நமது பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் எவ்வாறு தோன்றியது மற்றும் அதில் பூமி அதைச் சுற்றி வரும் துணைக் கோளான நிலவு எவ்வாறு தோன்றியது என்பது தொடர்பில் பல கருதுகோள்கள் நிலவி வருகின்றன.
இன்னும் 5 பில்லியன் வருடங்களில் நமது சூரியன் சிவப்பு இராட்சதன் (Red giant star) ஆக உருப்பெறுத்து அதன் பின்னர் உருச்சிறுத்து அழிவை நோக்கிச் செல்லும் என்பது தான் சூரியனின் முடிவு குறித்து இதுவரை வானியலாளர்கள் அறிந்து வைத்துள்ள விளக்கம். தற்போது இதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.
லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோன லிசா. பெண் ஒருவர் புன்னகைப்பது போன்ற இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக பரவியுள்ளன. இந்நிலையில், மோன லிசா ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான தகவலை டாவின்சி மறைத்துள்ளார் என்றும் அதற்கான சான்று மோன லிசா ஓவியத்தில் இருப்பதை கண்டறியலாம் என்றும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பண்டைய காலத்தில் பண்ட மாற்று முறையில் ஆரம்பித்த வர்த்தகம், பின்னர் நாணய வர்த்தகமாக மாறுதல் அடைந்து, நாணயமும் கரன்ஸி நோட்டுக்களாக ஆனபின், அதுவும் முன்னேற்றம் கொண்டு கிரிடிட், டெபிட் கார்ட், டிராவலர்ஸ் செக் மற்றும் SODEXO PASS என்று பல முகம் காட்டி, கடைசியாக 'e trading'-ல் வந்து நின்றது. இதன் அடுத்தக் கட்ட முன்னேற்றம்தான் இந்த பிட் காயின்.
கருப்புப் பெட்டி என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கருப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.

ஒரு விமான விபத்து நடந்தால் விசாரணைப்பிரிவினர் மிகவும் அவசரமாகத் தேடுவது இந்த கருப்புப் பெட்டியைத் தான். விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும் இந்த கருப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறிய மிகவும் பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.