என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Sunday 24 December 2017

விமான விபத்தின் காரணங்களை அறிய உதவும் கருப்புப் பெட்டி.

ருப்புப் பெட்டி என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கருப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.



ஒரு விமான விபத்து நடந்தால் விசாரணைப்பிரிவினர் மிகவும் அவசரமாகத் தேடுவது இந்த கருப்புப் பெட்டியைத் தான். விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும் இந்த கருப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறிய மிகவும் பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.







இந்த கருப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும்.




ஒரு விமானத்தில் மொத்தம் 2 கருப்புப் பெட்டிகள் இருக்கும். பெரிய கருப்புப் பெட்டிக்குப் பெயர் பிளைட் டேட்டா ரெகார்டர் . இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும். சிறிய கருப்புப் பெட்டிக்குப் பெயர் வாய்ஸ் ரெகார்டர் . இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும்.

சில ஆச்சர்யமான தகவல்கள் :

★ கருப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கருப்பு அல்ல ஆரஞ்சு நிறம்.

★ கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது.

★ ஒரு கருப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.

★ இது 2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.

★ 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.

★ கருப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான்.

★ விபத்து நடந்த பிறகு கருப்புப் பெட்டியிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது.

★ எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment