கற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’ Death Valley National Park Inyo County, California
அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா?
இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும்.
சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமியைச் சுற்றி வருகின்றன.
சில சமயங்களில் அவற்றில் ஒருகல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு.
இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது.
இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற்துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங்கும் நடமாடுகின்றன.
இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன.
இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்பதை இது காட்டுகிறது.
இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும் தான்.

இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றனவாம்.
இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமியைச் சுற்றி வருகின்றன.
சில சமயங்களில் அவற்றில் ஒருகல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு.
இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது.
இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற்துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங்கும் நடமாடுகின்றன.
இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன.
இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களிமண் தட்டா காரணம்?
இவை வேகமான காற்றினால்தான் நகர்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில்லையாம். எனவே அந்த வாதமும் எடுபடாது.
இவை வேகமான காற்றினால்தான் நகர்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில்லையாம். எனவே அந்த வாதமும் எடுபடாது.
நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்பதை இது காட்டுகிறது.
இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும் தான்.
No comments:
Post a Comment