என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday, 6 April 2016

தொன்மையான பாக்தாத் மின்குடுவை.

  1938 ல் பாக்தாத் அருகில், இரண்டாயிரம் ஆண்டு பழமையான கிராமத்தில்
எதற்காகவோ நிலத்தை தோண்டிய பொழுது வேலையாட்களுக்கு நிலத்தினடியில் ஒரு பொருள் கிடைத்தது. அது பார்பதற்கு ஒரு பூச்சாடி அல்லது குடுவை போல இருந்தது. வெளிர் மஞ்சள் நிறத்தில்
களிமண்ணால் செய்யப்பட்டிருந்தது(6 இன்ச் உயரம்). 5 க்கு 1.5 இன்சுகள் உள்ள தாமிர தகட்டால் உருளை வடிவ அடிப்பகம் கருங்காறையால் (asphalt)
பற்று வைக்கும் தொழில் நுட்பத்துடன் மூடப்பட்டு இருந்தது. இதனுள்
பொருத்தும்படியான ஒரு இரும்பு துண்டு அதன்மேல் முனை கருங்காறையால் மூடப்பட்டிருந்தது. (இப் பொருளின் காலம் : பார்தியன் காலம் 248 BCE and 226 CE, circa 250 BC to AD 225 )



தெற்கு ஈராக்கிலும் (2500 BCE) தாமிரத்தால் ஆனா குடுவையும்
வெள்ளியிலான உருளை பொருத்தப்பட்ட இதே போன்ற பொருட்களும்
கண்டுபிடிக்கப்பட்டது (சுமேரியன் காலத்திய இடங்கள் !)
இதே போல் இவற்றின் சில பகுதிகள் எகிப்திலும் தொல்லியல்
துறையினருக்கு கிடைத்திருக்கிறது. ஜெர்மானிய தொல்பொருள்
ஆராய்சியாளர் வில்ஹெம் கோனிக் ( Wilheilm König ) (1940) இதை ஆய்வு செய்து, இது அக்காலத்திய பேட்டரி என்று உறுதிப்படுத்தினார்.
அவரால் இந்த கண்டுபிடிப்பை பற்றி அப்போதே பிரபலப்படுத்தப்படாமல்
போனதற்கு காரணம் உலகப்போர். இது அப்படியே மறந்து போனது.
1970 ஆம் வாக்கில் இதனுள் திராட்சை பழ ரசத்தை ஊற்றி பரிசோதித்ததில்
இதிலிருந்து 0.87 வோல்ட் மின்சாரம் உருவானது. (அக்காலத்தில்
இப்படி பயன்படுத்தி இருப்பார்கள் என்ற ஒரு அனுமானம்)


அலெஸான்ரோ வோல்டா கி.பி 1799 ல் எலக்ரோ வேதியியல்
மின்கலனை (electro chemical cell) கண்டுபிடித்தார். மிகச்சிறிய அளவு கிடைத்த இந்த மின்சாரத்தை வைத்து என்ன செய்திருப்பார்கள்(ஏறக்குறைய 2
வோல்ட்) ஏன் எதற்காக இத்தகைய ஆய்வு ? இந்த கலன் நமக்கு முதலில்
உணர்த்துவது பெர்சியன் விஞ்ஞானிகள் மின்சாரத்தை கண்டுபிடிக்க
முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் வயர் போன்ற எந்த பொருட்களும்
கிடைக்கவில்லை.


மருத்துவத்தில், அக்குபஞ்சர் போல ஊசியை வைத்து வலி உள்ள இடங்களில்
இதை பயன்படுத்தி மின்சாரத்தை செலுத்திப் பார்த்திருக்கலாம். ஆனாலும்
இது பிரியோசனப்பட்டிருக்காது. பள்ளியில் இது குறித்து சொல்லி தர
உபயோகித்திருக்கலாம். தாமிர சிலைகளின் உள்ளே பல மின்கலன்களை உபயோகித்து இதை வைத்து கடவுள் நம்பிக்கையை வளர்த்த இதை பயன்
படுத்தியிருக்கலாம் என்பது ஒரு சாரரின் கணிப்பு. ( இதுல
வைப்ரேசன் இருக்கு தெறிதா? சக்தி இருக்கு புரியுதா? ..இப்படி !! ) இருப்பினும் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட
முதல் பேட்டரி இதுதான்.

No comments:

Post a Comment