என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Friday, 22 July 2016

உலகமும் சுதந்திர நாடுகளும்! – அறிய வேண்டிய தகவல்கள்.

லக நாடுகள் எத்தனை?

லகத்தில் இன்றைய தேதியில் 196 நாடுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (எனினும் தாய்வான் ஒரு தனி நாடாக பல அனைத்து உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்கா உட்பட்ட நாடுகள் தாய்வானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்த போதும் “வீட்டோ” அதிகாரமுள்ள சீனா, தாய்வான் தனது நாட்டின் ஒரு மாகாணம் என உத்தியோக பூர்வமாக அறிவிப்பைக்கொண்டுள்ளது.)


ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற நாடுகளின் எண்ணிக்கை :

192 நாடுகள் இதுவரை ஐ. நா சபையில் இடம்பெற்றுள்ளன. (1971 ஆம் ஆண்டில் தாய்வான் ஐ. நா சபையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது, எனினும்
சீனாவின் தலையீட்டின் பெயரில் இப்போது சீன குடியரசின் கீழ்
பதிவிலுள்ளது.) இறுதியாக (July) 2011 அன்று தென் சூடான் உறுப்பினராகியது.
வாடிகன் இதுவரை ஐ. நா சபையில் உறுப்பினர் உரிமை கோரவில்லை.


தென் சூடானே இன்றளவில் உலகின் புதிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
9/6/2011ல் சூடானில் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொண்டது.

இன்னமும் காலனித்துவத்தின் (colonies : குடியாட்சியின் கீழ்) கீழ் நாடுகள்
உள்ளனவா?


ஆம், உலகில் 61 நாடுகள் இன்னமும் காலனித்துவத்தின் கீழ் உள்ளன.
ஃப்ரான்ஸ் 16 நாடுகளையும், ஐக்கிய ராச்சியம் 15 நாடுகளையும், அமெரிக்கா 14 நாடுகளையும், ஆஸ்திரேலியா 6 நாடுகளையும், நார்வே 3 நாடுகளையும், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து 2 நாடுகளையும் காலனிக்கு உட்படுத்தியுள்ளன.


அங்கீகாரம் கிட்டாது சுதந்திரப்பிரகடனம் செய்த நாடுகள் எவை?
இதுவரை தனி அரசாட்சிக்கு தகுதிகள் உடைய 10 நாடுகள் சுதந்திரப்பிரகடனம் செய்துள்ளன. எனினும் உலக நாடுகள் சில அவற்றை அங்கீகரிக்க மறுப்பதால். தனி சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளன.

தாய்வான் (1971) : 23 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.





பாலஸ்தீனம் (1988) : 108 நாடுகள் அங்கீகரித்துள்ளது. வீட்டோ அதிகாரமுள்ள
அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை.

பாலஸ்தீனம்
சராவி அரேபிய ஜனனாயக குடுயரசு (1976) : 46 ஐ.நா உறுப்பு நாடுகளாலும் ஆபிரிக்க ஒன்றியத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட போதும், நாட்டின்
பெரும்பகுதி மொரோக்கோ நாட்டின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டுள்ளது.

Sahrawi Arab Democratic Republic
வட சைப்பிரசின் துருக்கிய குடியரசு (1983) : துருக்கியால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


சோமாலிலாந்த் (1991) : சோமாலிய நாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. எந்த
நாடும் அங்கீகரிக்கவில்லை. எனினும் தனியான விமான நிலையம்,
தனி நாணயம், தனி மத்திய வங்கி என ஒரு தனி நாட்டிற்கான அம்சங்களுடன் திகழ்கிறது. நீண்ட கால திடமான திட்டமிடலின் பின்னர் இப்போது தனி உரிமை கோரும் இராச்சியங்களில்
முக்கியமானதொன்றாக விளங்குகிறது.


ரான்ஸ் நிஸ்றியா (1990) : எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தெற்கு ஒசெத்ரியா (1991) : எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.

South Ossetia
நகொர்நோ கரபா (1991) : எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.



அப்காசியா (1991) : எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.

abkhazia

கொசோவா (2008) : 17/02/2008ல் கொசோவா தனது சுதந்திர பிரகடனத்தை செய்தது.


ரஷ்யா,செர்பியா, இலங்கை, இந்தோனேசிய நாடுகள் அங்கீகரிக்க மறுப்புத்தெரிவித்துவருகின்றன.

No comments:

Post a Comment