என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Monday, 11 April 2016

உங்களுக்கு காலண்டரின் வரலாறு தெரியுமா?.

  ரோம் நாட்டை உருவாக்கியவரும் ரோமின் முதல் மன்னருமான ரோமுலஸ்க்கு (Romulus) அடுத்தபடியாக வந்தவர் இரண்டாம் அரசர் நியுமா பாம்ப்பிளியஸ்(Numa Pompilius) இவர் கொண்டுவந்தது தான் 12 மாத காலண்டர். இதற்கு முன் இருந்த காலண்டர் சந்திர காலண்டர் இதில் 10 மாதங்கள் தான் இருந்தது ஏனெனில் பண்டைய காலங்களில் சந்திரனின் சுழற்சியால் தான் இரவும் பகலும் ஏற்படுகிறது என மக்கள் நம்பினார்கள் சந்திரனின் சுழற்சியும் விவசாயம் நடக்கும் காலத்தையும் அடிப்படையாக கொண்டுதான் காலண்டர் உருவாக்கப்பட்டது. இதில் வருடத்திற்கு 304 நாட்கள் என 10 மாதங்கள் பிரிக்கப்பட்டன. அதில் 6 மாதங்களுக்கு  தலா 30 நாட்கள் மீதி 4 மாதங்களுக்கு 31  நாட்கள். விவசாயம் நடக்காத பனி காலங்கள் 2 மாதத்திற்கு நீடிக்கும் இந்த இரண்டு மாதங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளபடவே இல்லை.

Romulus

அரசர் நியுமா பாம்ப்பிளியஸ்(Numa Pompilius) ஜனவரி, ஃபெப்ரவரி என்ற
இரு மாதங்களையும் காலண்டரில் கடைசியாக  இணைத்து 364 நாட்களைக்கொண்ட புதிய சூரிய நாட்காட்டியை உருவாக்கினார். ஏனெனில் அப்போது தான் சூரிய சுழற்சியால் தான் இரவும் பகலும் ஏற்படுகிறது என அறிஞர்கள் கண்டுபிடித்தனர். இது தான் சரியானது என முடிவு செய்தார் அரசர்.

Numa Pompilius

பூமி சூரியனை சுற்றிவர 365 1/4 நாட்கள் எடுத்துகொள்வதாக வானியல் அறிஞர்கள் கணக்கு கூறினார்கள். அதனால் அரசர் தலா 30 நாட்கள் கொண்ட இரண்டு மாதங்களை உருவாக்கினார். அதாவது அரசர் நியுமா பாம்ப்பிளியஸ் காலண்டரில் மொத்தம் 364 நாட்கள்.

அரசர் நியுமா பாம்ப்பிளியஸ் காலண்டர் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டது.
அப்போது பிரச்னை இல்லை என்றாலும் நாட்கள் செல்ல செல்ல பிரச்சனைகள் வந்தது. உதாரணத்திற்க்கு ரோம் மக்களின் திருவிழாக்கள் நாட் பருவங்களோடும் விவசாயத்தோடும் தொடர்பு உள்ளவை.
அதாவது sementivae எனும் திருவிழா ஜனவரி 24ல் தொடங்கி ஜனவரி 26ல் முடியும். இந்த நாட்களில் விதை விதைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை ஏனெனில் பருவமழை தொடங்கும் காலம் இது.
அரசர் நியுமா பாம்ப்பிளியஸ் காலண்டருக்கும் சூரிய சுழற்சிக்கும் 1 1/4 நாள் வித்தியாசம் இருந்தது அல்லவா இந்த வித்தியாசம் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே சென்றது. இதனால் பல வருடங்களில் பருவமழை பெய்து முடித்த பின்னரே sementivae எனும் திருவிழா வந்தது. இப்போது விதை விதைத்தால் எப்படி பயிர்கள் வளரும்? விவசாயம் பாதிக்கப்பட்டது. இப்படி பல பிரச்னைகள்.

ஜூலியஸ் சீசர்
இந்த காரணங்களுக்காக இதற்க்கு பின்னால் வந்த  ஜூலியஸ் சீசர் காலண்டரை மாற்றி அமைக்க விரும்பி தத்துவ மேதைகள், கணித வல்லுனர்கள், வானியல் அறிஞர்கள், மத குருக்கள் ஆகியோர் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்து சூரிய சுழற்சில்தான் காலண்டர் அமைய வேண்டும் என்றார். சூரிய சுழற்சி  கணக்கிற்கும் அரசர் நியுமா பாம்ப்பிளியஸ் காலண்டர் கணக்கிற்கும் வித்தியாசம் இருந்ததால்  நியுமா பாம்ப்பிளியஸ் காலண்டர் 44 நாட்கள் பின்தங்கி இருந்தது. இதை சரி கட்ட கி.மு.46ல், 44 நாட்களை கூட்டி  நாட்களின் எண்ணிக்கையை உயர்த்தினார் சீசர். அதாவது கி.மு.46ல்  365க்கு பதிலாக 409 நாட்கள் அதாவது பழைய பிழையை சரி செய்தார் சீசர்.

சீசரின் அறிஞர்கள் படை போட்ட கணக்கு படி 365 நாட்களை வருடத்தின் 12 மாதங்களாக பிரிக்கப்பட்டன. ஜனவரி, மார்ச், மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர் ஆகிய 7 மாதங்களுக்கு தலா 31 நாட்கள் ஏப்ரல், ஜூன், செப்டம்பர், நவம்பர் ஆகிய 4  மாதத்திற்கும் தலா 30 நாட்கள். பிப்ரவரிக்கு 28 நாட்கள் என்று நாம் பயன் படுத்தும் முறையான காலண்டர் வெளிவந்தது.


பின்னர், காலப்போக்கில் ஜனவரி மாதத்தை முதலாவது மாதமாக்க
வேண்டிய தேவை ஏற்பட்டது! இதனால், ஃபெப்ரவரி இரண்டாம் மாதமாகியது! இந்த மாற்றம் நடை பெற்றதால் தான் Septum (7) Octo (8) Novem (9) Decem (10) எனும் பொருட்பட்ட மாதங்கள் சம்பந்தமில்லாமல் வேறு இடங்களுக்கு மாறியுள்ளன. உதாரணமாக ஏழு எனும் பொருள் படும்
September (Septum / sept) சம்பந்தமில்லாமல் 9 ஆவது மாதமாக உள்ளது. ஜனவரி,
ஃபெபரவரி இறுதி மாதங்களாக இருந்தபோது september சரியான இடத்தில் இருந்திருக்கும்!

சீசரின் காலண்டரில் பிப்ரவரிக்கு 28 நாட்களே இருந்தது. சூரிய சுழற்சியோடு ஒப்பிடும்போது 1/4 நாள் மீதி வந்தது. இதை திருத்தும் செய்தவர் கத்தோலிக்க புனித போப் பதிமூன்றாம் கிரிகோரி (pope Gregory XIII) இவர்தான் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரிக்கு 29 நாட்கள் கொண்டதாக்கி அந்த வருடங்களுக்கு லீப் ஆண்டு என பெயரிட்டார்.

POPE Gregory XIII
ஏப்ரல் ஃபூல் எனவும் முட்டாள்கள் தினம் எனவும் அழைக்கப்படும் தினம் தோன்றிய வரலாறும் இது தான்! முன்னர் ஏப்ரல் 1 வருடத்தின் முதல்
நாளாக இருந்தது. பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் அது 4 ஆம் மாதமானது.
பழைய முறைப்படி ஏப்ரல் 1 ஐ கொண்டாடியவர்கள் முட்டாள்கள் என
அறிவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment