அளவில் பூமியைப் போன்று இருக்கும் ஏழு கோள்களின் அணிவகுப்பை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அக்குவாரியஸ் விண்மீன் கொத்தில், மங்கலாகக் காட்சியளிக்கும் ‘டிராப்பிஸ்ட்-1’ (Trappist-1)என்ற சிறிய விண்மீனைச் சுற்றிவருபவை இந்தக் கோள்கள். உயிர் வாழ்க்கைக்கு உகந்த தட்பவெப்ப நிலையையும் நீரையும் கொண்டிருப்பதற்கான சாத்தியங்களை இந்தக் கோள்கள் கொண்டிருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.
சூரியக் குடும்பத்துக்கு அப்பால் உயிர் வாழ்க்கையின் சாத்தியங்களைத் தேடிக்கொண்டிருக்கும் வானியலாளர்களின் நம்பிக்கையை இந்தக் கண்டுபிடிப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. ஒரே விண்மீனைச் சுற்றி, பூமியின் அளவைப் போல் இவ்வளவு கோள்களைக் கண்டுபிடித்திருப்பது இதுதான் முதல் முறை.
டிராப்பிஸ்ட்-1 விண்மீன், பூமியிலிருந்து சுமார் 39 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது என்பதால் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பது குறித்த நம் தேடலுக்கு முக்கியமான இலக்காக ஆகியிருக்கிறது. வியாழனை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும் இந்த விண்மீன் நமது சூரியனைவிட 2,000 மடங்கு குறைந்த அளவில் ஒளி வீசுகிறது.
உயிர்வாழ்க்கைக்கான சாத்தியம்!
“இந்த விண்மீன் மிகவும் சிறியதாகவும் தணிவான வெப்பம் கொண்டதாகவும் இருப்பதால் அந்தக் கோள்களெல்லாம் மிதமான வெப்பநிலையைக் கொண்டிருக்கின்றன. இதனால், அவற்றில் நீர் இருப்பதற்கான சாத்தியமும், இன்னும் சொல்லப்போனால் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியமும்கூட இருக்கின்றன என்று சொல்லலாம்” என்கிறார் பெல்ஜியத்தைச் சேர்ந்த வானியற்பியலாளர் மிக்கேல் கிலன்.
உருவத்தில் மட்டுமல்ல மற்ற அம்சங்களிலும் அந்தக் கோள்கள் பூமியைப் போல இருக்கின்றன. அவற்றின் சுற்றுப்பாதை எவ்வளவு கச்சிதமாக அமைந்திருக்கிறது என்பது வியப்பை அளிக்கிறது. நமது சூரியனுக்கும் அதற்கு மிக அருகில் உள்ள புதனுக்கும் இடையிலான தொலைவைவிட டிராப்பிஸ்ட்-1 விண்மீனுக்கும் அதன் ஏழாவது கோளுக்கும் இடையிலான தொலைவு ஆறு மடங்கு குறைவானது.
அந்தக் கோள்களில் உயிரினங்கள் இருந்து, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடியவையாக அவை இருக்குமென்றால் அவற்றுக்கு அற்புதமான காட்சிகளின் தரிசனம் கிடைக்கக்கூடும். நமது சூரியன் நம் கண்களுக்கு எவ்வளவு பெரியதாகத் தெரியுமோ அதைவிடப் பத்து மடங்கு பெரியதாக, ஐந்தாவது கோளிலிருந்து பார்த்தால் அந்த டிராப்பிஸ்ட்-1 விண்மீன் காட்சியளிக்கும்.
அந்தக் கோள்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதைப் பத்தாண்டு காலத்துக்குள் தெரிந்துகொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அந்தக் கோள்களில் உயிர் வாழ்க்கை செழித்திருந்தாலும், பூமியில் உள்ளதுபோல் வாயுக்களின் வெளியீடு இருந்தாலும் அதை நாம் கண்டறிந்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒளியை மறைக்கும் கோள்கள்.
