதில் பாதியாக இருப்பதற்கான வாய்ப்போ மிக அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

அதற்கான குறியீடுகளை அவர் வெளிப்படுத்துகிறார்.  அவர் மிக அதிக அறிவாற்றல் திறன் கொண்டவர்.  அசாதாரண படைப்பாற்றல் திறன் உடையவர்.  அவற்றை பயன்படுத்தி இந்த விசயங்களை அவர் செய்து முடித்துள்ளார்.  இதுபோன்ற பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றும் திறன் கொண்டவரான லியோனார்டோ போன்று இருப்பது வழக்கத்தில் இல்லாதது.  ஜீனியஸ் ஆக இருப்பினும் அனைத்து துறைகளிலும் சிறந்து லியோனார்டோ போன்று இருப்பது அரிதானது.



அவரது படைப்புகளில், ரகசிய தகவல்கள் மற்றும் குறியீடுகளை மறைத்து வைப்பவர் என்பது தெரிந்ததே.  அதனால், இந்த புதிய கண்டுபிடிப்பு, அவரது அசாதாரண திறமைகள் எங்கிருந்து வந்தது அல்லது அவை வேற்று கிரகவாசிகளிடம் இருப்பது, என்பன போன்ற தெரியாத விசயத்தை அறிவதற்கான முக்கிய கரு பொருளாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.  டா வின்சியின் ஓவியங்கள் மறைக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் தகவல்களை கொண்டிருக்கிறது என்ற ஊக அடிப்படையிலான செய்திகள் உள்ளன.  தி டா வின்சி கோடு என்ற புத்தகம் மற்றும் படம் இதனடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில், மோன லிசாவின் ஓவியத்தில் அவரது கண்களில் சிறிய எண்கள் மற்றும் எழுத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் அது குறியீடுகளாகவும் இருக்க கூடும் என்றும் வரலாற்று கலைஞர்கள் கூறியுள்ளனர்.

Tuesday, 12 May 2015

வேற்று கிரகவாசிகள் பூமியில் இருப்பது உண்மைதான்.

 ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம என்றே பதில் கூறுகிறார்கள்.


இந்த நிலையில் வேற்றுகிரகவாசிகள் இந்த உலகத்தில் உள்ளனர் என்று ஆய்வாளர் ஜெய்ம் மவுசன் போட்டோ ஆதாரத்துடன் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 1947ம் ஆண்டு மெக்சிகோவின், ரோஸ்வெல் பகுதியில், பறக்கும் தட்டு மோதியதில், விமானம் நொறுங்கி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில், ஏலியன் உருவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை.
 


இந்நிலையில், மெக்சிகோவில், 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கத்தில், தொலைக்காட்சி வர்ணனையாளர் ஜெய்ம் மவுசன் ஏலியன் புகைப்படங்களை வெளியிட்டு  அதிர்ச்சிப்படுத்தியுள்ளார். இவர் பறக்கும் தட்டு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவரும் கூட, என்பதால், இந்த தகவல் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில்,

 "1947ம் ஆண்டு விமான விபத்து தொடர்பான புகைப்படங்களில் ஏலியன் இறந்து படுத்து கிடப்பதை போன்ற தோற்றம் உள்ளது. அதை சுமார் ஐந்தாண்டு கால ஆய்வு நடத்தி உறுதி செய்துள்ளோம்" என்றார். ஆனால், ஏலியன்கள் நடமாட்டம் பற்றி, நாசாவோ அல்லது வேறு எந்த ஆய்வு மையமோ உறுதி செய்யவில்லை.


தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி  வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம். மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை.இவ்வாறு  கூறியுள்ளார்.
 

Monday, 11 May 2015

கூகுள் தேடல்கள் தொகுப்பு

  இணையத்தில், கூகுள் தேடல் வழியாக நாம் எதையாவது தேடி, தகவல்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். சில வேளைகளில், ”இருபது நாட்களுக்கு முன்பு இதனைத் தேடினேன்; ஆனால், தற்போது எப்படி தேடி, என்ன பார்த்தேன் என நினைவில் இல்லை” என்று சில நேரங்களில் நினைவைக் கசக்கிப் பார்க்கிறோம். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. இது போன்ற தருணங்களில் உதவிட, நம் தேடல்கள் அனைத்தையும் பட்டியலாக, கூகுள் நமக்குத் தருகிறது. 





Thursday, 7 May 2015

பிரபஞ்சத்தில் மிகவும் தொலைவில் ஓர் புதிய கேலக்ஸி கண்டுபிடிப்பு.


பிரபஞ்சத்தில் மிகவும் தொலைவான கேலக்ஸி கண்டுபிடிப்பு

  பிரபஞ்சத்தில் மிகவும் தொலைவில் உள்ள கேலக்ஸி (விண்மீன் கூட்டம்) ஒன்றை விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியில் இருந்து 13.1 பில்லியன் (சுமார் 1,300 கோடி) ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




நாம் பயன்படுத்தும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து ஆச்சரியமான, அதிகம் தெரியாத, சுவாரசியமான விஷயங்கள்.

 ஒரு ரூபாய் காசு பார்த்திருப்பீர்கள். ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு ரூபாய் நோட்டை அச்சடிப்பதற்கான செலவு அதிகமாக இருந்ததால் 1994 நவம்பர் மாதத்தோடு, ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியிருந்தது.



 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரூபாய் நோட்டு சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில் நாம் பயன்படுத்தும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து ஆச்சரியமான, அதிகம் தெரியாத, சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போமா:

Tuesday, 5 May 2015

வால் நட்சத்திரத்தில் உயிர்கள் உருவாவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு!

   சூரியனை சுற்றி 67–பி என்ற வால் நட்சத்திரம் சுற்றிவருகிறது. இதை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி மையம் ரொசட்டா என்ற விண்கலத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவியது. அந்த விண்கலம் தொடர்ந்து பயணம் செய்து வால் நட்சத்திரத்தை அடைந்தது. அதில் இருந்து பிலே விண்கலம் தரை இறங்கிய பின்னர், பல்வேறு படங்களை எடுத்து அனுப்பியதுடன் நிலபரப்பை துளையிட்டும் ஆய்வு செய்தது. மேலும் ஆய்வு பற்றிய தகவல்கள் விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டன. அதில், வால்நட்சத்திரத்தில் உயிர் வாழ்வதற்கான மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கார்பனை கொண்ட கரிம மூலக்கூறுகள் வால்நட்சத்திரத்தின் மேற்பகுதியில் படர்ந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

Friday, 1 May 2015

புதன் கிரகத்தில் விழுந்து நொறுங்கியது நாசாவின் விண்வெளி ஆய்வு விண்கலம்.

புதன் கிரகத்தில் மோதியது ‘மெசஞ்சர்’ விண்கலம்: 4 ஆண்டுகள் வெற்றிகரமான பயணம் முடிந்தது


புதன்கிரகத்தை நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை புவிக்கு அனுப்பிய மெசஞ்சர் விண்கலம், புதன்கிரகத்தில் விழுந்து தன் இறுதிப்பயணத்தை நிறைவு செய்தது.