என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Thursday 25 August 2016

கேலக்ஸி எவலூஷன் எக்ஸ்ஃப்ளோரர்.

கேலக்ஸி எவலூஷன் எக்ஸ்ஃப்ளோரர் என்பது ஒரு பெரிய புற ஊதாக்கதிர்
தொலைநோக்கி. நியூமெக்ஸிக்கோவில் நிறுவப்பட்டுள்ளது. இதன் முக்கிய
வேலை கேலக்ஸிகளை ஊன்றி கவனித்து படம் எடுப்பது.


கேலக்ஸிகளின் மையங்களில் அதிக அழுத்தமும், வெப்பமும், வாய்த்திரட்சியும் இருப்பதால் அங்கே புதிது புதிதாக விண்மீன்கள் தோன்றியபடி இருக்கும். கேலக்ஸியின் வெளிவிளிம்புகளில் பெரும்பாலும் குளிர்ந்துபோய் மரணமடைந்து கொண்டிருக்கும் விண்மீன்களே காணப்படும் என்பது பொதுவான நம்பிக்கை.


மையத்திலிருந்து சுமார் 100,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால், கேலக்ஸியின் மெல்லிய சாட்டைபோன்ற நீட்சிகளில் ஒன்றில் புதிதாக ஒரு சூரியன்
பிறந்துகொண்டிருப்பது தெரிந்தது. 


தெற்கு கதிர்ச்சக்கர கேலக்ஸி (Southern pinwheel Galaxy) என்று அழைக்கப்படும் (M 83 என்பது அதன் விண்ணியல் பெயர்) ஒரு கேலக்ஸி இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த மிகவும் பிரகாசமான நட்சத்திரக்கூட்டம். M 83 ன் விட்டமே 40,000 ஒளி ஆண்டுகள்தான்.


இதன் மையத்திலிருந்து 140,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் புதிய
விண்மீன் உதித்துக்கொண்டிருப்பது அதிசயமாக இருக்கிறது. 'இயற்கை இப்படித்தான்' யாராலும் உறுதியுடன் சொல்லமுடியாது போலிருக்கிறது.

No comments:

Post a Comment