என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Tuesday 30 June 2015

Mp3 பாடல்கள் உருவாக்கப்படும் விதம்


ஆடியோ தகவல்களை அதுதான் பாடல்களை சுருக்குவதற்கு உதவும் தொழில் நுட்பம் என்ன தெரியுமா? நம் காது கேட்பதில் உள்ள குறைபாடுதான்.. பயந்து விடாதீர்கள் இது கோளாறு இல்லை. ஆனால் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி உருவான தொழில் நுட்பம்தான் MP3

மனித காதுகளின் கேட்கும் சக்தி ஒலியின் தன்மை 2 முதல் 4 ஹெர்ட்ஸ் உள்ளவரை நன்றாக செயல்படுகிறது..ஆனால் இது 2க்கு குறைவாக உள்ளபோது காது அந்த ஒலியை கேட்பதில்லை..சுற்றுப்புறத்தில் அதைவிட அதிகமான ஒலியைக் கேட்க காதுகள் தயாராகி விடுகின்றன. இவ்வாறான காது கேட்கும் சக்தியை ஒலியியல் நிபுணர்கள் perceptual coding என்கின்றனர். இதற்கு எதிரானது wave form encoding. அதில் ஒலியின் அளவும் கேட்கும் அளவும் ஒன்றாக இருக்கும்.அதாவது மனிதனில் உள்ள கோடிங் சிஸ்டத்தில் எந்த ஒலியை கிரகிக்க முடிகிறதோ அதுதான் அனுப்பப்பட்ட தகவலாகவும் கொள்ளப்படுகிறது.

கேட்க முடியாத ஒலி இல்லாத தகவலாக (empty data) கருதப்படுகிறது. இந்த கேட்க முடியாத ஒலியை MP3 நீக்கி விடுகிறது.
முதலில் இந்த தொழில்நுட்பம் என்கோடர் ஒலிய அலைவரிசையாகப் பிரித்து வைத்துக் கொள்கிறது. frequency band அலைவரிசையின் எண்ணிக்கை லேயர் I, II, III க்கு ஏற்றபடி மாற்றுகிறது. இதன் விளைவாக ஒரு frequency band 28 Hertz என்ற அளவில் அமைக்கப்படுகிறது. அதன்பின் MP3 என்கோடர் எந்த ஒலி அலைகளை எல்லாம் மனிதன் கேட்கமுடியாது என்பதைக் கண்டறிந்து அதனையெல்லாம் அனுப்பாமல் வடி கட்டி விடுகிறது.

அடுத்து செயல்படுவதுதான் ஹப்மேன் தொழில்நுட்பம்... இது ஒலி அலைகளில் திரும்ப திரும்ப வரும் அலைகளை அடையாளம் காண்கிறது.( உதாரணமாக வசீகரா என் நெஞ்சினிக்க... என்ற வரிகள் ஆரம்பத்தில் 2 முறை பின்பு முதல் சரணம் முடிந்ததும் ஒரு முறை பின்பு இரண்டாம் சரணம் முடிந்ததும் ஒருமுறை பாடல் முடிகையில் ஒருமுறை என 5 இடங்களில் வரும். ஆனால் இதைக் கண்டறிந்து ஒரு முறை மட்டுமே இந்த வரிகள் பதியப்படும்) இந்த செயல்முறையில் ஒலிஅலைகள் அடையாளம் காணப்பட்டு ,சுருக்கப்பட்டு பின்பு மறைக்கப்பட்டு இறுதியில் பிரேம்களாக மாற்றப்படுகின்றன.ஒவ்வொரு பிரேமிலும் குறிப்பிட்ட அளவில் digital வடிவத்தில் ஒலி அலைகள் தங்குகின்றன. இவையே ஒரு பாடலை MP3க்கு மாற்ற பாடல் ரெடியாகி விடுகிறது.

No comments:

Post a Comment