மூத்த பூச்சியியலாளரான (Entomologist) 'வின்டெர்டோன்' என்பவர் போட்டோ இணையத்தளமான 'Flickr' இல் விசித்திர பூச்சிகளின் புகைப் படங்களை பார்வையிட்டுள்ளார்.
உணவு மற்றும் விவசாயம் தொடர்பான கலிபோர்னியாவின் திணைக்களத்தில் பணிபுரியும் மூத்த பூச்சியியலாளரான (Entomologist) 'வின்டெர்டோன்' என்பவர் மே 11 2011 இல் பூச்சிகள் பற்றிய புகைப் படங்களை இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கையில் உலகின் பிரபல போட்டோ இணையத்தளமான 'Flickr' இல் இதுவரை கண்டிராதா உயிரினங்களைப் பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து இவ் விசித்திர பூச்சிகளின் புகைப் படங்களை 'Flickr' இல் பதிவு செய்த ஜுவெக் ஹொக் பிங் என்ற புகைப்படவியலாளருக்கு (Photographer) இவர் மேலதிக விபரங்களைக் கோரி மின்னஞ்சல் செய்திருந்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. இவருக்கு ஒரு வருடம் கழித்து பதில் அஞ்சல் வந்துள்ளது.
இதற்கு முன்னர் இப் பூச்சிகளின் புகைப் படங்களை வின்டெர்டோன் தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளார். யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இது பற்றிய முழுமையான விபரங்களைப் பெற இவர் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இவருக்குப் பதில் கிடைத்த பின் அதில் இவ்வாறு குறிப்பிடப் பட்டிருந்தது. அதாவது, 'மலேசியாவில் உள்ள காடுகளில் வாழ்ந்து வரும் 'லாசேவிங்' (Lacewing) எனும் பூச்சியினமே இது. இது விஞ்ஞானத்துக்குப் புதியது. லண்டனில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் பணி புரியும் 'ஸ்டீவ் ப்ரூக்ஸ்' என்ற பூச்சியியலாளருக்கு (Entomologist) இப் பூச்சியினத்தின் சில மாதிரிகள் வழங்கப்பட்டுள்ளன.'
தற்போது இவர் பதிவிட்ட அரிய பூச்சியினமான 'லாசேவிங்' இன் படத்தில் காணப்படுவது பச்சை லாசேவிங் ஆகும். இவ்வினம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இப் பச்சை லாசேவிங் இறக்கையில் கறுப்பு நிறக் கோடுகளும் நீல நிற குறியீடுகளும் காணப்படுவது போன்றுள்ளது மிகவும் புதிது.
பிரபல போட்டோ இணையத்தளமான 'Flickr' இல் ஒரு நிமிடத்தில் ஆயிரம் படங்கள் பதிவேற்றப் படுகின்றன. எனவே இத்தளத்தில் மட்டுமே நிறைய புதிய கண்டுபிடிப்புக்கள் வர வாய்ப்புள்ளது. ஆனால் பல மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என 'வின்டெர்டோன்' கூறியுள்ளார்.

No comments:
Post a Comment