என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Monday 25 April 2016

அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!? ஆதாரங்கள்.

  1960-களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கும், யார் முதலில் நிலாவிற்கு செல்வார்கள் என்று ஒரு 'கடும் விண்வெளி யுத்தமே' நடந்து என்பது தான் நிதர்சனமான உண்மை.

1959-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி நிலவை அடைந்த சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 (Luna 2) விண்கலம் தான் நிலவை சென்றடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாகும். அதன் பின்பு சரியாக 10 ஆண்டுகள் கழித்து, அதாவது 1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலமானது மனிதர்களை நிலவில் தரை இறக்கியது, பின்பு ஜூலை 24, 1969ல் அப்போலோ 11 பூமிக்கு திரும்பியது - இதுதான் நாம் அறிந்த 'மூன் லேண்டிங்' வரலாறு..!

Luna 2
1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நிலவில் முதல் மனித காலடியை எடுத்து வைத்து அந்த விண்வெளி யுத்ததில் வெற்றி அடைந்தது அமெரிக்கா. அதன் பின் தான் மெல்ல மெல்ல கிளம்பின சந்தேகங்கள். அமெரிக்காவின் அப்பலோ விண்கலங்கள், அதன் வீர்ர்கள், அவர்கள் நிலாவிற்கு சென்றது எல்லாம் பொய். அவைகள் எல்லாம் படமாக்கப் பட்டவைகள் என்று புரளிகள் கிளம்பின.


அமெரிக்காவின் 'மூன் லேண்டிங்' போலியானது என சீனா தற்போது கூறி உள்ளது. தன்னிடம் வலிமையான ஆதாரம் உள்ளது எனவும் கூறி உள்ளது.

இந்த குறிப்பிட்ட வரலாறு அதாவது, அமெரிக்கா நிலவுக்கு போன சம்பவம் ஆனது முழுக்க முழுக்க ஒரு நாடகம், ஒரு போலியான கதை என்றும் அமெரிக்கா நிலவிற்கு போகவே இல்லை என்றும் இன்றுவரையிலாக பெரும்பாலானோர்களால் நம்பப்படுகிறது. அதற்கு ஏகப்பட்ட பலமான ஆதரங்களும், சதியாலோசனை கோட்பாடுகளும் உண்டு. அவைகளை மேலும் பலப்படுத்தும் வண்ணம் அதிரடியான ஆதாரம் ஒன்றை சீனா அம்பலப் படுத்தியுள்ளது..!


அமெரிக்காவின் அப்போலோ 11 மூன் லேண்டிங் ஆனது முழுக்க முழுக்க ஒரு போலியான சம்பவம் என்று சீன விண்வெளி திட்டம் உயர் அதிகாரிகள் பெய்ஜிங் டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கைகு பேட்டி அளித்துள்ளனர்.


சீனாவின் லூனார் ரோவர் மூலம் கிடைக்கப்பெற்ற நிலவு புகைப்படங்களை வைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தான் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அமெரிக்க அரசாங்கத்திடமும், நாசாவிடமும் நிலவில் இறங்கியதற்க்கான துல்லியமான விளக்கம் கேட்டு மனு ஒன்றில் 200 சீன விண்வெளி மையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.


அதாவது அமெரிக்கா நிலவிற்கு வந்ததற்கான எந்த விதமான 'அடையாளமுமே' அங்கு இல்லை என்பது சீன லூனார் ரோவர் (Lunar Rover) ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Lunar Rover

தாங்கள் நிலவில் கால் தடம் பதித்தது போலியான நிகழ்வு இல்லை என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருக்கிறது என்றும் சீன விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.


சீன லூனார் ரோவர் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து, அங்கு வரலாறு கூறுவது போல அமெரிக்கா தரை இறங்கியதற்கான எந்த விதமான அடையாளமும் இல்லை என்பதை சீனா உறுதி செய்துள்ளது.


நிலவில் இருந்து புகைப்படங்களை அனுப்பியது யூட்டு (Yutu) விண்கலம் என்பதும். இது 2013-ஆம் ஆண்டு நிலவில் தரை இறங்கியது என்பதும் குறிபிடத்தக்கது.


உலக புகழ்பெற்ற ரஷ்ய அணு பொறியாளர் யூரி இக்னாட்யெவிச் முக்ஹின் (Yuri Ignatyevich Mukhin) உட்பட மேலும் பல ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிகளும் அமெரிக்க விளக்கத்திற்கான மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.


