என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Monday 18 April 2016

புதனுக்கும் சூரியனுக்கும் இடையே Super Earth என்ற கிரகம் இருந்து அழிந்து போனதா?

     பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு கால கட்டத்தில் நமது சூரிய குடும்பத்தில் இப்போது இருப்பதை விடப் பல கிரகங்கள் இருந்ததாகவும் சூரியனைச் சுற்றி கிரகங்கள் உண்டாகத் தொடங்கிய புதிதில் புதன் கிரகத்துக்கும் சூரியனுக்கும் இடையே சூப்பர் பூமி (Super Earth) எனப்படும் நாம் வாழும் பூமியை ஒத்த குறைந்தது ஒரு கிரகமாவது இருந்ததாகவும் வானியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

நமது பூமியை விட மிகப் பெரிய இக்கிரகம் நெப்டியூனை விடச் சிறிது என்றும் புதனுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள சுற்றுப்பாதையில் இது சுற்றி வந்ததாகவும் கூறப்படுகின்றது. 


 இந்த சூப்பர் ஏர்த் கிரகம் சூரியனுக்கு மிக அருகிலுள்ள சுற்றுப்பாதையில் சுற்றி வந்ததால் அது மெல்ல மெல்ல சூரியனை நோக்கி ஈர்க்கப் பட்டு இறுதியில் சூரியனுக்குள் மூழ்கி அழிந்து போய் விட்டதாகக் கூறும் வானியலாளர்கள் அதனால் தான் பிரபஞ்சத்திலுள்ள நமது சூரிய குடும்பத்தில் மாத்திரம் பூமிக்கு நிகராக இன்னொரு கிரகம் இருப்பது இனம் காணப் பட முடியவில்லை என்றும் இதுவரை தொலைக் காட்டிகளால் கண்டுபிடிக்கப்பட்ட பல நட்சத்திரத் தொகுதிகளில் சூப்பர் ஏர்த் கிரகங்கள் காணப் படுகின்றன என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.


நாசாவின் கெப்ளர் விண் தொலைக் காட்டியால் நமது பால்வெளி அண்டத்தில் கண்டுபிடிக்கப் பட்டு வரும் கிரகங்களில் பூமிக்கு ஒப்பான இயற்கை அமைப்பை அல்லது உயிர் வாழ்க்கைக்குத் தேவையான இயற்கையைக் கொண்டுள்ள கிரகங்கள் பல இனம் காணப் பட்டு வருவதுடன் அவை அனைத்தும் சூப்பர் ஏர்த் என்ற பொதுவான பெயரால் அழைக்கப் படுவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment