என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Saturday 23 April 2016

நிலா உடைந்து சிதறும்!

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மிகப்பெரிய நிலாவான போபோஸ், பல்வேறு துண்டுகளாக உடைந்து சிதறும் என்றும் அந்த துகள்கள் மெதுவாக அந்த கிரகத்தின் மீது படியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு இந்திய வம்சாவளியினரை உள்ளடக்கிய விஞ்ஞானிகள் குழு கூறும்போது, “இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது. அதே நேரம் உடனடியாக இது நிகழாது. அடுத்த 2 கோடி முதல் 4 கோடி ஆண்டுகளில் போபோஸ் உடைந்து சிதறும். இந்த துகள்கள், சனி மற்றும் வியாழன் கிரகங்களைப் போல, அடுத்த 1 கோடி முதல் 10 கோடி ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிலும் ஒரு வளையத்தைத் தோற்றுவிக்கும்” என்றனர்.


விஞ்ஞானிகளில் ஒருவரான பெஞ்சமின் பிளாக் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் பூமியில் உள்ள நிலா, சில செ.மீ. தூரம் அதனிடமிருந்து விலகிச் செல்கிறது. ஆனால், செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலா (போபோஸ்) அந்த கிரகத்தை நோக்கி சில செ.மீ. தூரம் நெருங்கிச் செல்கிறது. எனவே அது உடைந்து சிதறுவது தவிர்க்க இயலாதது” என்றார்.


மற்றொறு விஞ்ஞானியான துஷார் மிட்டல் கூறும்போது, “பூமியில் உள்ள நிலா, ஈர்ப்பு விசையால் பல்வேறு திசைகளில் ஈர்க்கப்படுகின்றன. ஆனால் அதை சமாளிக்கும் திறன் நிலாவுக்கு உள்ளது. இதுபோல செவ்வாய் கிரகத்தில் உள்ள ஈர்ப்பு விசையும் போபோஸை இழுக்கின்றன. ஆனால், அதை சமாளிக்கும் திறன் இல்லாததால் போபோஸ் செவ்வாயை நோக்கி நகர்ந்து வருகிறது” என்றார்.


இந்த ஆராய்ச்சி தகவல் ‘நேச்சர் ஜியோசயின்ஸ்’ என்ற இதழில் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment