என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Friday, 15 July 2016

நமக்கு முன்பே நம் முன்னோர்கள் பயன்படுத்திய அணு ஆயுதம் பிரம்மாஸ்திரமா?

ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு (சரியாக நாளையுடன் 71 ஆண்டுகள் ) நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் எனும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்படுகின்றது. இந்தச் சோதனை நிச்சயம் தோல்வியை தழுவும் என் சிலர் நினைத்தனர். இன்னும் சிலர் இந்த ஆயுதமானது நியூ மெக்சிகோ நகரையே அழிக்கப் போகின்றது என நினைத்தனர்.


சோதனை செய்யப்பட்டும் மைதானத்தை விட்டு சுமார் 10-20 மைல் தூரத்தில் சோதனையின் பார்வையிடும் பகுதி அமைக்கப்படுகின்றது. சரியாக 5.29 மணி 45 விநாடிகளில் முதல் அணு ஆயுதம் வெடிக்கச் செய்யப்படுகின்றது. இது தான் இன்று வரை உலகம் அறிந்த முதல் அணு ஆயுதம் என நினைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதற்கு முன்னரே அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது.


நியூ மெக்சிகோவில் வெடிக்கச்செய்யப்பட்ட ஆயுத வெடிப்பில் இருந்து நெருப்பு சுமார் 600 அடி அகலத்திற்குப் பரவுகின்றது. இதன் பாதிப்பு சுமார் 20,000 டன் டிஎன்டி வெடிக்கும் போது ஏற்படுவதைப் போன்று இருந்தது.


இதன் வெடிப்பு துகள்கள் மேகத்தில் சுமார் 7 மைல் உயரத்திற்குப் பறந்து செல்கின்றது. இதன் நடுக்கமானது சுமார் 100 மைல் தூரத்திலும் உணரப்படுகின்றது. அன்று உலகில் புதிய ஆயுதம் ஒன்று கிடைக்கின்றது.


இதனைக் கண்டறிந்த டாக்டர். ராபர்ட் ஓபென்ஹெய்மர் அதிர்ந்து போனார். இச்செய்தியைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் அதிர்ச்சி அடைந்தனர், ஆனால் பெரும்பாலானோரும் அமைதியாய் இருந்தனர்.


முதல் முறையாக உலகம், மனிதன் கண்டறிந்த மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் மூலம் தாக்கப்படுகின்றது. ஆனால் இது போன்ற ஆயுதம் முன்பே பயன்படுத்தப்பட்டிருந்தால் பூமியின் வரலாறு எப்படி இருந்திருக்கும்.


சில வரி ஆதாரங்களை கொண்டு அணு போர் மற்றும் அணு ஆயுதங்கள் பூமியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் இவை பல ஆண்டுகளுக்கு முன் அரங்கேறியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.


நமக்கு முன் பூமியில் வாழ்ந்த முன்னோர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியது அறிவியல் புனைகதை போன்று இருந்தாலும், நியூ மெக்சிகோ சோதனைக்கு பின் வெளியான டாக்டர். ஓபென்ஹெய்மர் அறிக்கையில் இதற்கான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றது.

எனக்கு பகவத் கீதையின் குறிப்புகள் நினைவுக்கு வருகின்றது. ஓபென்ஹெய்மர் ஆங்கில பதிப்பில் 11 ஆம் பகுதி 32 வது வசனத்தைக் குறிப்பிட்டிருந்தார். "Now I am become Death, the destroyer of worlds", தமிழில் "உலகங்களை அழிக்கவே முழுமையாக வளர்ந்த மரணம் {காலன்} நான் இப்போது மனித குலத்தைக் கொல்வதில் {அழிப்பதில்} ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே பல்வேறு பிரிவுகளில் நிற்கும் போர்வீரர்கள் அனைவரும் நீ இல்லாமலேயே அழிவார்கள்.

