லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோன லிசா. பெண் ஒருவர் புன்னகைப்பது போன்ற இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக பரவியுள்ளன. இந்நிலையில், மோன லிசா ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான தகவலை டாவின்சி மறைத்துள்ளார் என்றும் அதற்கான சான்று மோன லிசா ஓவியத்தில் இருப்பதை கண்டறியலாம் என்றும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புகழ்பெற்ற ஓவியத்தில் ஏலியன் துறவி ஒருவர் மறைந்து உள்ளார் என வேற்று கிரகவாசிகளுக்கான இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், வேற்று கிரகவாசிகளின் மறைவு வாழக்கை முறை குறித்து இந்த குழுவினர் தெரிவித்துள்ளதுடன், அவர்களின் முக அமைப்புகள், தலையில் அணியும் தொப்பி, மேல் அங்கி மற்றும் கைகள் ஆகியவை குறித்தும் வெளியிட்டுள்ளனர்.
உணர்வதற்கு அரிய செய்தி
கணினியில் உருவாக்கப்பட்டு உள்ள குரல் ஒன்று பேசும்போது, லியோனார்டோ டாவின்சி தனது பெரும்பாலான படைப்புகளில் ரகசிய குறியீடுகள் மற்றும் உணர்வதற்கு அரிய செய்திகளை ஒரு நோக்கத்துடனே மறைத்துள்ளார் என்றும் பெரும்பான்மையான மத வல்லுநர்கள் கூறுகின்றனர். இது உண்மை என்றால், மோன லிசா படம் உண்மையில் முக்கியமான வரலாற்று மற்றும் மத உண்மைகளை மறைக்கும் வகையில் ஓவியமாக்கப்பட்டு இருக்கலாம் என கூறுகிறது.
எனினும், அந்த வீடியோ, வேற்று கிரகசவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்களை குறித்த நம்ப கூடிய விளக்கங்கள் எதனையும் வழங்கவில்லை. அதனுடன் ஓவியத்திற்கு அதிக வண்ணங்களை கொடுத்து, அதனை பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மெருகேற்ற வேண்டும் என்பதனையும் ஏற்று கொள்கிறது. இது குறித்து யூ டியூப் கருத்து வெளியீட்டாளர் ஒருவர் கூறும்போது, வேற்றுகிரகவாசி சாமியாரா? வேற்றுகிரகவாசி எந்த மதத்தை சேர்ந்தவராக இருப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார். எனினும், சிலர் இதற்கான சாத்தியம் இருக்கிறது என கூற முன்வந்துள்ளனர்.
வேற்று கிரகவாசி டா வின்சி
வேற்றுகிரக தட்டுகளை குறித்த இணையதளம் ஒன்றினை நடத்தி வரும் வேற்று கிரகவாசி கருத்தியலாளர் ஸ்காட் சி வேரிங் கூறும்போது, டா வின்சி வேற்று உலக உயிரினங்களின் உறுப்பினர் என கூறுகிறார். அவர் எழுதும்போது, லியோனார்டோ டா வின்சி ஒரு வேற்று கிரகவாசியாக இருப்பதற்தோ அல்லது அதில் பாதியாக இருப்பதற்கான வாய்ப்போ மிக அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
அதற்கான குறியீடுகளை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் மிக அதிக அறிவாற்றல் திறன் கொண்டவர். அசாதாரண படைப்பாற்றல் திறன் உடையவர். அவற்றை பயன்படுத்தி இந்த விசயங்களை அவர் செய்து முடித்துள்ளார். இதுபோன்ற பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றும் திறன் கொண்டவரான லியோனார்டோ போன்று இருப்பது வழக்கத்தில் இல்லாதது. ஜீனியஸ் ஆக இருப்பினும் அனைத்து துறைகளிலும் சிறந்து லியோனார்டோ போன்று இருப்பது அரிதானது.
புதிய கண்டுபிடிப்பு
அவரது படைப்புகளில், ரகசிய தகவல்கள் மற்றும் குறியீடுகளை மறைத்து வைப்பவர் என்பது தெரிந்ததே. அதனால், இந்த புதிய கண்டுபிடிப்பு, அவரது அசாதாரண திறமைகள் எங்கிருந்து வந்தது அல்லது அவை வேற்று கிரகவாசிகளிடம் இருப்பது, என்பன போன்ற தெரியாத விசயத்தை அறிவதற்கான முக்கிய கரு பொருளாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். டா வின்சியின் ஓவியங்கள் மறைக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் தகவல்களை கொண்டிருக்கிறது என்ற ஊக அடிப்படையிலான செய்திகள் உள்ளன. தி டா வின்சி கோடு என்ற புத்தகம் மற்றும் படம் இதனடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில், மோன லிசாவின் ஓவியத்தில் அவரது கண்களில் சிறிய எண்கள் மற்றும் எழுத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் அது குறியீடுகளாகவும் இருக்க கூடும் என்றும் வரலாற்று கலைஞர்கள் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment