என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday, 20 July 2016

"லெமூரியா கண்டமும் குமரிக்கண்டமும்" சில அரிய தகவல்கள்.

குமரி கண்டம் என்றவுடன் நம் தமிழ்நாடு தான் என்று நினைத்து விட வேண்டாம். இங்கிருந்து சரியாக 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய தமிழ்நாடு எவ்வளவு பெரியது தெரியுமா? அங்குதான் மனித குலத்தின் முதல் உயிர் தோன்றியது. தமிழ்நாட்டில் தொடங்கி ஆஸ்திரேலியா, அந்தமான், இலங்கை ,மாலதீவு போன்ற அனைத்து நாடுகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் இப்பொழுது இருக்கும் ஆப்ரிக்கா போல கட்சி அளித்த மாபெரும் தீபகற்ப நாடு நம் தமிழ்நாடு. அவை அனைத்தும் இயற்கை கடல் சீற்றத்தினால் அழிந்து போயிற்ரு.
நவீன உலகம் அதை இன்று லெமுரியா (lemuria Continent) கண்டம் என்று அழைக்கிறது.


எப்படி குமரி கண்டம் இருந்தது என்று கேள்வி தோன்றலாம்  காவியங்களில் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு தான் அனைத்தையும் படைதிருந்தார்கள் அதில் கிடைத்த சில அற்புத தகவல்கள் இதோ உங்களுக்காக.

“லெமூரியா” என கூகிலில் தேட ஆரம்பித்ததுமே லெமூரியாவின் இருப்பிடம் (இருந்த இடம்) தொடர்பான முரண்பாடுமிக்க தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன. அதாவது “மூ (mu)” எனும் பெயருடன் பசுபிக் சமுத்திரத்தில் காணப்பட்ட கண்டமே லெமூரியா என பொருள்படும் வகையில் தகவல்கள் காணப்படுகின்றன. அதே வேளை சில படங்கள் இந்து சமுத்திரத்தில் இருந்த கண்டம்தான் “லெமூரியா” என கூறுகின்றன.


காரணம், உலக வரைபடத்தில் காணப்படும் வடஅமெரிக்க தென்னமெரிக்க கண்டங்கள் இலகுவாக ஆப்பிரிக்க ஐரோப்பிய கண்டங்களுடன் இணைக்க கூடிய வாறு காணப்படுகின்றன. கற்பனை செய்து பாருங்கள், தென் அமெரிக்காவின் வலப்பக்கத்திலுள்ள கூர்ப்பகுதி ஆபிரிக்காவின் இடப்பக்கத்திலுள்ள குழிந்த பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும்.


அதே வேளை ஆப்ரிக்காவின் இடப்பக்க முனைப்பகுதி வட தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். ஆகவே, இந்த இடைப்பட்ட பகுதியில் கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை. ( ஆஸ்ரேலியாக்கண்டத்தை ஆபிரிக்கா அல்லது ஆசியா கண்டத்துடன் பொருத்தி பார்ப்பது கச்சிதமானதாக இல்லை)


இன்னொரு காரணமாக, பூமியுடன் ஒரு பெரிய விண்கல் மோதிய போது பசுபிக் சமுத்திரத்தில் இருந்து பிளவுபட்டு போன ஒரு பகுதியே காலப்போக்கில் ஈர்ப்பு விசையின் காரண‌மாக சந்திரனாக உரு மாறியதாக விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவிவருகிறது.


சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் சில கனிமங்கள் பசுபிக் சமுத்திரத்திலும் உள்ளனவாம். ( இது பூமியில் உயிரினம் தோன்ற முன்னர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இன்னொரு சாரார் இந்த மோதலே டைனோசரின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் மனித சமுதாயம் அப்போது தோன்றி இருக்கவில்லை என்பது தெளிவு.)


கண்ட நகர்வும் லெமூரியாவும்!
ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விசயம்.
ஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது.


இனி “லெமூரியா” எப்படி அழிந்திருக்கும் என பார்க்கப்போனால் பல காரண்ங்கள் தோன்றுகின்றன…

கண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்…

அதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன. அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன. அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விசயம். ஆனால் இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்… அத்தட்டுக்கள் சாதாரண‌மாக நகராமல் ஒரு சிறிய மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது.


இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. எவரெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது… ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம். இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.


இந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்! இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின் முறுகல் தான்!


லெமுரியா அழிந்தது எப்படி? தப்பியது யார்?

இங்குள்ள படத்தை பார்க்கவும் குமரிக்கண்டம் இருந்ததாக கூறும் இடத்தின் மத்தியில் 4 புவித்தட்டுக்கள் ஒன்றுடனொன்று இணைந்திருப்பதை காண முடியும். இந்த நான்கு தட்டுக்களிலும் ஏற்பட்ட எதிர் எதிர் திசைகளிலான அசைவே குமரிக்கண்டம் பிளவு பட்டு நீரினுள் முழ்கிப்போக காரண‌மாக இருக்கும். இங்கு முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால் இத்தட்டுக்கள் விலகியது என்பதை விட நான்கும் உள்னோக்கி குவிந்தது என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்கது.


இலங்கை, மடகஸ்கார் போன்ற நாடுகள் உன்மையில் குமரிக்கண்டத்தை சேர்ந்த நாடுகளே! இவை குமரிக்கண்டத்தின் எல்லைப்பகுதிகளில் காண‌ப்பட்ட மலைப்பிரதேச நாடுகளாகும். என‌வேதான் லெமூரியா மூழ்கியபோதும் இந்த நாடுகள் தப்பிபிழைத்துள்ளன. இதை, தட்டுக்கள் உள்னோக்கி குவிந்துள்ளன என்பதற்கான ஒரு சான்றாக கொள்ள முடியும். இங்கு “இந்த நான்கு தட்டுக்களும் திடீரென ஒரே நாளில் தமது மாற்றத்தை வெளிப்படுத்தி இருக்குமா?” எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு ஒரே நாளில் நடைபெற்றிருப்பதற்கு புவியியலில் சாத்தியமில்லை. “அப்படியானால் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எங்கே? அவை பிறபகுதிகளுக்கு குடிபெயரவில்லையா?” எனும் தொடர் கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக அங்கிருந்த மனித சமுதாயம் எங்கே? எனும் ஒரு பெரிய கேள்வி எழுகிறது. மனித சமுதாயத்தின் தொட்டிலாக லெமூரியா கருதப்படுவது நினைவுகூறத்தக்கது.


“பொரிக்ஷா” எனும் ரஷ்ய சிறுவன், தான் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகவும்; அப்போது அடிக்கடி தான் பூமிக்கு வந்து போய் இருப்பதாகவும்; பூமியில் குமரிக்கண்டபகுதியில் அறிவில் மேம்பட்ட 9 அடி உயரம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் என‌வும் கூறியுள்ளான். சிறுவனின் உண்மைத்தன்மை இன்னும் அறியப்படவில்லை. ஆனால், புராணங்களில் 9 அடி மனிதர்களை பற்றி பல பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

boriska
அத்துடன் பரிமாண வளர்ச்சி படியை பார்க்கும் போது சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு படி காணாமல் போயுள்ளது. இது பரிமாண கொள்கையின் தந்தையான சார்ல்ஸ் டாவினால் ஏத்துக்கொள்ளப்பட்ட கருத்து. இப்போது சமீபத்தில் சீன ஆய்வாளர்களால் இந்தோனேஷிய பகுதியில் ஒரு வித்தியாசமான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நியான்டர்தால் என்னும் உயிரினமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


அழிந்து போன உயிரினம் லெமூரியாவில் வாழ்ந்ததா?

சமீபத்தில் சீன ஆராச்சியாள‌ர்களால் இந்தோனேசிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நியான்டர்தாலாக இருக்கலாம் என கருதப்பட்டது. நியான்டர்தால் என்றழைக்கப்படும் உயிரினம் சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை மனிதனுடன் வாழ்ந்த உயிரினம். மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்றதே அந்த மூதாதையரிடமிருந்தே.


உருவ அமைப்பிலும் மனிதனை ஒத்திருந்தாளும்; சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. அதாவது, தலை சாதாரண மனித தலையை விட சற்று பெரிதாகவும், நெஞ்சுப்பகுதி சற்று முன்னோக்கி நீண்டதாகவும், முக்கியமாக மனிதனை விட உடல் வலு மிக்கவைகளாக‌ காணப்பட்டாலும் மூளைவளர்ச்சி ஒப்பீட்டு ரீதியில் மிக குறந்ததாக இருந்துள்ளது. வழமை போலவே இந்த உயிரினமும் ஆதி மனிதனின் வேட்டையில் முற்றாக ஒழிக்கப்பட்டது. நியான்டர்தாலின் உடலில் 13 ஜோடி விலா எலும்புகள் காணப்பட்டுள்ளன. இன்றும் மனிதரில் 5% ஆனோருக்கு 13 ஜோடி விலா எலும்புகள் உள்ளனவாம். அப்படியானால்… இனக்கலப்பு நடந்திருக்கலாம்… சாதாரண மனிதரில் 12 ஜோடி விலா எலும்புகளே இருக்கும்.


ஏன் நியான்டர்தால் பற்றி சொல்ல வேண்டும்.

புராணங்களில் (இராமாயணம்) ஹனுமார் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அவர்கள் மனிதர்களுடன் இருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக ஹனுமார் நியான்டர்தால் இனத்தை சேர்ந்தவர் என சொல்ல வரவில்லை, மனிதன் பூரண பரிமாண வளர்ச்சியை எட்டும்முன் நியான்டர்தால் + ஆதி மனிதன்க்கு இடைப்பட்ட ஒரு உயிரினம் இருந்துள்ளது. ( டாவினின் பரிமாண படியில் காணாமல் போனது இதுவாக இருக்கலாம்.) அந்த இனத்தின் மிஞ்சிய குழுவே வாலி,சுக்ரீவனுடைவது. புராணங்களில் கூட மனிதனுடையதும் குரங்கினதும் உடலமைப்பை இணைத்தது போன்றே இவர்களது உடல்வாகு சித்தரிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக அது லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்த அறிவுமிக்க, உயர்ந்த நாகரீகம் மிக்க மனிதர்களுக்கிடையே நடந்த வரலாற்று சம்பவங்களாக கூட இருக்கலாம்.


லெமூரியா கண்டத்தின் மத்தியில் தொடர்ச்சியான நீண்ட மேரு மலைத்தொடர் காணப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் ஆழங்களை ஆராயும் போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட ஒரு நீண்ட தூரத்துக்கு கடலின் ஆழம் குறைவாகவுள்ளது.


லெமூரியா / குமரி கண்டத்தில் இலங்கையின் பங்கு என்ன?

இராமாயணத்தில் தற்போதைய பாக் நீரினையை கடந்தே இராமர் இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் பார்க்கும் போது, லெமூரியா கண்டத்தில் இராமாயணம் நடந்தது என்பது பொய்யாகிறது. எனினும், இன்றைய மதுரையல்ல உண்மையான மதுரை. கடல் கோல்கள்,கடலரிப்புக்கள் காரணமாக மாற்றமடைந்த 3வது மதுரையே இன்றைய மதுரை. ( நிரூபிக்கபட்டது). அதே போல், இந்தியாவிலிருக்கும் “திருநெல்வேலி” எனும் நகர் பெயர் இலங்கையிலும் ஒரு பிரதேசத்து உண்டு.
(சற்று திரிபடைந்து, மொழி நடைக்கேற்ப‌ “தின்ன வேலி” என கூறப்படுகிறது.) அதா போல் தான் வத்தளங்குன்று போன்ற பிரதேசங்களும் உண்டு.


ஏழு தெங்கநாடு , ஏழு மதுரைநாடு , ஏழு முன்பலைநாடு , ஏழு பின்பலைநாடு, ஏழு குனகரை நாடு, ஏழு குன்ற நாடு , ஏழு குறும்பனை நாடு என்று மொத்தம் நாற்பத்திஒன்பது நாடுகளும்,
பறுளி, குமரி என்று இரண்டு பெரிய ஆறுகளும்,
குமரிகோடு , மணிமலை என்று இரண்டு மலைதொடர்களும் இருந்துள்ளது.

இது இல்லாமல் மூன்று பெரிய நகரங்கள் இருந்துள்ளது அவை
தென்மதுரை , கபாடபுரம் , முத்தூர் என்பனவாம்......
இன்று உலகத்தால் பழமையானது என்று போற்றப்படும் சுமேரியன் நாகரிகம் வெறும் நான்காயிரம் வருடம் பழமையானதே , ஆனால் நக்கீரர் தன்னுடைய " இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ் சங்கங்கள் 9990 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறித்து இருக்கிறார்.

முதல் தமிழ் சங்கம் இன்று கடலுக்கு அடியில் இருக்கும் தென்மதுரை நகரத்தில் கி.மு 4440 ஆம் ஆண்டு 4449 புலவர்கள் கொண்டதாகவும் இவர்களுடன் சிவன், முருகன், அகத்தியர் உட்பட 39 மன்னர்கள் இணைந்து தொடங்கபட்டதாம் அப்பொழுது அவர்கள் இயற்றிய நூல்கள்
1 .பரிபாடல்
2 .முதுநாரை
3 .முடுகுருக்கு
4 .கலரியவிரை
இந்த படைப்பில் அனைத்துமே அழிந்து விட்டது ...


இரண்டாம் தமிழ் சங்கம் கபாடபுரம் நகரில் கி.மு 3700 இல், 3700 புலவர்கள் சேர்ந்து அமைந்தது அதில் இயற்ற பட்ட நூல்கள்
1 . அகத்தியம்
2 . தொல்காப்பியம்
3 . பூதபுராணம்
4 . மாபுராணம்
இதில் தொல்காப்பியம் மட்டும் நமக்கு கிடைத்தது , மற்றவை அழிந்தது....


மூன்றாம் தமிழ் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 ஆம் வருடம் நடைபெற்றது இதில் இயற்றப்பட்ட நூல்கள்
1 . அகநானூறு
2 . புறநானூறு
3 . நாலடியார்
4 . திருக்குறள்
இதில் அனைத்துமே நம்மிடம் உள்ளது...


நிரூபிப்பதற்கு சான்றுகள் குறைவாயினும் தாலமியின் 1 வது உலக வரைபடத்தை இதற்கு ஒரு சான்றாக கொள்ளலாம்.
தாலமியின் உலக வரைபடத்தை பார்த்தோமானால், இலங்கை தீவானது 14 மடங்கு பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளை சரியாக கணித்த தாலமி இலங்கையை தவறுதலாக குறிப்பிட்டிருக்க சந்தர்ப்பமில்லை.


தாலமியின் வரைபடம் தொடர்பாக பெரிய சர்ச்சையே உள்ளது.

1) தாலமி தாம் உருவாக்கியதாக சொல்லும் வரைபடம் உண்மையில் அவர் உருவாக்கியது இல்லை. அது ஒரு பழங்குடி மக்களிடையே புழக்கத்திலிருந்தது.

2) அது வெளியுலகத்தவரால் வரையப்பட்டது.

3) நாம் தாலமியினது எனக்கூறுவது தாலமியினதே இல்லை. …

tolemy
பண்டைய அறிவு என்பது. தற்போதைய அறிவியல் விஞ்ஞானத்திற்கு நிகரான ஆனால் முற்று முழுதாக வேறுபட்ட தொழில் நுட்ப ஆறிவாகும். உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் கணித குறியீடான “ஃபை”(22/7) என்பது 16 ம் நூற்றாண்டில் அறியப்பட்ட ஒன்று. (வட்டம் தொடர்பான கணிதத்திற்கு உபயோகிக்கபடுகிறது.
ஆனால், கி.மு 10000 முதல் 5000 இடைப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் இத்தொழில் நுட்பம் கச்சிதமாக உபயோகிக்கபட்டுள்ளது.




இன்னும் நாம் ஏலியன்ஸின் பறக்கும் தட்டுக்கு கிட்டக்கூட வரவில்லை… பறக்கும் தட்டின் இயக்கம் பற்றியும் ரஷ்ய சிறுவன் பொரிக்ஷா கூறியுள்ளான். பொரிக்ஷா எனும் ரஷ்ய சிறுவன் ஏற்கனவே… லெமூரியாவில் வாழ்ந்தவர்கள் அறிவாளிகள் என கூறியுள்ளான்.

மேலும் இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளபட்ட சிறிய அளவிலான ஆராச்சியின் போது… சில பாறைப்படிவங்களில் அணு படிவுகள் காணப்பட்டுள்ளன. இது “அலெக்ஸாண்ர் கொண்ட்ர டேவ்” எனும் பிரபல ஆராச்சியாலரின் தலைமையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது அறியப்பட்டுள்ளது. இது அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்தது.


இது பற்றி அவர் குறிப்பிடுகையிலேயே… நம்மை விட அறிவில் மேம்பட்டவர்கள் வாழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளார்.

எகிப்து நதி பகுதிகளிலும், யூப்ரட்டீஸ் நதிகரையிலும் கண்டெடுக்கப்பட்ட புராதன பொருட்களை பார்க்கையில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களானது திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த எழுத்துக்களாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( முன்னர் சுமேரிய எழுத்துக்கள் என கருதப்பட்டு வந்தது. எனினும் பின்னைய ஆராச்சிகளின் மூலம் அது அதிகமாக திராவிட எழுத்துக்களை, சொற்களை ஒத்துப்போவது அறியப்பட்டது. பொதுவாக இடத்தை குறிப்பதற்கு ஊர் எனும் சொல் உபயோகிக்கபட்டுள்ளது.ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், திராவிட, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அன்றாட உபயோகிக்கபடும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இன்னொரு விசயம்… உலக வரை படத்தில் தெற்கு நோக்கி செல்லச்செல்ல திராவிடத்தன்மை அதிகரிப்பதை காணமுடியும்.
ஆகவே… இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது… அங்கு திராவிட மொழிக்கு நிகரான மொழி பேசப்பட்டது எனும் வாதம் நிரூபனமாகிறது.

குமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கேலண்டர் எப்படியானது?



லெமூரியாவில் பயண்படுத்திய நாட்காட்டி தொடர்பான தகவல்கள்.

இன்று எவ்வாறு “கிரீன் விச்” எனும் இடம் சர்வதேச நியம நேரமாக‌ பயன்படுகிறதோ… அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது. அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது. காரணம்… நமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. இது ஏற்கனவே இருந்த மதுரை தொடர்பான சம்பவங்களுடன் ஒத்து போக கூடியது. அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது… இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது…


லங்காபுரி… ரோமபுரி…சித்தபுரி…பத்திராசுவம் எனும் நான்கு… முக்கிய பெரும் நகரங்களும்… ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன. இந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்களை கணிக்கவும்… ஆண்டு கேலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது.
பண்டைய காலங்களில் 5 வகையான கேலண்டர்கள் உபயோகத்தில் இருந்து இருக்கிறது… அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது…

1. நிலா ஆண்டு முறை.