Dr oppenheimer
மகாபாரதம் மற்றும் பகவத் கீதை போன்ற புராணங்கள் கி.பி இரண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை ஆகும். இந்தப் புராணங்களில் பண்டைய நாகரீகமான ராம ராஜ்ஜியத்தில் வாழ்ந்தவர்கள் குறித்த கதைகள் இடம் பெற்றிருக்கின்றது.


இந்த நாகரீகமானது 12,000 ஆண்டுகளுக்கு முன் அல்லது முன்னதாக பதிவு செய்யப்பட்ட நாகரீகத்தை விட 5,000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியாவில் வாழ்ந்த பண்டைய நாகரீகம் ஆகும்.


இவை சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது மட்டுமின்றி இவற்றில் கடவுள்கள் பறக்கும் வாகனங்களைப் பயன்படுத்தியதோடு அதிநவீன தொழில்நுட்ப திறன் மற்றும் வியக்க வைக்கும் ஆயுதம் போன்றவற்றை போர்க்களங்களில் பயன்படுத்தியதாக பழைய குறிப்புகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர்கள் பயன்படுத்திய ஆயுதமானது பிரம்மாஸ்திரம் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பிரம்மாஸ்திரம் மூலம் பலர் உடல் தீயில் எரிந்தும், உருகியும் மரணித்திருக்கலாம். பண்டைய வானியல் கோட்பாட்டாளர்களும் பிரம்மாஸ்திரம் நிச்சயம் அணு ஆயுதமாக இருக்க வேண்டும் என்றே கூறுகின்றனர்.


பிரம்மாஸ்திரத்தின் பின்விளைவுகளும், இன்றைய அணு ஆயுதங்களின் பின்விளைவுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாக இருக்கின்றது என இன்று வரை கிடைத்திருக்கும் குறிப்புகளில் தெரிய வந்திருக்கின்றது.


இது வழக்கமான அறிவியல் கோட்பாடாக இருந்தாலும், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை போன்ற புராணங்களில் இதனை நிரூபிக்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. இருந்தும் புராணங்களில் போர் நடைபெற்றது, போரில் அதிகளவு வெடிப்புகள் அரங்கேறியதை விளக்கும் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.


போரில் ஏற்பட்ட வெடிப்புகளை மட்டும் வைத்து கொண்டு அவை அணு ஆயுதம் என கூறி விட முடியாது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வெடிப்புகள் சூரியனை விட சக்தி வாய்ந்ததாக இருந்தது. பல்வேறு கட்டிடங்களும் அழிந்து போயின.


போரில் உயிர் பிழைத்தவர்கள் தங்களது உடலில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தனர். தலை முடி உதிர்தல், தோல் மற்றும் நகங்கள் விழுவது போன்ற விளைவுகளைச் சந்தித்தனர். இது போன்ற பின் விளைவுகள் ரேடிஷன் பாதிப்புகளை உணர்த்துவதாக அமைந்துள்ளது.





இந்த மகாபாரத குறிப்புகள் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். இப்படி இருக்கும் பட்சத்தில் உடல் மற்றும் கதிரியக்க ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.


1922 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் அதிகாரியின் தலைமையில் பணியாற்றிய குழுவினர் சேர்ந்து சிந்துவெளி நாகரிகத்தின் பழைய நகரமான மொகெஞ்சசதாரோவை கண்டெடுத்தனர்.


இந்நகரமானது 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுவதோடு கி.பி 2600 முதல் 1900 உள்ளிட்ட காலகட்டத்தில் தழைத்தோங்கியதாக வானியல் கோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும் பாகிஸ்தான் ஆய்வாளர்கள் மொகெஞ்சதாரோ நகரம் மிகவும் பழைமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்கின்றனர். மேலும் இந்த நகரமானது வானிலை மாற்றம் காரணமாக அழிந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.


1920களில் சுமார் 44 மனித எலும்புக் கூடுகள் மோகெஞ்சதாரோ பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டது. இவற்றில் உடல் முகம் பூமியை நோக்கிக் கிடந்தது, மற்றும் பலர் கைகோர்த்த நிலையில் மரணித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது அவர்கள் திடீரென மரணித்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.


