நமது பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் எவ்வாறு தோன்றியது மற்றும் அதில் பூமி அதைச் சுற்றி வரும் துணைக் கோளான நிலவு எவ்வாறு தோன்றியது என்பது தொடர்பில் பல கருதுகோள்கள் நிலவி வருகின்றன.
இதில் இறுதியாகத் தற்போது நமது பூமியின் ஒரே சந்திரனான நிலவு எவ்வாறு தோன்றி இருக்கும் என்பது தொடர்பில் புவிப் பௌதிகத்துக்கான பாரிஸ் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 2 மில்லியன் கணணி சிமுலேசன்களை (Simulation) அலசிப் பார்த்து ஒரு விளக்கத்துக்கு வந்துள்ளனர். அதில் நிலவானது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்க் கிரகத்தின் அளவுக்கு ஒப்பான கிரகம் ஒன்று பூமியுடன் மோதியதில் தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகின்றது.
மேலும் ஆரம்பத்தில் நிலவானது இப்போது இருப்பதை விட பல மடங்கு சிறியதாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் பூமியுடன் மோதிய செவ்வாய்க்கு ஒப்பான கிரகம் பூமியின் திணிவில் 1/10 மடங்கு தான் இருந்துள்ளதாம். 1970 இல் இந்த நிலவின் தோற்றம் குறித்த கொள்கை மும்மொழியப் பட்ட போது பூமியிலும் நிலவிலும் இரசாயனங்கள் ஒரே மாதிரி இருப்பது எவ்வாறு என விஞ்ஞானிகளுக்கு மர்மமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த மோதுகை நிகழ்ந்து 100 மில்லியன் வருடங்களில் பூமியின் மேற்பரப்பில் இரசாயன மாற்றம் ஏற்பட்டது என்றும் இதன்போது Core எனப்படும் பூமியின் மையப் பகுதிக்கு சில்வர், கோல்ட் மற்றும் பிளேட்டினம் போன்ற உலோகங்கள் உருவானதாகவும் நிரூபிக்கப் பட்டுள்ளது. தற்போது நிலவின் தோற்றம் மற்றும் பூமியின் மேற்பரப்பில் அதனால் ஏற்பட்ட மாற்றம் என்பவை தொடர்பில் வியப்பூட்டும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

No comments:
Post a Comment