என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Saturday, 27 August 2016

உலகில் உள்ள சில மர்மம் நிறைந்த மனிதர்கள் பற்றித் தெரியுமா?..

பொதுவாக மனிதர்களுக்கு மர்மங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய ஆவல் இருக்கும். அதற்காக நாம் சில தேடல்கள் கூட மேற்கொள்வோம். இப்போது நாம் உலகில் உள்ள சில மர்மம் நிறைந்த மனிர்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இந்த மனிதர்கள் செய்யும் விசித்திரமான செயல்கள் நம்மை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும். அதில் சில விடைக் கிடைக்காத மர்மங்களாகவும், இன்னும் சில இப்படியெல்லாம் இருக்குமா என்றும் நம்மை நினைக்க வைக்கும். சரி, இப்போது அந்த மர்ம மனிதர்களைப் பற்றி காண்போம் வாருங்கள்.

லு லோயோன்

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் மர்ம மனிதர் வாழ்ந்து வருகிறார். இவர் மிலிட்டரி உடையணிந்து, தலையில் கேஸ் மாஸ்க் போட்டுக் கொண்டு சுமார் 10 வருடங்களாக சுற்றுகிறாராம். இவருடன் பேச மக்கள் அருகில் வரும் போது, அவர் கூர்ந்து கவனித்துவிட்டு சென்று விடுவாராம். ஆனால் இவர் எங்கு தங்குகிறார் என்று தெரியாதாம். திடீரென்று மறைந்துவிடுவாராம்.


ஜோ கிரார்டெலி

1800-களில் வாழ்ந்த 'ஜோ கிரார்டெலி' என்னும் ஓர் பெண்நெருப்பை விழுங்குவாராம். மேலும் இப்பெண் கொதிக்கும் எண்ணெய் மற்றும் நைட்ரிக் அமிலத்தால் வாயை கொப்பளிப்பாராம். இதனால் எந்த ஒரு பாதிப்பும் அவருக்கு ஏற்பட்டதில்லை. உலக மக்களுக்கு இவரது புகழ் பரவ, திடீரென்று ஒரு நாள் மாயமாக மறைந்துவிட்டாராம். இதுவரை எங்கு சென்றார் என்றே தெரியவில்லையாம்.


தீர்வு கிடைக்காத முறையில் இறந்த பெண்

1970 இல் பேர்கனில் உள்ள மரணப் பள்ளத்தாக்கில் அடையாளம் தெரியாத ஓர் பெண்ணின் உடல் கிடைத்தது. அப்பெண் ஆடை இல்லாமல் இருந்ததோடு, அருகில் தூக்கமாத்திரை பாட்டிலுடன் இருந்தாராம். இவரைப் பற்றி போலீஸ் விசாரிக்கும் போது, இப்பெண் நார்வே மற்றும் ஐரோப்பாவில் 9 வித்தியாசமான கெட்டப்பில் சுற்றியது தெரிய வந்தது. தூக்கமாத்திரை எடுத்துக் கொண்டதால், இப்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் நினைத்தனர். ஆனால் ஆடையின்றி இருந்ததால், கொலையாக இருக்குமோ என்ற குழப்பத்தில் போலீஸ் உள்ளனர்.



பச்சை நிற குழந்தைகள்

இங்கிலாந்தில் உள்ள ஊல்பிட் என்னும் கிராமப்பகுதியில் 2 பச்சை நிற சிறுவன் மற்றும் சிறுமி தென்பட்டனர். இந்த குழந்தைகள் பீன்ஸைத் தவிர வேறு எதையும் உட்கொள்வதில்லையாம். ஒரு கட்டத்தில் இவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டு தொடர்பு கொண்டதில், அவர்கள் சூரிய வெளிச்சமே இல்லாத பச்சை பசேலென இருக்கும் செயின்ட் மார்டின் நிலப்பகுதியில் இருந்து வந்தது தெரிய வந்தது. திடீரென்று அவர்களுள் பச்சை நிற சிறுவன் பலவீனமாகி இறந்துவிட்டான், அந்த சிறுமி தன் பச்சை நிறத்தை இழந்துவிட்டாள்.


ஜாக் தி ரிப்பர்

இவர் ஒரு அடையாளம் தெரியாத தொடர் கொலைகாரன். இவனது குறி பெண்கள் தான். இவன் ஒரு பெண்ணைக் கொலை செய்யும் முன் தொண்டையை கிழித்து பின் வயிற்றை சிதைப்பானாம்.


டாரெட் மனிதன்

1954 இல் டோக்கியோ சர்வதேச விமான நிலையத்தில் ஒருவனிடம் வரைப்படத்தில் அவனது நாட்டினைச் சுட்டிக் காட்டும் படி கேட்கப்பட்டது. அப்போது அவன் அண்டோரா பகுதியை சுட்டிக் காட்டி, இது தான் என் நாடு டாரெட் என்று கூறினான். இதில் ஓர் விசித்திரம் என்னவெனில், இந்த நாடு 1000 வருடங்களுக்கு முன்பிருந்தது. மேலும் ஓர் அறையில் அமர வைத்திருந்த போது, திடீரென்று மறைந்துவிட்டான்.


டி.பி. கூப்பர்

இந்த அடையாளம் தெரியாத மனிதன், தனக்குத் தானே டான் கூப்பர் என பெயரிட்டுக் கொண்டான். இவன் போயிங் 727 விமானத்தில் உள்ள பயணிகளிடம், தன்னிடம் உள்ள சூட்கேஸில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டி, அரசாங்கத்திடம் $200,000 மற்றும் 4 பாராசூட் வேண்டும் எனவும் கோரினான். அதைப் பெற்றப் பின், அவன் நடுராத்திரியில் விமானத்தில் இருந்து ஒரு பாராசூட்டைக் கட்டிக் கொண்டு குதித்துவிட்டான். பின் அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இன்னும் அவன் மர்ம மனிதனாகவே உள்ளான்.


இவனை பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

No comments:

Post a Comment