2. சூரிய ஆண்டு முறை.

5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே… பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு… என வெவ்வேறு… பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது…) இதில்… இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்ததாக இருந்தது… சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே…


அதாவது… சூரியன் தன்னை தானே… அண்னளவாக சுற்ற 25 1/4 நாள் எடுக்கும்… அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 27 1/4 நாட்கள் போன்று தோன்றும்… சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 27 1/4 நாளுக்கும் ஒரு தடவை புவியை நோக்கி வருகிறது… ( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது…) இதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்…. அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை… அடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்… ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது…. தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயன்படுகிறதோ… அவ்வாறே… முன்னர்… 12 பயன்பட்டுள்ளது…. இந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவில் வைத்துக்கொள்ளவே ) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை உபயோகத்திற்கு வந்தது.


இதை கணித்த முறை மிகவும் வியப்பானது… காரணம்… அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது…
16 ம் நூற்றாண்டில்… போப் கிரகெரி… என்பவராலேயே… இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கேலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி 14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. மதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத… காரணத்தாலேயே… கிரகெரி… ஆண்டு முறையை மாற்றி அமைத்து இருந்தார்…



சமஸ்கிரத மொழி உருவாக்கமும் லெமூரியத்தமிழரும்!



நூறு… இருனூறு வருடங்களுக்கு முன்னர் கூட, உலகின்…முக்கியமாக ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள், தொழில்நுட்ப நுட்பங்கள் என்பன‌ இலத்தீன் மொழியிலேயே இருந்தது. ( ஐரோப்பிய நாடுகளில் பேசப்பட்டுவரும் மொழிகள் பல கிரேக்க மொழியை அடிப்படையாக கொண்டதாகும்.)
இதற்கான காரணம்… ( இரகசிய மொழி) மறை மொழியில் சட்டங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.
காந்தியடிகள் சட்டம் படித்தபோது கூட, ஸ்பெசலாக கிரேக்க மொழியை கற்க பயிற்சி எடுத்து இருந்தாராம்.

இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,

சமஸ்கிரத மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான ஒரு தொடர்ப்பை காட்டுவதற்கே.

குமரிக்கண்டத்தில்… தொழில் நுட்பம், ஆட்சிமுறைகள் என்பன வளர்ச்சியடைந்த போது… அதை ஒரு குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மட்டும் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருவதற்கு; அன்றைய நடைமுறையிலிருந்த மொழியைவிட இன்னொரு இரகசிய மொழி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த சமஸ்கிரத (sanskrit ) மொழியாக இருக்கலாம். ஆனால், துரதிஸ்டவசமாக வரலாற்று சம்பவங்கள் கூட சமஸ்கிரத மொழியில் மட்டுமே எழுதப்பட்டதனால் அங்கு பேசப்பட்ட மொழி தொடர்பான சான்றுகள் இல்லாமல் போய்விட்டன. காரணம், மேல்மட்ட மக்களிடையே இந்த இரகசிய மொழி ஒரு தனி மொழியாக உருவாக தொடங்கியமையால் அவர்களால் எழுதப்படும் வரலாற்று குறிப்புகளும் அவ்மொழியிலேயே எழுதப்பட்டு விட்டது.


இன்று கூட உலகில் பேசப்பட்டு வரும் பல மொழிகளில் தமிழ் மொழியின் தன்மையும், அவ் அவ் மொழிகளின் பின்வந்த சொற்களில் சமஸ்கிரதத்தின் தன்மையும் காணப்படுகின்றனவாம்.

அடுத்து, உலகில் எழுத்து உரு இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்துவரும் மொழிகள் தமிழ் உச்சரிப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனவாம்.

அதனால், குமரிக்கண்ட வரலாற்று சம்பவங்களும், தமிழ் மொழியின் தொன்மையான வரலாறுகளும் சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்ட நூல்களிலேயே உள்ளன. முக்கியமாக வேத நூல்களாக கருதப்படும்… ரிக், யசூர்,சாமம் முதலிய நூல்களில் குமரிக்கண்ட வரலாறே கதைகளாக கூறப்பட்டுள்ளன என கருதப்படுகிறது.


மகாபாரதம் குமரிக்கண்டத்தில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம் என கூட கூறபடுகிறது.

அது சம்பந்தமாக மேலதிகமாக சில தகவல்கள்.

மகாபாரதம்…

பாம்பை தமது இலட்சனையாக கொண்ட ஒரு குழுவுக்கும், பருந்தை இலட்சனையாக கொண்ட இன்னொரு குழுவுக்குமிடையே நடந்த உண்மையான ஒரு போரேயாகும். பிற்காலங்களில் இந்த வரலாற்றை பதிவு செய்யும் போது… இது போன்ற ஓர் போர் இன்னொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக பல இடைச்செருகல்களுடன் ஒரு குழுவை முதன்மையான குழுவாக காட்டி… மக்களுக்கு நீதியை/ நற்கருத்துகளை புகுத்தி ஒரு போர் வெறியற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம் என ஓர் கருத்து உள்ளது.


துரதிஸ்ட வசமாக தொழில் நுட்ப முறைகளும் மறைக்கப்பட்டு இருக்கலாம்

டெனிக்கன் எனும் பிரபல ஆராச்சியாலர் தனது நூலில் (chariots of god ) கொண்டவானம் எனும் பகுதியை அழிப்பதற்கு கண்ணனும் அர்ச்சுனனும் பயன்படுத்திய சாதனங்கள் இன்றைய அணுவாயுதத்துக்கு நிகரானது என்பதை ஒப்பிட்டுக்காட்டி இருக்கிறாராம். நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுடனும் அதன் அழிவுகளுடனும் ஒப்பிட்டுள்ளாராம்.

அசுவத்தாமன் வீசிய ஒரு சாதனம் கருவிலிருந்த குழந்தைகளை கூட அழித்தது என சமஸ்கிரத நூல்களில் குறிப்புக்கள் இருக்கின்றனவாம்.


லெமூரியாவும் தமிழர்கள் இழந்தவைகளும்!

எகிப்திய நாகரீகத்தினை பார்த்தால்…

மிகவும் பிந்தங்கிய நிலையிலிருந்து திடீரென ஒரு மேன்மையான நிலையை எட்டியுள்ளமை விளங்குகிறது.

அவர்களின் தொழில் நுட்ப அறிவு திடீரென இவ்வளவு வீரியம்மிக்கதாக மாறியமை… அங்கு ஒரு புதிய சமூகம் குடியேறியிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் அலெக்ஸ்ஸான்டர் கொஞ்தர்தேவ் எனும் பிரபல தொல்பொருளாராச்சியாலரும் சொல்லி இருக்கிறார். அவர் அந்த சமூகம் தென் பகுதியிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும்… அது லெமூரியா கண்டத்திலிருந்து வந்து குடியேறிய சமூகமாக இருக்க வேண்டும் என்றும் தனது குறிப்பில் கூறியுள்ளார்.


அத்தோடு… வேறு ஆய்வாலர்களும்… மொசபடேனியம்.. போன்ற பாதையூடாக எகிப்துக்கும்… இந்திய பகுதிக்கும்… வியாபாரம் நடந்து இருக்கிறதாம்… மேலும்… அரபிக் கடலோரங்களில் எகிப்துக்கு கொண்டுவரப்பட்ட சில பண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன… இதில் தமிழ் சுமேரிய எழுத்துக்கள் இருக்கின்றன.


இதை பற்றி நூல்களில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்.

மகாபாரத்தில் நகுலனின் மகன்… சுக்ராச்சாரியாரின் ம‌களை திருமணம் முடிக்கிறார்.

ஆனால், நகுலனின் மகன்… விடபமன்னனின் மகளின் மூலம் 3 பிள்ளைகளை பெற்றான்.

இதனால், ஆத்திரமடைந்த சுக்ராச்சாரியார் நகுலனின் மகனை வயோதிபமடையச்செய்கிறார். இங்கு தவ வலிமை மூலம் முதுமையடைய செய்வதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அது தவ வலிமையாகவுமிருக்கலாம்… அதைவிட முன்னர் வாழ்ந்த அந்த மேம்பட்ட சமூகம்… விரைவில் முதுமையை ஏற்படுத்துவதற்காக ஏதாவது யுக்திகளை கையாண்டதாகவும் இருக்கலாம்… அந்த யுக்திகள் மறைக்கப்பட்டதுக்கு காரணம் அனைத்து மக்களுக்கும் அந்த யுக்தி சென்றடையக்கூடாது என்ற உள்னோக்கமாகவே இருக்கும்.



பின்னர்…

நகுலனின் மகன்… மீண்டும் இளமையை பெற வேண்டுமென்றால்… தனது மகன்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என பரிகாரம் கூறப்படுகிறது. சுக்ராச்சாரியாரின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே… விடபமன்னனின் மகளின் பிள்ளைகளில் ஒருவன் ஒப்பு கொள்கிறான். பிறகு… இளமையைப்பெற்ற நகுலனின் மகன்…


தனக்கு உதவ மறுத்த பிள்ளைகளை நாட்டைவிட்டு துரத்துகிறான்…

இவர்களிலிருந்தே யாதவர்களும்… துரியோத‌னின் வம்சமும் உருவாகி இருக்கிறதாம்.

யூதர்களின்… நூலின் படியும்…

ஆபிரஹாம் என்பவருக்கு முதலில் பிள்ளைகள் இல்லை… பின்னர் சேவகி மூலம் பிள்ளைகள் பிறக்கின்றன… நீண்ட கால்த்துக்கு பிறகு… மூத்த மனைவி மூலம் பிள்ளை பிறக்கிறது. மூத்த மகன் வெளியேறுகிறான்… அவன் வழி வந்தவர்கள் அரேபியர்கள்… இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள். என கூறப்பட்டுள்ளதாம்.

இந்த ரெண்டிலயுமே… ஒரு குழு நாட்டை விட்டு வெளியேறுகிறது…


மிலேச்சம் என்ற சொல்லிற்கு தமிழ் அகராதி… எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என கூறுகிறது. அதற்கான விளக்கப்படியும்… நாட்டால் விரட்டப்பட்ட ஒருவன் மிலேச்சம் எனும் தேசத்துக்கு சென்று அம்மக்களுடன் கலந்து அரசனமையால் ஏற்பட்ட பெயர் என விளக்கப்படுகிறதாம்.

ஆகவே… இதன் படி பார்க்கும் போது…

லெமூரியா கண்டத்தில் இருந்து அங்குபோய் குடியேறிய மக்கள் கூட்டத்தாலேயே… எகிப்திய நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.

லெமூரியாவில் பண்டைய தமிழ் ( தற்போது வெகுவாக மாறி இருக்கிறது ) மொழியே பிரதான மொழியாக இருந்திருக்கலாம் என சில சான்றுகள் கூறுகிறது.

ஆனால்… பின்னர் ஏற்பட்ட சுனாமி, கண்ட தாழ்வு, அல்லது அணு யுத்தம் போன்ற காரணங்களால்… லெமூரியா திடீரென அழிய… எகிப்தியர்கள் முன்னெச்சரிக்கையாக வரலாற்றை திறமையாக பதிந்து வைத்தார்கள். அது விளங்கி கொள்ள முடியாத சித்திர எழுத்திலிருப்பது துரதிஸ்டம்.

மேற் தகவல்களால் லெமூரியா கண்டம் என்று ஒன்று இருந்துள்ளது என்பது உண்மை ஆகிறது.

No comments:

Post a Comment