என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Thursday, 21 April 2016

வானில் நாளை நிலா சிறிய அளவில் தோன்றும் அதிசய நிகழ்வு.

  வானில் 15 வருடங்களுக்கு பின்னர் மினி மூன் என்ற நிகழ்வு நாளை ஏற்படுகிறது. பூமியை நிலவு வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அது பூமியை விட மிக அதிக தொலைவில் செல்லும் நிலையை அறிவியலாளர்கள் அபோகீ (apogee moon)என கூறுகின்றனர்.


இந்த அபோகீ நிலையில் பூமியில் இருந்து 4 லட்சத்து 6 ஆயிரத்து 350 கி.மீ. தொலைவில் நிலவானது இருக்கும். இந்த நிகழ்வு இன்று இரவு 9.35 மணி அளவில் ஏற்படும். சராசரியாக பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் தொலைவில் நிலவு இருக்கும்.


இந்நிலையில் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள எம்.பி. பிர்லா பிளேனட்டோரியத்தின் இயக்குநர் தேவிபிரசாத் துவாரி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நாளை வானில் முழு நிலவு தோன்றும் நிலையில் பூமியில் இருந்து அதிக தொலைவில் அது தொடர்ந்து இருக்கும்.


அதனால் சராசரி முழு நிலவை விட சிறிய அளவில் தெரியும். நாளை காலை 10.55 மணியளவில் பகல் பொழுதில் இந்த நிகழ்வு வானில் ஏற்படும்பொழுது வானியல் ஆய்வாளர்களால் மினி மூனை காண இயலாது. எனினும், இரவில் மினி மூன் நிழல் போன்று தெரியும் என கூறியுள்ளார்.


நாளைய நிகழ்வுக்கு பின்னர் வருகிற 2030ம் ஆண்டு டிசம்பர் 10ந்தேதி இதேபோன்ற நிகழ்வு வானில் மீண்டும் தோன்றும் என்றும் அவர் கூறியுள்ளார். வழக்கம்போல் நிலவின் நிறம் வெள்ளி கலந்த முத்து நிறத்தில் இருக்கும் என்றும் இன்டெர்நெட்டில் பரவி வரும் புரளி போன்று பிங்க் அல்லது பச்சை நிறத்தில் இருக்காது என்றும் துவாரி கூறியுள்ளார்.



பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்பொழுது தோன்றும் பெரிய அளவில் தோன்றும் சூப்பர் மூன் உடன் ஒப்பிடும்பொழுது, மினி மூன் 14 சதவீதம் சிறய அளவில் இருக்கும்.

No comments:

Post a Comment