மோகெஞ்சதாரோ நகர மக்களுக்குக் கோரமான ஆபத்து நேர்ந்துள்ளது மட்டும் தெளிவாக தெரிகின்றது, இருப்பினும் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது சந்தேகம் எழுப்புவதாகவே இருக்கின்றது. மேலும் அவர்களின் உடல்களை எவ்வித விலங்குகளும் சீண்டவில்லை, மேலும் அவர்களின் எலும்புகள் இன்று வரை அழியாமல் அப்படியே இருப்பது பல கேள்விகளை எழுப்புவதாக அமைகின்றது.


மோகெஞ்சதாரோவின் சில பகுதிகளில் அதிகப்படியான கதிர்வீச்சு அளவுகளும் பல இடங்களில் கதிர்வீச்சு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


உலகின் சில பகுதிகளில் அதிகப்படியான கதிர்வீச்சு இருப்பது உறுதி செய்யப்படும் போது, ஏன் இவ்வாறு இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. ஒரு வேலை அணு சக்தி மூலம் பாதிக்கப்பட்ட நகரமாக பகவத் கீதையில்
குறிப்பிடப்பட்டிருப்பது மோகெஞ்சதாரோவாக இருக்குமோ.?


1979 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Atomic Destruction in 2000 B.C பிசி அதாவது கிமு 2000 காலகட்டத்தில் நிகழ்ந்த அணு அழிப்பு என்ற தலைப்பில் பிரிட்டன் ஆய்வாளர் டேவிட் டேவென்போர்ட் 45.72 மீ அகலம் கொண்ட மையப்புள்ளி ஒன்றை மோகெஞ்சதாரோவில் கண்டுபிடித்துள்ளார். அப்பகுதியில் அனைத்தும் இணைந்திருப்பதையும் அவர் கண்டுபிடித்தார்.


ஆங்கில குறியீட்டு சொல்லான விட்ரிஃபிகேஷன் என்பது, ஒரு கல் முதலில் அடர் குழம்பாக மாறும் அதன் பின் உறுதியாகும். கல் உறுதியானதும் அது கண்ணாடி போன்ற உணர்வை ஏற்படுத்தும்.


மோகெஞ்சதாரோ நகரத்தில் விட்ரிஃபிகேஷன் ஏற்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. விட்ரிஃபிகேஷன் என்பது ஒரு பொருள் அதிகப்படியான வெப்பத்தில் வைக்கப்பட்டாலோ அல்லது வெடிக்கச் செய்தாலோ ஏற்படுவதாகும்.


1940 மற்றும் 1950களில் இன்றைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அதாவது பண்டைய மோகெஞ்தாரோ, ஹரப்பா போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் அணு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டன.


இதோடு உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதாவது இன்றைய ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் அணு வெடிப்பு நிகழ்ந்து அதன் விளைவாகப் பாலைவன மணல்கள் கண்ணாடி போல் மாறிவிட்டன என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இதே போன்ற நிகழ்வு தான் நியூ மெக்சிகோவிலும் நடந்தது.


இதேப் போன்று சிந்து சமவெளி பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களும் அணு வெடிப்பினை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. இத்தனை சக்தி வாய்ந்த ஆயுதம் எங்கிருந்து வந்தது, இதனை யார் பயன்படுத்தியது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.


பழைய புராணங்களில் மூன்று நகரங்கள் பூமியை சுற்றி வானில் பறந்து வந்ததாகவும் இவை மெட்டல் மற்றும் இரும்பு மூலம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு கட்டத்தில் இந்த மூன்று நகரங்களுக்குள் போர் ஏற்பட்டு இதன் விளைவாகப் பூமியில் இருந்த நகரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகையை சக்தி வாய்ந்த ஆயுங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது நம் முன்னோர்களின் தொழில்நுட்ப யுக்திகளுக்கு ஆதாரமாக இருக்கின்றது. எனினும் அவர்கள் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தாலும் அவர்கள் மிகவும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் நடைமுறையில் சாத்தியமில்லா தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்கின்றது.

No comments:

Post a Comment