டிராப்பிஸ்ட்-1 விண்மீனைச் சுற்றி மூன்று கோள்கள் சுற்றுவதைக் கடந்த ஆண்டு வானியலாளர்கள் கண்டறிந்தார்கள். நாஸாவின் ‘ஸ்பிட்ஸர்’ அண்டவெளித் தொலைநோக்கி அந்த விண்மீனை 21 நாட்கள் கூர்ந்து கவனித்திருக்கிறது. பிற விண்நோக்கங்களிலிருந்து (Observatory) வந்த தரவுகளையும் சேர்த்துவைத்துப் பார்த்தபோது டிராப்பிஸ்ட்-1 விண்மீனை மொத்தம் ஏழு கோள்கள் சுற்றி வருவது தெரிந்தது. விண்மீனைச் சுற்றிவரும்போது அந்தக் கோள்கள் எந்த அளவுக்கு விண்மீன் ஒளியை மறைக்கின்றனவோ அதை வைத்து அவற்றின் அளவுகள் கண்டறியப்பட்டன. அந்தக் கோள்களுக்கு இடையிலான இழுப்பு விசையையும் விலக்குவிசையையும் வைத்து அந்தக் கோள்களின் நிறையைக் கணக்கிட்டிருக்கிறார்கள்.
ஒன்றரை நாள் சுற்றுப்பயணம்!
மிகவும் நெருக்கமாக அமைந்த சுற்றுப்பாதையில் அந்தக் கோள்கள் சுற்றுகின்றன. அந்த விண்மீனைச் சுற்றி வருவதற்கு ஒன்றரை நாட்களிலிருந்து அதிகபட்சமாக 20 நாட்கள் வரை கோள்கள் எடுத்துக்கொள்கின்றன. இந்தக் கோள்களில் சிலவற்றில் கடல்கள் அமைந்திருப்பதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை காணப்படுகிறது.
பூமியைப் போன்ற கோள்கள் ஒன்றும் அரிதான விஷயங்கள் இல்லை என்பதைத்தான் இந்தக் கோள்களின் கண்டுபிடிப்பு நமக்கு உணர்த்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆய்வைத் தொடங்கும்போது கால விரயம் என்று நினைத்தவர்களும் இப்போது தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கோள்களில் வளிமண்டலங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து வானிய லாளர்கள் இப்போது கவனம் செலுத்துகிறார்கள். அப்படி ஆராய்ந்தால் அந்தக் கோள்களின் மேற்பரப்பில் உயிரினங்கள் இருப்பதற்கான சான்றுகளைக் கண்டறிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தொலைதூரத்து வளிமண்டலத்தில் மீத்தேனும் நீரும் இருந்தால் கண்டுபிடித்துவிடும் திறனைக் கொண்டது ஹப்பிள் தொலைநோக்கி. ஆனால், உயிர் வாழ்க்கை இல்லாத சூழல்களிலும் மீத்தேனும் நீரும் காணப்படுவதுண்டு.
மிகவும் சிக்கலானதும் உயிர் வாழ்க்கை சாத்தியத்தைக் கொண்டிருப்பதுமான மூலக்கூறு அமைப்புகளின் தடயங்களை நாஸாவின் ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்’ தொலைநோக்கியால் கண்டறிய முடியும். ஆனால், தொலைவில் இருந்துகொண்டு நம்மால் அவ்வளவுதான் செய்ய முடியும். “நாம் அங்கே போனால் மட்டுமே நூறு சதவீதம் உறுதியாக எதையும் பற்றிக் கூற முடியும்” என்கிறார் மிக்கேல் கிலன்.
10 லட்சம் கோடி ஆண்டுகள்
டிராப்பிஸ்ட்-1 போன்ற குறுவிண்மீன்கள் (Dwarf Stars) ஊடுகதிர்களையும் புற ஊதாக்கதிர்களையும் மிகவும் உக்கிரமாகக் கக்கக்கூடியவை. அதனால் அப்படிப்பட்ட விண்மின்களுக்கு அருகில் இருக்கும் கோள்களில் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியங்கள் அவ்வளவாக இருப்பதில்லை. ஆனால், நமது சூரியன் இன்னும் சில நூறு கோடி ஆண்டுகளில் அணையவிருக்கிறது. அதற்குப் பிறகும் டிராப்பிஸ்ட்-1 விண்மீன் 10 லட்சம் கோடி ஆண்டுகள் நீடித்திருக்கும் வகையில் தனது ஹைட்ரஜனை மெதுவாக எரித்துக்கொண்டிருக்கிறது. ஆகவே, அந்த விண்மீனின் கோள்களில் உயிர் வாழ்க்கை தோன்றுவதற்குப் போதுமான அவகாசம் நிறையவே இருக்கிறது.
இது போன்ற கண்டுபிடிப்புகளால் ஏராளமான வானியல் மாணவர்கள் ஊக்கம் பெற்று இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது மேலும் உற்சாகம் அளிக்கிறது!

No comments:
Post a Comment