1825 ஆம் ஆண்டு நிலையான புகைப்படம் எடுக்கும் வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டது. அன்று துவங்கிய புகைப்படம் எடுக்கும் வழக்கம் கால மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு கட்ட வளர்ச்சிகளை கடந்து விட்டது. அன்று கருப்பு வெள்ளை நிறத்தில் துவங்கிய இந்த வழக்கம் இன்று செல்பீயில் வந்து நிற்கிறது.
இப்படி இருக்க உலகில் கடவுள் மற்றும் பேய் என்ற இரண்டு விஷயங்களும் பஞ்சாயத்தை கிளப்பும் விதமாகவே இருக்கின்றது எனலாம். ஒருபக்கம் இரண்டுமே உலகில் இருக்கு என்றும் மறுபக்கம் இது எல்லாம் பொய் என்றும் இன்று வரை இந்த குழப்பத்திற்கு தீர்வே கிடையாது என்பது மட்டுமே உண்மை.
கடவுள் மற்றும் பேய் இவைகளை நிரூபிக்கும் எவ்வித சாட்சிகளும் இதுவரை எவராலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுவே இவை சார்ந்த குழப்பங்களுக்கு காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் உலகில் பேய் இருக்கின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக உலவி வருகின்றது. அவைகளில் சிலவற்றை காண்போம்.
|
ஹேம்ப்டன் அரண்மனை
நீதிமன்றம் இந்த புகைப்படம் அரண்மனை பூட்டப்பட்டிருந்த போது சிசிடிவி கேமரா மூலம் படமாக்கப்பட்டதாகும். இது எடுக்கப்பட்ட போது அப்பகுதியில் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
|
ப்ளாக்ஹெட் லைட்ஹவுஸ் |
இருளில் புகை பிடிக்கும் போது இரு நண்பர்கள் இந்த புகைப்படத்தை எடுத்தனர். இந்த புகைப்படத்தை எடுக்கும் போது அங்கு யாரும் இல்லை என்பதோடு அவர்கள் அங்கு வினோதமான சத்தத்தை கேட்டதாகவும் கூறப்படுகின்றது.
|
ஆவி |
இந்த புகைப்படம் வேட்டைக்காரர் ஒருவர் பொருத்தி வைத்திருந்த டீர் கேமரா மூலம் படமாக்கப்பட்டதாகும். மேலும் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவு என்றும் நம்பப்படுகின்றது.
|
அருங்காட்சியகம் |
கிரீன்விச் பகுதியில் 1966 ஆம் ஆண்டு தேசிய கடல்வழி அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. இதனை ரெவரென்ட் ரால்ஃப் ஹார்டி என்பவர் எடுத்தார்.
|
கூப்பர் குடும்ப புகைப்படம் |
1950 ஆம் ஆண்டு டெக்சாஸ் பகுதியில் கூப்பர் வீட்டில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. பின் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவனின் கனவில் புகைப்படத்தில் இருக்கும் மர்ம உருவம் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.
|
தேவாலயம் |
1964 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதனை கார்டன் கரோல் என்பவர் எடுத்தார்.
|
விக்கர் பார்க் |
இந்த புகைப்படம் விக்கர் பார்க் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் எடுக்கப்பட்டதாகும். இந்த புகைப்படம் போலராய்டு கேமரா மூலம் எடுக்கப்பட்டது.
|
ராணுவ வீரர் |
அமெரிக்க உள்நாட்டு போரின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இங்கு ராணுவ வீரர் போன்ற உருவம் ஒன்று படியில் இருப்பதை காண முடிகின்றது.
|
ஜெயில் பேய் |
சார்ல்ஸ்டன் சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. அங்கு ஏதோ வினோதமாக இருக்கின்றது என்பதை உணர்ந்து அதன் பின் சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த இந்த புகைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
காடு |
விஸ்கான்சின் காட்டு பகுதியில் ஆட்டோமேடிக் டிரெயில் கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
|
துறவி |
1956 ஆம் ஆண்டு கிறிஸ்துவ தேவாலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இது பிரபலமான பேய் புகைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
|
மேரி லீ |
வேவர்லீ மலைப்பகுதியில் 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. மேலும் இப்புகைப்படத்தில் இருப்பது மேரி லீ என்பவரின் ஆவி என்றும் நம்பப்படுகின்றது.
|
நூலகம்
வில்லர்ட் நூலகத்தின் பாதுகாப்பு கேமராவில் கிடைத்த புகைப்படம் இது. இதில் இருக்கும் உருவம் குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.
|
|
லின்கன் கவுன்டி |
இதுவும் பாதுகாப்பு கேமராவில் கிடைத்த புகைப்படம் தான். வடக்கு கலிபோர்னியாவின் லின்கன் கவுன்டி நீதிமன்றத்தில் இப்புகைப்படம் கிடைத்தது.
|
நியூபி தேவாலயம் |
1963 ஆம் ஆண்டு ரெவரென்ட் கே.எஃப் லார்டு இந்த புகைப்படத்தை எடுத்தார். பல்துறை சார்ந்த நிபுணர்களும் ஆய்வு செய்து இந்த புகைப்படம் போலியானது கிடையாது என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment