என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday 20 April 2016

மாயமாய் மறைந்து போன தங்க புத்தர் சிலை இன்றும் விடுபடாத மர்மம்.

   லூஜான் என்ற பிலிப்பைன் தீவு (மணிலாவிற்கு தெற்கே 200 மைல் தொலைவிற்கப்பால் உள்ளது) இதில் 1970 ல் குடும்பத்துடன் வசித்து வந்தவர் ரோஜர் ருக்ஸாஸ் (Roger Roxas). ஃபெர்டிணன்ட் மார்கோஸ் (Ferdinand Marcos )1965 முதல் 1986 வரை பிலிப்பைனை தன் கட்டுக்குள் வைத்திருந்தவர். (ஆரம்பத்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னாலில்
சர்வாதிகாரியானவர்) அவரின் அப்போதைய சொத்துமதிப்பு சுமார் 10
பில்லியன் டாலர்கள் இருக்கும் என்கிறார்கள். (மே 5,1971ல்) அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்தான் ரோஜர் ரூக்ஸாஸ்.


வழக்கு என்னவென்றால், மில்லியன் டாலர் மதிப்புடைய தங்க புத்தர் சிலையை மார்க்கோஸ் மெய்காப்பாளர்களுடன் வீடு புகுந்து திருடிச்சென்றுவிட்டார் என்பது தான். சரி ரோஜருக்கு ஏது இந்த தங்க புத்தர் சிலை ? ரோஜர் ருக்ஸாஸும், ஆல்பர்ட் பூஜிகாமியும் நண்பர்கள். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான் ஆர்மியில் ஆபீசராக வேலைபார்த்தவர் ஆல்பர்ட் பூஜிகாமியின் தாத்தா. இவர்களுக்கு பெட்டி பெட்டியாய் தங்க கட்டிகள் இருக்குமிடம் பற்றிய தகவல் அடங்கிய ஒரு வரைபடம் கிடைக்கிறது. அந்த வரைபடத்தின் படி ஜப்பானியர்கள் (இரண்டாம் உலகப்போர் சமயத்தில்) கட்டிய சுரங்கப்பாதையில் ( Tunnel) புதையல் இருக்கலாம் என்ற குறிப்புகளை பெற்ற இருவரும், சிலருடன் புதையல் தேடி புறப்பட்டனர்.

Ferdinand Marcos
பல வாரங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியில் அந்த இடத்தை கண்டு கொண்டனர். வெடி வெடிக்கப்பட்டு அந்த சுரங்கப்பாதையின் வாயில் அடைபட்டு போயிருந்தது. கடினமான தோண்டுதலுக்கு பின் ஒரு வழியை கண்டு கொண்டனர். முதலில் ரோஜர் ரூக்ஸாஸ் இறங்கினான். ஒரு இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட (ஜப்பானிய) எலும்புக்கூடுகள் இருந்ததன அதன் பின்னே 2000 பவுண்டு எடைகொண்ட புத்தர் சிலை கிடைத்தது அதை தன் வீட்டிற்கு கொண்டு சென்றான் ரோஜர்.


அவர்களுக்கு மேற்கொண்டு புதையலைத் தேட, டிரக், வெடிப்பொருள்கள், கருவிகள் வாங்க, பணம் தேவைப்பட்டது அதனால் அந்த புத்தர் சிலையை விற்க முயற்சி செய்தனர். இவர்களுக்கு ஒரு சந்தேகம் சிலையினுள் எங்கேனும் ஒரு இடத்தில் வைரக்கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம், கட்டையால் சிலையை அடித்துப்பார்த்து சோதித்தனர். இந்த சிலையை வாங்க ஒருவன் வந்தான் அவன் அது தங்க சிலைதான் என்பதை உறுதி செய்தான். அவனது பார்வை முழுவது சிலையின் கழுத்து மீதே இருந்தது. இதைகவனித்த ரோஜர் சிலையின் தலையை கழற்றினான். (அதனுள் வைரங்கள் இருந்திருக்கலாம்!)
அப்போது அவனது சகோதரன் புகைப்படம் எடுத்தான். இது எதற்கென்றால் பின்னாலில் இவர்களிடம் புத்தர் சிலை இருந்தது என்பதற்கான ஆதாரத்திற்கு தான்.  ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. தகவல் மணிலா அதிபர் அரண்மனைக்கு சென்றது.


துப்பாக்கி முனையில் சிகப்பு ரிப்பன் கட்டிய துப்பாக்கிதாரர்கள் வீட்டில்
இருந்த பொருட்களை எடுத்து சென்றனர் (குழந்தை வைத்திருந்த உண்டியல்
உட்பட) அவனிடமிருந்த புத்தர் சிலையை பறித்து சென்றது. அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் பயனில்லை.
அங்கிருந்து ஒரு தீவிற்கு தலைமறைவானான் ரோஜர்.


ஆயினும் விடாமல் துரத்தி வந்தது மார்கோஸ் கும்பல். அங்கிருந்து ரோஜரை ஹோட்டல் அறையில் அடைத்து துன்புறுத்தினர், ரகசியங்களை அறிந்து கொள்ள. ஜன்னல் வழியாக தப்பித்தான் ரோஜர். நேரடியாக நீதிபதியிடம் புகார் அளித்தான். (மார்கோஸ் செல்வாக்கு சரிந்திருந்த தருணம் அது)
ஆனால் அந்த கும்பல் பொய்யான ஒரு சிலையை காட்டி இதுதான்
எனசொல்லியது. கோர்டிற்கு செல்லும் ஒருநாள் மயங்கி விழுந்து இறந்து விட்டான் ரோஜர் (ஹார்ட் அட்டாக்) அவனோடு சேர்த்து ரகசியமும் போய்
விட்டது. ஃபெர்டிணன்ட் மார்கோஸ் 1989 ல் இறந்து விட, இன்றும் அந்த
குடும்பத்தாரிடமே புத்தரின் தங்கச்சிலை (ஒரிஜினல்) இருக்கலாம்…
என்ற யூகம் மட்டுமே எஞ்சியுள்ளது.

No comments:

Post a Comment