என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Tuesday, 18 October 2016

நமக்கு தெரிந்த தெரியாத உலகின் எட்டாவது கண்டம்.

லகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். ஆனால் வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார்.


இந்த எட்டாவது கண்டம் யாருக்கும் தெரியாத ஒன்று. இது தரையில் இருந்து 200 அடி உயரத்தில் இருக்கிறது என்கிறார். இது ஒரு வித்தியாசமான உலகம் என்றும் கூறுகிறார். இந்த உலகில் 100,200 அடி உயரம் வளர்ந்து நிற்கும் மரங்கள் லட்சகணக்கான சதுர மைல்களில் பரவி நிற்கின்றன. இந்த மரங்களின் உச்சியில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன.


அதுதான் உலகின் எட்டாவது கண்டம் என்கிறார் அவர். 1980ம் வருடம் வன ஆராய்ச்சியாளர் டெர்ரி இர்வின் அமேசான் காடுகளில் அலைந்த போது அவர் மீது சில பூச்சிகள் வந்து விழுந்தன. அந்த பூச்சிகளை பற்றி இதற்கு முன் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை. பூச்சிகள் சம்பந்தமான புத்தகங்களிலும் அவற்றை பற்றிய குறிப்பு இல்லை. அது இதுவரை உலகம் அறிந்திராத புதுவகையான பூச்சியினம்.


அதிசயித்து போன இர்வின், மரத்தின் மீது ஏறி அதன் உச்சியை ஆராய்ந்தார். என்னவொரு ஆச்சர்யம். அங்கு இதுவரை காணாத பல புதிய பறவைகள், பூச்சிகளை கண்டுபிடித்தார். அடர்த்தியான மரக்கிளைகள் இருப்பதால் பறவைகளோ, பூச்சுகளோ கீழே வர வாய்ப்பு இல்லை. மரத்தின் உச்சியிலே இனப்பெருக்கம் செய்து அங்கேயே வளர்ந்து அங்கேயே அவை மடிந்து போகின்றன. மனிதன் மேலே ஏறி பார்த்தால்தான் புதிய இன கண்டுபிடிப்புகள் சாத்தியம்.


எட்டாவது கண்டத்தில் மட்டும் 3 கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். இவற்றை ஆராயும் பணிக்கு ‘காட்டுக்கூரை’ என்று ஐக்கிய நாடுகளின் இயற்கை பராமரிப்பு நிறுவனம் பெயரிட்டிருக்கிறது. இந்த காடுகளின் கூரை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த எட்டாவது கண்டத்தில் மனிதனின் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி நம்புகிறது.

No comments:

Post a Comment