இந்த விசயத்தில் ரஷ்ய அரசாங்கமானது, 1970 -ஆம் ஆண்டில் இருந்தே பெரிய அளவிலான ஆர்வத்தை காட்டி வருகிறது. ஏனெனில், அந்த காலகட்டத்தில் யார் முதலில் நிலவை அடைவது என்ற விண்வெளி போட்டியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றது அமெரிக்கா தான்..!


அமெரிக்காவின் 'மூன் லேண்டிங்' பொய், படம் பிடிக்கப்பட்டவைகள், புரளிகள் என்று கூறும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் (Conspiracy theorists) குறிப்பிடும் ஆதாரங்கள் தான் கீழ் வரும் இவைகள்.
காற்றில் ஆடும் அமெரிக்க கொடி
அமெரிக்கா நிலாவில் முதல் கால் தடம் பதிக்கும் நிகழ்ச்சியானது நேரடி ஒளிப்பதிவில் இருந்தது, அதில் நிலவில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க கொடியானது காற்றில் ஆடுவதை தெளிவாக காண முடிந்தது.

பள்ளங்கள் இல்லாமை
அப்பலோ விண்கலம் நிலவில் தரை இறங்கியதற்க்கான எந்த விதமான பள்ளமும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் என எதிலும் இல்லை. இறக்கி வைக்கப்பட்டது போல் தான் காட்சியளிக்கிறது.

பல கோணங்களில் ஒளி ஆதாரம்
ஒளி ஆதாரமானது பல வகையான கோணங்களில் இருந்து கிடைப்பதின் மூலம் இது படடமக்கப்பட்டது என்கிறார்கள் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.

வான் அலென் ரேடியேஷன் பெல்ட்
முதல் முயற்சியிலேயே 'வான் அலென் ரேடியேஷன் பெல்ட்' என்ற கடினமான பூமியின் காந்த சக்தி கதிர்வீச்சை தாண்டி எப்படி நிலாவிற்கு சென்றனர் என்பது இன்றும் கேள்வி குறி தான்..!

விளக்கமில்லாத பொருள்
வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், விண்வெளி வீரரின் ஹெல்மெட்டில் விளக்க முடியாத பொருள் ஒன்று பிரதிபளிக்கிறது.

மறைக்கப்பட்ட கேபிள்கள்

நிலவின் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றபடி விண்வெளி வீரர்கள் கேபிள்களில் இணைக்கப்பட்டு குதித்து குதித்து செல்லப்பட்டனர் என்றும், சில புகைப்படங்களில் கேபிள்களை தெளிவாக பார்க்க முடிகின்றது என்றும் கூறுகிறார்கள்.
நட்சத்திரமின்மை
வெளியான முழு புகைப்பட தொகுப்பு மற்றும் வீடியோ பதிவிலும் எந்தவொரு ஒரு நட்சத்திரமும் பதிவாகவில்லை.

சி' பாறை 
வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், இயற்கைக்கு மாறான முறையில் தெளிவாக 'சி' (C) என்ற எழுத்தை பிரதிபலிக்கும் பாறை..!

பொய்யான கிராஸ்-ஹேர்ஸ்
வெளியான நிலவில் இறங்கிய பெரும்பாலான புகைப்படங்களில் கிராஸ்-ஹேர்ஸ்கள் (Cross-hairs) 'எடிட்' (Edit) செய்யப் பட்டுள்ளன, குறிப்பிட்ட புகைப்படத்தில் கிராஸ்-ஹேர்ஸ் ஆனது விண்கலத்திற்கு பின்னால் 'எடிட்' செய்யப்பட்டுள்ளது அதற்கு சான்றாகும்.

போலியான பின்னணிகள்
ஒரே மாதிரியான பின்புலம் (Backdrop) கொண்ட பல வீடியோ காட்சிகள்..!

இதை விட ஒரு கொடுமை என்னவென்றால் அமெரிக்கா நிலாவிற்கு சென்றதை, 20% அமெரிக்கர்களே நம்பவில்லை என்கிறது ஒரு ஆய்வு.

மூன் லேண்டிங் உண்மை என நாசா வெளியிட்ட வீடியோ.


No comments:

Post a Comment