என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Friday, 29 December 2017

இன்னும் 5 பில்லியன் வருடங்களில் நமது சூரியன் தனது அழிவை எப்படி சந்திக்கும்? : வானியலாளர்கள் விளக்கம்

ன்னும் 5 பில்லியன் வருடங்களில் நமது சூரியன் சிவப்பு இராட்சதன் (Red giant star) ஆக உருப்பெறுத்து அதன் பின்னர் உருச்சிறுத்து அழிவை நோக்கிச் செல்லும் என்பது தான் சூரியனின் முடிவு குறித்து இதுவரை வானியலாளர்கள் அறிந்து வைத்துள்ள விளக்கம். தற்போது இதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.



நமது சூரியனில் இருந்து 530 ஒளியாண்டுகள் தொலைவில் க்ருஸ் (Grus) என்ற நட்சத்திரத் தொகுதியில் pi1Gruis என்ற நட்சத்திரம் தனது கடைசிக் கட்டத்தில் உள்ளது. சூரியனை விட 350 மடங்கு பெரியதும் சில ஆயிரம் மடங்கு அதிகப் பிரகாசமும் உடைய இந்த நட்சத்திரமும் ஒரு சிவப்பு இராட்சதன் ஆகும். இதன் திணிவும் கிட்டத்தட்ட சூரியனின் திணிவுக்கு சமனானது ஆகும். இது வானியலாளர்களின் சர்வதேச குழுவாகிய ESO இனது மிகப் பெரிய தொலைக்காட்டியால் கண்டுபிடிக்க பட்ட போதே இவ்விபரங்கள் பெறப்பட்டது.

pi1Gruis star
இதன் மூலம் சூரியனின் முடிவும் அதனால் பூமியில் ஏற்படவுள்ள உயிரின அழிவும் குறித்து தெளிவான விளக்கம் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 5 பில்லியன் வருடங்களில் சூரியன் இப்போது உள்ளதை விட 100 மடங்கு அதிகமாக சிவப்பு இராட்சதனாகப் உருப்பெருக்கும் போது அதன் சுற்று வட்டத்துக்குள் அருகேயுள்ள கிரகங்களான புதனும் வெள்ளியும் சென்று முற்றாக அதனுள்ளே சென்று அழிந்து விடும். அடுத்து உள்ள பூமியில் வெப்பம் மிகவும் அதிகரித்து உயிரின வாழ்க்கைக்கு முடிவு ஏற்படும்.




இதைத் தொடர்ந்து 2 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்பு மிகச் சிறிய வெள்ளைக் குள்ளனாக (White dwarf) மாறும்.



சூரியன் அதன் பின் தனது சக்தி அனைத்தையும் இழந்து முடிவை சந்திக்கும் என்பதே வானியலாளர்களின் விளக்கமாகும். இத்தருணங்களில் கடினமான பாறைகளால் ஆன பூமியின் மையப் பகுதி அழிவடையாது நீடிக்குமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment