என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Tuesday, 23 January 2018

விண்டோஸ் ஓ.எஸ். வளர்ந்த வரலாறு

1. விண்டோஸ் 1 - 1985, நவம்பர் 20. இன்டர்பேஸ் மேனேஜர் என முதலில், 1983லேயே பில்கேட்ஸ் அறிமுகப்படுத்திய இந்த சிஸ்டம், 1985ல் பயன்பாட்டிற்கு விண்டோஸ் என்ற பெயரில் அறிமுகமானது. அப்போதைய இதன் விலை 99 டாலர்.


2. விண்டோஸ் 2 — டிசம்பர் 9, 1987. இந்த சிஸ்டத்தில் தான் முதன் முதலாக கண்ட்ரோல் பேனல் அறிமுகமானது. ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்ப்யூட்டரிலும், இரண்டு பிளாப்பி ட்ரைவ்கள் வழியாக இது இயங்கியது. 


3. விண்டோஸ் 3 — மே 22, 1990. பயனாளர்களின் தேவைகளுக்கேற்ப இன்டர்பேஸ் அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சிஸ்டம் உருவானது. கண்ட்ரோல் பேனல் மேம்படுத்தப்பட்டு, முதல் முதலாக சாலிடெர் கேம் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டது.


4. விண்டோஸ் என்.டி. 3.1 — ஜூலை 27,1993. இதனுடைய குறியீடுகள் அமைப்பு இன்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பில் இடம் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எம். நிறுவனத்துடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தினை முறித்துக் கொண்ட பின்னர், மைக்ரோசாப்ட் உருவாக்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இது.


5. விண்டோஸ் 95 — ஆகஸ்ட் 24, 1995. நுகர்வோரை மனதில் வைத்து, எளிமையான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இது வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஸ்டார்ட் பட்டன் கொண்ட முதல் ஓ.எஸ். இதுதான். இதற்காகவே Start Me Up - என்ற பாடல் வழங்கப்பட்டது. டாஸ்க் பார், சிஸ்டம் ட்ரே, நோட்டிபிகேஷன் ஏரியா, விண்டோ மேக்சிமைஸ் / மினிமைஸ் ஆகிய வசதிகள் இந்த சிஸ்டத்தில் முதல் முதலாகத் தரப்பட்டன.


6. விண்டோஸ் என்.டி. 4 — ஆகஸ்ட் 24, 1996. ஒர்க் ஸ்டேஷன் மற்றும் சர்வர்களில் இயங்கும் சிஸ்டமாக இது கிடைத்தது. 


7. விண்டோஸ் 98 — ஜூன் 25, 1998. விண்டோஸ் 95 சிஸ்டத்தைக் காட்டிலும், நுகர்வோருக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட சிஸ்டமாக இது வடிவமைக்கப்பட்டு கிடைத்தது. விண்டோஸ் 95 உடன் கிடைத்த யு.எஸ்.பி. சப்போர்ட், இதில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு தரப்பட்டது. ஸ்கேனர், மவுஸ், கீ போர்ட் மற்றும் ஜாய் ஸ்டிக் ஆகியவற்றை யு.எஸ்.பி. போர்ட் மூலம் பயன்படுத்த முடிந்தது. ஆனால், மோடம் சாதன இயக்கம் தரப்படவில்லை.


8. விண்டோஸ் 2000 புரபஷனல் — பிப்ரவரி 17, 2000. விண்டோஸ் என்.டி. 4 மற்றும் விண்டோஸ் 98 ஆகியவற்றின் இடத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.


9. விண்டோஸ் மி — செப்டம்பர் 14, 2000. மிக மோசமான விண்டோஸ் இயக்கம் என அனைவராலும் கருதப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம்.


10.விண்டோஸ் எக்ஸ்பி — அக்டோபர் 25, 2001. மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் இயக்க முறைமைகளில், மிகவும் சிறப்பானதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் கருதப்பட்டு, இறுதிவரை அதிகமான மக்களால் பிரியத்துடன் பயன்படுத்தப்பட்ட ஓ.எஸ். இதுவாகும். இன்னும் பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 8, 2014 வரை, இதற்கான மேம்பாட்டு பைல்களை மைக்ரோசாப்ட் தந்து வந்தது.


11.விண்டோஸ் சர்வர் 2003 — ஏப்ரல் 24, 2003. விண்டோஸ் எக்ஸ்பியின் சர்வர் பதிப்பு இயக்கமாக இது வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது.


12.விண்டோஸ் விஸ்டா — ஜனவரி 30, 2007. ஏற்கனவே தரப்பட்ட பல வசதிகள் இதில் மேம்படுத்தப்பட்டாலும், நுகர்வோர்களின் ஆதரவைப் பெறத் தவறிய ஓ.எஸ். இதுவாகும்.


13.விண்டோஸ் சர்வர் 2008 — பிப்ரவரி 27, 2008. சர்வர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கு தனி இடம் கிடைத்தது. பல வசதிகள் இதில் மேம்படுத்தப்பட்டுத் தரப்பட்டன.


14.விண்டோஸ் 7 — அக்டோபர் 22, 2009. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா பயன்படுத்தி வந்தவர்களுக்கு, இந்த சிஸ்டம் எதிர்பார்த்த பல வசதிகளைத் தந்தது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு கிடைத்தன.


15.விண்டோஸ் சர்வர் 2012 — செப்டம்பர் 4, 2012. நான்கு வேறுபட்ட வகைகளில் இது வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது. நெட்வொர்க்கிங் பணியில் மிகச் சிறப்பான மேம்பாடுகளைக் கொண்டது.


16.விண்டோஸ் 8 — அக்டோபர் 25, 2012. மூன்று வகை இயக்கத்துடன் இது வெளியானது. குறிப்பாக, தொடு உணர் திரையில் விண்டோஸ் இயக்கத்தினைக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் வடிவமைக்கப்பட்டது. பல பழைய வசதிகள், ஸ்டார்ட் மெனு உட்பட, இதில் தரப்படவில்லை என்பதால், அதிரடியான மாற்றத்திற்கு மக்கள் தயாராகத் தயங்கினர். இதனால், விண்டோஸ் 7 தொடர்ந்து மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. 


17. விண்டோஸ் 8.1 — அக்டோபர் 17, 2013. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கைவிடப்பட்ட ஸ்டார்ட் பட்டன் இதில் மீண்டும் தரப்பட்டது. ஸ்கை ட்ரைவ் மற்றும் விண்டோஸ் ஸ்டோர் ஆகியவை மேம்படுத்தப்பட்டு, இதனுடன் இணைக்கப்பட்டு கிடைத்தன.


18. விண்டோஸ் 10 — ஜூலை 29, 2015. இதற்கு முன் இல்லாத வகையில், பல லட்சக்கணக்கான பயனாளர்களால், ஆர்வத்துடன் சோதனை செய்யப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம். இனி விண்டோஸ் ஒரு சேவையாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் இதில் அதிகமான வசதிகளை எதிர்பார்த்துள்ளனர். பல முற்றிலும் புதிய வசதிகள் இதில் அறிமுகமாகியுள்ளன.


குறிப்பாக இதனுடன் இணைந்து தரப்படும் எட்ஜ் பிரவுசரைக் கூறலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை ஓரங்கட்டும் சிஸ்டமாக இது வந்துள்ளது.

No comments:

Post a Comment