என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday 14 September 2016

விண்வெளியில் விண்வெளி வீரர்களின் ஒரு நாள் எப்படி இருக்கும் தெரியுமா?

ர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு, நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான்) அவர்களுக்கான வேலை செட்யூல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும். தினம் ஒன்பது மணிநேரம், ஐந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம். ஆனால் பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.


* காலை 6 மணி:
நாளின் துவக்கம். பூமியை போல அவர்களுக்கு காலை 6 மணிக்கு சூரிய உதயம் கிடையாது. ஏனெனில் ஒருநாளில் அவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் தோன்றும். ( அதாவது ஐ.எஸ்.எஸ் international space station ஒரு நாளுக்கு 16 முறை பூமியை சுற்றும்.) காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்துவிடும். எழுந்து கொள்ள வேண்டும்.


* காலை 7 மணி:
உடல் நலம் பேணல் (Hygiene), காலை உணவு, பல் துலக்குதல். பேஸ்டால் பல் துலக்கியபின் அப்படியே விழுங்கிக்கொள்ளலாம். அதிக நுரைவராத சாம்பு தலைக்கு போட்டு கொள்ளலாம். தலை குளித்தல் (தினமும் இது தேவையில்லை) வைப்பர் மற்றும் டிரையர் கொண்டு உலர வைத்துக்கொள்கிறார்கள்.


* காலை 7.30 மணி:

கான்பெரன்ஸ் ஐ.எஸ்.எஸ் ல் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் தொடர்பு கொண்டு அன்றைய வேலைக்காண கட்டளையை பெறுகிறார்கள். தங்களின் பிரச்னைகளை தெரிவிக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து அவர்களுக்கு வந்த தகவல்கள் அளிக்கப்படுகின்றன.


* காலை 8 மணி:

பயிற்சி நேரம் எடையற்ற நிலையில் உடல் பல பிரச்னைகளை சந்திக்கும். அதனால் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காலின் கீழிருக்கும் ஸ்ராப்பினால் தங்கள் உடலை இணைத்துக்கொண்டு நிலையான சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்கிறார்கள் இது கால் சதைப்பாகங்களுக்கு மற்றும் உடலின் நரம்புகளுக்கு உறுதி அளிக்கிறது. இதேபோல் ட்ரட்மில் துரித நடையோட்ட பயிற்சியும் செய்கிறார்கள்.


* மதியம் 1 மணிக்கு:

உணவு இடை வேளை. இந்த மதிய உணவு அவர்களின் விருப்ப உணவாக பூமியில் முன்னதாக தீர்மானிக்கப்பட்ட மூன்றில் ஒன்றாக இருக்கும். விருப்ப உணவு ஏற்கனவே தயார் செய்யப்பட்டு பேக்கிங்கில் இருக்கும். சிலவற்றை உடனடியாக சாப்பிடும் வகையிலும் சிலவற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து ஓவனில் சூடாக்க வேண்டி இருக்கும்.


* மதியம் 2 மணி:

வேலை துவக்கம் ஐ.எஸ்.எஸ் ல் உள்ள கிப்போ சோதனைக்கூடத்தில் விண்வெளி மருந்து, உயிரியல், புவி சூழ்நிலை ஆய்வு, பொருள் உருவாக்கம், புரோட்டீன் படிம உருவாக்க பெட்டியில் சில சோதனைகள் இப்படி,...


* மாலை 5 மணிக்கு:
உடற்பயிற்சி. இரண்டு ட்ரெட்மில்கள், இரண்டு நிலையான சைக்கிள், ஒரு எடை தூக்கி பயிற்சி செய்யும் சாதனம் இவைதான் நிரந்திர பயிற்சி சாதனங்கள். எந்த பயிற்சி செய்வதாக இருந்தாலும் அவர்கள் தரையோடு இருக்கும் ஸ்ட்ராப்பில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.


* மாலை 6 மணிக்கு:

வேலை. விண்வெளி நிலையத்திற்குள்ளே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய சோதனைக்கூடம் கொலம்பஸ். இது மைக்ரோ கிரேவிட்டி சயன்ஸ் க்ளோவ் பாக்ஸ் என அழைக்கப்படுகிறது. இங்கு சில சோதனைகளை செய்கிறார்கள். விண்வெளி வீரர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளை தேவையான அளவிற்கு வழங்கப்படுகிறது. ஒருவாரம் அல்லது ஒருமாதம் தங்குவதாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் உணவுகள் வினியோகிக்கப்படுகிறது. கூடுதலாக ஆரஞ்சு பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் டயட் என்று சொல்லப்படுகிற நிலையை அவர்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


* இரவு 8.30 மணி:

கான்ஃபரன்ஸ் (கலந்துரையாடல்) தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தோடு அன்றைக்கு மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்கள், அடுத்த நாள் மேற்கொள்ளப்போகும் பணி இவற்றை விவாதிக்க வேண்டியிருக்கும். விண்வெளி நடை பயில (ஸ்பேஸ் வாக்) மேற்கொள்ளப்படுகிறது. அடுத்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு கான்ஃபரன்ஸ் முறையில் பதிலளிக்க வேண்டியிருக்கும்.


* இரவு 9.30 மணி:

ஓய்வு நேரம் துவக்கம். இப்போது எடையற்ற நிலையில் சில விளையாட்டுகளையும் விளையாடுகிறார்கள். புத்தகம் படித்தல், டிவிடி பார்த்தல், இசை கேட்டல், லேப்டாப்பின் மூலம் தங்கள் குடும்பத்தினரோடு பேசி நேரத்தைக் கழிக்கலாம். ஒலி ஒளிகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.


* இரவு 10மணி:

தூக்கம். கேஷுவல் டிரஸில் தங்களுக்கென கொடுக்கப்பட்டிருக்கும் தூங்குவதற்கான குழாய் படுக்கையில் உறங்கலாம். கண்கள் மற்றும் காதுகளை மறைக்கும் பிரத்தியேக முகமூடிகளை அணிந்து கொள்கிறார்கள். இந்த பை போன்ற படுக்கை மிதந்து சென்றுவிடாமல் இருக்க பெல்டுகளால் இணைக்கப்பட்டிருக்கும். 


அறிவியல் உலகிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல கஷ்டங்களுக்கு தம்மை பழக்கி கொண்டு, சுகதுக்கங்களை மறந்து அவர்கள் ஆற்றும் பணிகள் மிகவும் அற்புதமானவை.

No comments:

Post a Comment